For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா?

|

நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும் மனோ காரகனான சந்திரனை நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது.

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும். மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.

MOST READ: 2020 ஆம் ஆண்டின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கான ராசி பலன்கள்!

தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும்,தொழில்,வியாபாரம்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம். வாழ்வில் செல்வ வளமும்,அதிர்ஷ்டமும் பெருகும். அழகும்,மன அமைதியும் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்வ வசீகரம்

செல்வ வசீகரம்

வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கிறதாம். இடது ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கின்றேன் என அடிக்கடி நினைக்க வேண்டும். பொதுவாக நமது வலது மூளை அதிக பாசிட்டிவாக இருக்கும் போது நாம் நினைக்கும் காரியங்கள் உண்மையாகவே நடக்கிறதாம். அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக பண புழக்கம் இருக்கும்.வாழ்வில் மென்மேலும் உயர முடியும் இது போன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

கோபத்தை குறைக்கும்

கோபத்தை குறைக்கும்

கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கோபத்தைக் குறைத்து,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மூட்டு வலி,மனநிலை பாதிப்பு,மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.

வெள்ளி பாத்திரங்கள்

வெள்ளி பாத்திரங்கள்

வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும் முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.

செல்வம் பெருக இதை செய்யுங்க

செல்வம் பெருக இதை செய்யுங்க

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

பௌர்ணமி பூஜை

பௌர்ணமி பூஜை

ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே சாப்பிட வேண்டும்.

லட்சுமியின் அருள்

லட்சுமியின் அருள்

சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். அழுகை ஒலி, சுத்தமில்லாத வீடுகளில் லட்சுமி வாசம் செய்யமாட்டாள்.

அன்னதானம்

அன்னதானம்

நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு. அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு அன்னதானம் என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Silver Ring Wear In Index Finger

Wearing Silver ring in your index finger can do wonders in your life, Managing anger reducing tissue related degradation.
Story first published: Friday, December 20, 2019, 16:37 [IST]