For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

|

ஆகஸ்ட் 20, 2019 இன்று உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் 1897 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் தான் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என்று அறிவித்தர். இந்த உலக கொசுக்கள் தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மக்களுக்கு மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான்.

World Mosquito Day

முதன் முதலில் உலக கொசுக்கள் தினம் 1879 ஆம் ஆண்டு ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது. பல ஆராய்ச்சிக்கு பின்னர் மலேரியா மக்களுக்கு கொசுக்களின் ஒட்டுண்ணிகள் மூலம் மக்களுக்கு பரவுகிறது என்பதை நிரூபித்தார். இதற்காக 1902ல் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் கொசுக்கள்

பெண் கொசுக்கள்

உலகில் உள்ள கொடிய விலங்குகளில் ஒன்று கொசு தான். இந்த சின்ன சிறிய கொசுக்களினால் மனிதர்கள் பல வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டும் இன்றி சிலர் இறக்கவும் நேருகிறது. பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் உடல்களில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சுகிறது. உண்மையில், பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்கு முன்பும் முட்டைகளை வளர்ப்பதற்க்காகவும் இரத்தத்தை உறிஞ்சுகிறது. ஆண் கொசுக்கள் இரத்தத்தை உறுஞ்சுவதில்லை.

MOST READ: உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா? அப்போ இத செய்யுங்க.

வகைகள்

வகைகள்

அமெரிக்க கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கொசுக்கள் உள்ளன. ஆனால், உலகில் இருக்கும் கொசுக்களிலே மிக மோசமான மூன்று கொசுக்கள் உள்ளன. இந்த மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன. அவை, மலேரியாவைப் பரப்பும் 'அனோபிலஸ்' கொசு, டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு மற்றும் யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலக்ஸ் கொசு ஆகும்.

வெப்பநிலை

வெப்பநிலை

கொசுக்கள் பொதுவாக 80 டிகிரி வெப்பநிலை மட்டுமே விரும்புகிறது. அதனால் தான் குளிர்பனி காலங்களில் கொசுக்கள் குறைந்து விடுகின்றன. சில பெண் கொசுக்கள் மட்டும் முட்டை இடுவதற்காக வெதுவெதுப்பான வெப்பநிலையை தேடி முட்டையிடுகிறது. மற்றும் சில கொசுக்கள் தண்ணீரில் உறைந்து இறந்து விடுகிறது.

மலேரியா

மலேரியா

மலேரியா கொசுக்களால் பரவும் நோயாகும். 2016 ஆம் ஆண்டில் 91 நாடுகளில் 216 மில்லியன் வழக்குகளும் 4,45,000 இறப்புகளும் மலேரியாவால் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது முக்கியமாக வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கிறது. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணிகளால் தான் மலேரியா ஏற்படுகிறது. இந்த அனோபிலிஸ் கொசுக்களில் 40 க்கும் மேற்பட்ட இனக் கொசுக்கள் உள்ளன. அனோபிலீஸின் ஒவ்வொரு இனமும் தனித்துவமான நடத்தைகளைக் கொண்டுள்ளன.

டெங்கு

டெங்கு

டெங்கு இதுவும் கொசுக்களால் ஏற்படும் ஒரு வியாதியாகும். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மோசமான சுகாதார சூழல் காரணமாக டெங்கு ஏற்படுகிறது. டெங்கு பரப்புவது ஏடிஸ் கொசுக்களாகும். இந்த கொசுக்கள் முட்டைகளை இடுவதற்கு ஒரு சிறிய அளவு நீர் மட்டுமே தேவைப்படுகிறது, அதாவது குளங்கள், குட்டைகள், வடிகால்கள், பாட்டில்கள், கேன்கள், டயர்கள் மற்றும் மூடப்படாத தண்ணீர் பானைகள் ஆகியவற்றில் இந்த கொசுக்கள் முட்டைகளை இடுகின்றனர்.

MOST READ: குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போடுறீங்கனு தெரியுமா? பயன்கள் என்ன?

தடுக்கும் வழிகள்

தடுக்கும் வழிகள்

தண்ணீர் குடம் மட்டும் பானைகளை முடிவைக்க வேண்டும். வீட்டினை சுற்றி தண்ணீர் மற்றும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாட்டில்கள், கேன்கள், டயர்கள் இருந்தால் தூக்கி எரிந்து விடுங்கள். அவற்றில் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள் முட்டையிடும். மேலும் தூங்கும் போது கொசுவலை பயன்படுத்துங்கள். ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவது நல்லது. சுத்தமான தண்ணீர் பருகுங்கள் அல்லது கொதிக்க வைத்த தண்ணீர் பருகுவது மிக நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Mosquito Day Date, History, Fact About Mosquitoes

Mosquitoes are one of the deadliest animals in the world. Their ability to carry and spread diseases to humans causes millions of deaths every year. Generally we believe that mosquitoes bite humans because they need to feed on human blood, but this is not true.Actually, female mosquitoes suck blood in order to help with the development of their eggs prior to laying them.
Story first published: Tuesday, August 20, 2019, 16:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more