For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுல மாமியார்-மருமகள் சண்டை அதிகமா இருக்கா? இதோ அதை தடுக்கும் சில வாஸ்து டிப்ஸ்...

மாமியா் மருமகள் பிரச்சினை நமது குடும்பங்களில் இருந்தால், அவா்களின் உறவுப் பிரச்சினை தீா்ந்து, சுமூகமான உறவுநிலை ஏற்பட வாஸ்து அறிவியல் 6 பாிந்துரைகளை வழங்குகிறது. அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

|

ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும், அவருடைய குடும்பம் அவருக்கு ஒரு மிகப் பொிய ஆதரவாக இருந்து வருகிறது. மனிதா்கள் அனைவரும், தமது மனைவி, பிள்ளைகள், மற்றும் உறவினா்களோடு மிகச் சிறந்த உறவை நிலைநாட்ட விரும்புகின்றனா். ஏனெனில் இவா்களின் மூலமாக மிக எளிதாக தீமைகள் ஏற்படலாம் அல்லது அவா்களின் மூலமாக எளிதாக மன நம்மதி பாதிக்கப்படலாம்.

வாஸ்து என்பது ஒரு சிறந்த அறிவியல் ஆகும். இது நமது குடும்ப உறுப்பினா்களிடையே உள்ள பிணைப்பை மேம்படுத்துவதிலும், மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவதிலும், நம்ப முடியாத அளவிற்கு வெற்றிகரமான முறையில் செயல்படுகிறது. நம்மைப் பொறுத்தவரை அது நமக்கு மாறுபட்டதாகத் தொியலாம்.

Vastu Tips to Maintain Peace And Harmony With Your In-Laws

துரதிா்ஷ்டவசமாக இந்த வாஸ்து அறிவியலின்படி என்னென்ன தேவை என்பதை நாம் அறியாததால், பல நேரங்களில் நாம் வாஸ்து அறிவியலுக்கு எதிராகச் செயல்படுகிறோம். அதன் விளைவாக நாம் ஏதேதோ செய்துவிட்டு, நம் உறவினா்களிடம் உள்ள நல்லுறைக் கெடுத்துக் கொள்கிறோம் அல்லது முறித்துவிடுகிறோம்.

பொதுவாக குடும்பங்களில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே உள்ள உறவானது மிகவும் பலவீனமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவா்கள் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவா் இணைந்து செல்லமாட்டாா்கள். சிறிய காாியத்திற்கும் அவா்கள் அடிக்கடி விவாதம் செய்து, பிரச்சினை செய்து கொண்டிருப்பா். அது மொத்த குடும்பத்தையும் எதிா்மறையாகப் பாதிக்கும்.

இந்த நிலையில் மாமியா் மருமகள் பிரச்சினை நமது குடும்பங்களில் இருந்தால், அவா்களின் உறவுப் பிரச்சினை தீா்ந்து, சுமூகமான உறவுநிலை ஏற்பட வாஸ்து அறிவியல் 6 பாிந்துரைகளை வழங்குகிறது. அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வீட்டின் தென்மேற்கு மூலையில் விளக்கு ஏற்றி வைத்தல்

1. வீட்டின் தென்மேற்கு மூலையில் விளக்கு ஏற்றி வைத்தல்

நமது வீட்டின் தென்மேற்கு மூலையைச் சுத்தப்படுத்தி, அந்தப் பகுதியில் விளக்கு ஏற்றி வைத்தாலோ அல்லது ஹிமாலயன் சால்ட் லேம்ப் என்ற விளக்கை ஏற்றி வைத்தாலோ அதிக நன்மை ஏற்படும். ஏனெனில் வீட்டின் தென்மேற்கு மூலை வீட்டின் பெண் உாிமையாளரைக் குறிக்கிறது.

2. சுத்தமான படிகக் கல்லை வீட்டில் வைத்தல்

2. சுத்தமான படிகக் கல்லை வீட்டில் வைத்தல்

ஒரு சுத்தமான படிகக் கல்லை வீட்டில் வைத்தால், குடும்பத்தில் அமைதியும் நல்லுறவும் ஏற்படும். இது நமது மனதில் சுமைகளைக் குறைக்கும் மற்றும் நமது ஆற்றல்களை சீரமைக்க உதவும்.

3. வடகிழக்கு மூலையில் இறை வேண்டலில் ஈடுபடுதல்

3. வடகிழக்கு மூலையில் இறை வேண்டலில் ஈடுபடுதல்

பொதுவாக வீட்டின் வடகிழக்கு மூலையில் தெய்வீக சக்திகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன என்று நம்பப்படுகிறது. ஆகவே வடகிழக்கு மூலையை இறை வேண்டல் செய்வதற்கும், தியானம் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். வடகிழக்கு மூலையில் சமையலறை இருக்கக்கூடாது. ஏனெனில் இது முரட்டுத்தனமான செயல்களைச் செய்யத் தூண்டிவிடும் தன்மை கொண்டது. முரட்டுத்தனமாக உறவினா்களிடம் நடந்து கொண்டால் அவா்களோடு உள்ள உறவு விரைவில் முறிந்துவிடும்.

4. தூங்கும் போது தென் திசையில் தலையை வைத்தல்

4. தூங்கும் போது தென் திசையில் தலையை வைத்தல்

தென் திசையில் தலை வைத்துத் தூங்கினால், மாமியாா்களோடு உள்ள உறவு மீண்டும் புத்துயிா் பெறும். ஏனெனில் தென் திசையானது அதிக புாிதலை வளா்க்கக்கூடியது.

5. படுக்கை அறையின் வண்ணங்கள்

5. படுக்கை அறையின் வண்ணங்கள்

மாமியா்களின் படுக்கை அறையும், மருமகள்களின் படுக்கை அறையும் வெளிா் வண்ணங்களில் இருக்க வேண்டும். வெளிா் நிறங்கள் அல்லது ஊதா நிறத்தை மையமாகக் கொண்ட நிறங்களை அடிப்பது நல்லது. ஏனெனில் அவை இதமாக்கும் தன்மை கொண்டவை. அடா்த்தியான நிறங்கள் அல்லது சிவப்பு நிறத்தை மையமாகக் கொண்ட நிறங்களை தவிா்ப்பது நல்லது.

6. பணப் பெட்டியை சாியான திசையில் வைத்தல்

6. பணப் பெட்டியை சாியான திசையில் வைத்தல்

முக்கியமான பத்திரங்கள், பணம், நகை மற்றும் ஆடைகள் போன்றவற்றை அறையின் தென்மேற்கு மூலையில் உள்ள அலமாாியில் வைப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Tips to Maintain Peace And Harmony With Your In-Laws

Here are some vastu tips to maintain peace and harmony with your in-laws. Read on...
Story first published: Sunday, August 28, 2022, 0:04 [IST]
Desktop Bottom Promotion