குழந்தைப் பராமரிப்பு பற்றிய 6 பொதுவான கட்டுக்கதைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

பெற்றோராக ஆகும் போது கிடைக்கும் எதிர்பாராத இணைப்புகளில் ஒன்று தான் நண்பர்கள், குடும்பம் மற்றும் உங்கள் குழந்தையை கொஞ்சும் ஒவ்வொருத்தரும் தரும் முடிவில்லா அறிவுரைகள். அவைகளில் சில உதவியாக இருந்தாலும் கூட பலவற்றை நீங்கள் ஒதுக்கி விடலாம்.

மற்றவர்களின் கருத்துக்களின் படி நடப்பதை விட உங்களுக்கு எது சரியென படுகிறதோ அதை செய்வது தான் புத்திசாலித்தனம். உங்களுக்கு ஏதேனும் தயக்கங்கள் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.

இளைய தலைமுறைக்கு பொதுவான பல குழந்தை பராமரிப்பு சம்பந்தப்பட்ட கட்டுக்கதைகள் கூறி வரப்படுகின்றன. அப்படிப்பட்ட சிலவற்றை தான் பார்க்கப் போகிறோம். இவைகளை படித்து உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் கொஞ்சமாக கொடுக்கலாம்

பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் கொஞ்சமாக கொடுக்கலாம்

பெரியவர்களுக்கு பயனளிக்கும் பல மருந்துகளை கொஞ்சமாக கொடுத்தாலும் கூட அது குழந்தைகளுக்கு ஆபத்தாய் அமையலாம். இருமல் மருந்துகள் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டாலும் கூட 4 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அதை கொடுக்க பரிந்துரைக்கப்படுவதில்லை. இருமல் மருந்துகளால் போராட்டம், கூடுதல் இதயத் துடிப்பு மற்றும் சுவாச அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும். பெரியவர்களுக்கு ஏற்படும் இறுக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனனையை நீக்க சில மருந்துகள் உதவுகிறது. ஆனால் அவைகளை குழந்தைகளும் சிறுவர்களுக்கும் கொடுக்கவே கூடாது. அப்படி கொடுக்கும் பட்சத்தில் வயிற்று போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

பல் முளைக்கும் போது காய்ச்சல் ஏற்படும்

பல் முளைக்கும் போது காய்ச்சல் ஏற்படும்

சில கட்டுக்கதைகளில் இருக்கும் ஆபத்தே பெற்றோர்கள் சில பிரச்சனயை பெரிதாக எடுத்துக் கொள்ளாததே. பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் அது அவர்களுக்கு பல் முளைப்பதால் என சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும் இவை இரண்டிற்கும் அப்படி எந்த ஒரு ஆழமான சம்பந்தமும் இல்லை என பல ஆராய்ச்சிகளும் கூறுகிறது. பல் முளைக்கும் குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சலை அப்படியே விட்டு விட முடியாது. உடனே மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

வீடியோ பார்த்தால் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வார்கள்

வீடியோ பார்த்தால் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வார்கள்

விசேஷமாக தயாரிக்கப்பட்ட சில வீடியோக்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆனால் அந்த பயன்கள் அனைத்தும் 2 மற்றும் அதற்கு மேலான வயதில் தான் கிட்டும். இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பயனை அளிப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் நான்கில் 3 பங்குகள் இந்த வகையான குழந்தைகளின் வீடியோக்கள் தான் அதிகமாக விற்கின்றன. இந்த வீடியோக்களை குழந்தைகள் ஆவலுடன் பார்க்கின்றனர் என நம்பப்படுகிறது. ஆனால் மொழி வளர்ச்சியில் இந்த வீடியோக்கள் தாமதத்தை உண்டாக்குகிறதாம்.

குழந்தைகள் வேகமாக நடப்பது நடைவண்டி பாதுகாப்பானது

குழந்தைகள் வேகமாக நடப்பது நடைவண்டி பாதுகாப்பானது

தங்கள் குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளிக்க பெற்றோர்கள் நடை வண்டி வாங்கி கொடுப்பதுண்டு. இதனை கொண்டு தங்கள் குழந்தைகளை நடக்க உதவுவார்கள். ஆனால் இந்த நடைவண்டி குழந்தை தானாக நடக்கும் திறனை துரிதப்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. மேலும் மேம்படுத்தப்பட்ட அசைவும் அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தும். நடை வண்டியில் நகரும் குழந்தை, பெறோர்கள் அருகில் இருந்தாலும் கூட, படியில் இருந்து தவறி விழலாம். கவனிப்பு கட்டுக்கதையின் பிரச்சனையாக இது அறியப்படுகிறது.

தொட்டில் காப்புகள் பாதுகாப்பானது

தொட்டில் காப்புகள் பாதுகாப்பானது

தொட்டிலில் தலையை மோதி கொண்டு அடி;ப்பட்டு விடும் என்று எண்ணி சில பெற்றோர்கள் தொட்டிலுக்கு காப்புகளை வைப்பார்கள். ஆனால் அடிபடும் அளவுக்கு குழந்தைகள் அவ்வளவு பலத்தை உபயோகிப்பதில்லை. ஆனால் இப்படி காப்புகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். ஒரு வேளை இந்த காப்புகள் மிகவும் உயரமாக இருந்தால் மரணத்தில் கூட முடியலாம்.

காது தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தாய்ப்பால்

காது தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தாய்ப்பால்

குழந்தைகளுக்கு காதுகளில் தொற்று ஏற்பட்டால் அவர்களின் காதில் கொஞ்சம் தாய்ப்பாலை ஊற்ற சிலர் அறிவுறுத்துவார்கள். இது கண்டிப்பாக எந்த பயனையும் அளிப்பதில்லை. மாறாக புதிய தொற்றை தான் உருவாக்கும். தாய்ப்பாலில் உடலுக்கு உதவுகிற எந்த ஒரு பிறபொருளெதிரிகளும் இல்லை. ஆனால் அதில் அதிகளவில் சர்க்கரை உள்ளது. அதில் வளர பாக்டீரியா மிகவும் விரும்பும். தொற்று ஏற்பட்ட இடத்தில் காது மடல்கள் அடைத்து விடுவதால், தொற்று ஏற்பட்ட இடம் வரை தாய்ப்பால் செல்வதில்லை. அதனால் அப்படி ஊற்றும் பாலில் பாக்டீரியா ஈர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Common Baby Care Myths

There are many common baby care myths usually passed to generations. Here's debunking a few common ones. Read this and keep your baby safe.
Story first published: Sunday, September 28, 2014, 13:00 [IST]
Subscribe Newsletter