For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...

இந்தியா உலகத்தை ஆச்சரியத்தப்படுத்த ஒருபோதும் தவறியதில்லை. இந்தியா அதன் தொன்மை, கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றிற்கு மட்டும் புகழ் பெற்றதல்ல, அதன் உணவுகளுக்கும் புகழ் பெற்றது.

|

இந்தியா உலகத்தை ஆச்சரியத்தப்படுத்த ஒருபோதும் தவறியதில்லை. இந்தியா அதன் தொன்மை, கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றிற்கு மட்டும் புகழ் பெற்றதல்ல, அதன் உணவுகளுக்கும் புகழ் பெற்றது. உலகிலேயே அதிக சுவையான உணவுகளை தயாரிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவிற்கு வரும் பல வெளிநாட்டினரும் நமது உணவுகளின் சுவைகளில் மயங்கி விடுகின்றனர்.

Weird Food Habits of Indian People

இந்தியாவில் எவ்வளவு சுவையான உணவுகள் இருக்கிறதோ அதே அளவிற்கு சில விசித்திரமான உணவுப்பழக்கங்களும் இருக்கிறது. இந்த வினோத உணவுப்பழக்கங்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும் கிழக்கு இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இதில் சில உணவுகள் பிறருக்கு அருவருப்பைக் கூட ஏற்படுத்தும். இந்த பதிவில் இந்தியாவில் இருக்கும் சில வினோதமான உணவுப்பழக்கங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சிவப்பு எறும்பு சட்னி

சிவப்பு எறும்பு சட்னி

இந்த உணவு சத்தீஸ்கர் பழங்குடி மக்களால் சாப்பிடப்படுகிறது. இவர்கள் இந்த சட்னியை சாப்ரா என்று அழைக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பழங்குடியினருக்கு சிவப்பு எறும்பு சட்னி அதன் முட்டைகளுடன் இருப்பது மிகவும் சுவையான ஒன்றாக இருக்கிறது.

 நாய் கறி

நாய் கறி

நாகாலாந்தின் பழங்குடி சமூகங்களிலிருந்து மிகவும் பிரபலமான உணவுகளில் நாய் இறைச்சி ஒன்றாகும். நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் நாய் கறி பல்வேறு வகைகளில் சமைக்கப்படுகிறது. இங்கு மற்ற இறைச்சிகளை விட நாய் இறைச்சி விலை அதிகமானதாகும்.

தவளைக் கால்கள்

தவளைக் கால்கள்

சிக்கிமில் மக்கள் தவளைக் கால்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சிக்கிமில் இருக்கும் தவளையின் கால்கள் மிகவும் சுவையானது என்றும் மேலும் இது கால் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. சிக்கிமின் லெப்சா சமூகத்தால் தவளை கால்கள் உண்ணப்படுகின்றன.

MOST READ:உங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா?

குட்டி சுறா

குட்டி சுறா

கோவா பல வெளிநாட்டினார்கள் வந்து செல்லும் ஒரு இடமாகும். இங்கு குட்டி சுறாவை சமைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கோவா கடல் உணவுகளுக்கு மிகவும் புகழ் பெற்றது, குட்டி சுறாக்கள் மிகவும் சிறியவை, இவை கடலின் ஆழத்தில்தான் இருக்கும். இவற்றை பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கோவாவின் பேபி சுறா உணவு கோவாவின் உணவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இதனை பல சாஸ்கள் கொண்டு தயாரிக்கிறார்கள்.

எரி போலு பட்டுப்புழு

எரி போலு பட்டுப்புழு

எரி போலு என்பது அசாமில் பட்டுப்புழுவை வைத்து தயாரிக்கப்படும் அசாம் மாநிலத்தின் கவர்ச்சியான உணவாகக் கருதப்படுகிறது, இது தற்போது மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. பட்டுப்புழுவைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வண்ணமயமான உணவு பலருக்கும் பிடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 வறுத்த நத்தைகள்

வறுத்த நத்தைகள்

ஒடிசா மாநிலம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின மக்கள் வாழும் மாநிலமாக இருக்கிறது. ஒடிசாவின் இயற்கை உணவு பாதுகாப்பானதாகவும், சத்தானதாகவும் நம்பப்படுகிறது. இங்கு மக்கள் நத்தைகளை சமைத்து அதனை ஸ்பெஷல் அரிசி உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

MOST READ:2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

 ஹில்ஸா முட்டை

ஹில்ஸா முட்டை

ஹில்சா அல்லது இலிஷா என்பது மேற்கு வங்க மாநிலத்தில் காணப்படும் ஒரு வகை மீன் மற்றும் இது ஒடிசா மற்றும் ஆந்திர மக்கள் மத்தியில் பிரபலமான உணவாகும். ஹில்ஸா முட்டை கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கொண்டு சமைக்கப்படுகிறது.

 எருமையின் மண்ணீரல்

எருமையின் மண்ணீரல்

இது புனேவில் அதிகளவு மக்களால் சமைக்கப்படும் உணவாகும். தில்லி என்பது அடிப்படையில் மண்ணீரல் மசாலா மற்றும் அதன் இறைச்சி ஆகும். இதில் அதிகளவு இரும்புச்சத்து, புரதம் இருப்பதுடன் குறைந்தளவு கொழுப்பே உள்ளது. தில்லி புனேவில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி ஆகும், புனேவின் கடைத்தெருக்களில் நீங்கள் இதனை அதிகம் பார்க்கலாம்.

 எலிக்கறி

எலிக்கறி

பீகாரின் அனைத்து உணவகங்களிலும் தவறாமல் இடப்பெற்றிருக்கும் ஒரு உணவு எலிக்கறி ஆகும். பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள முஷாரர்கள் எனப்படும் சமூகத்தினர் எலி இறைச்சியை பாட்டல் பாகேரி என்று அழைக்கிறார்கள். இங்கு எலிக்கறி என்பது மிகவும் பிரபலமான உணவாகும்.

MOST READ:இந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா?

பன்றியின் மூளை

பன்றியின் மூளை

மேகாலயாவில் சமைக்கப்படும் டோ க்ளே எனப்படும் உணவு அடிப்படையில் வேகவைத்த பன்றியின் மூளையை வைத்து தயாரிக்கப்படுகிறது. இது உண்மையில் ஒரு பன்றி இறைச்சி உணவாகும், இது வேகவைத்த பன்றியின் மூளையால் அதன் முக்கிய மூலப்பொருளாக காசிஸ், கரோஸ் மற்றும் ஜெயின்டியா பழங்குடியினரால் சமைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி அணில், குரங்குகள், ஆமை, பூனை போன்றவையும் இந்தியா முழுவதும் பல இடங்களில் உண்ணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Food Habits of Indian People

Read to know some weird food habits of Indian people.
Story first published: Monday, January 13, 2020, 11:49 [IST]
Desktop Bottom Promotion