Just In
- 8 hrs ago
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- 9 hrs ago
உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா?
- 10 hrs ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
- 15 hrs ago
இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…
Don't Miss
- Automobiles
இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!
- Sports
பயிற்சியெல்லாம் சிறப்பா துவக்க போறாரு... ஆனாலும் ஐபிஎல்லுல பங்கேக்கறது பத்தி யோசிக்கலையாம்!
- Movies
தளபதி65 படத்தில்நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- News
தமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை!
- Finance
261 வருட பழமையான ஹாம்லெயஸ் நிறுவனத்தை காப்பாற்றும் முகேஷ் அம்பானி..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலித்து திருமணம் செய்து கொண்ட அரச குடும்பங்களின் காதல் கதைகள்!
அரச குடும்பத்தவர்கள் என்றாலே, அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை முறையும், அவர்கள் கொண்டிருக்கும் எண்ணற்ற அதிகாரங்களுமே நமது ஞாபகத்திற்கு வரும். ஆனால் நாம் நினைப்பது போல் அல்லாமல் அரச குடும்பங்களுக்கு என்று கட்டுப்பாடான சட்டதிட்டங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் உள்ளன. அவற்றை அரச குடும்பத்து உறுப்பினர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் பார்வைக்கு அவை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கலாம்.
ஆனால் காதல் என்று வந்துவிட்டால் அரச குடும்பத்தினரும் சாதாரண மனிதர்களாகிவிடுகின்றனர். காதலுக்காக தங்களின் அரச குடும்பத்துச் சட்டதிட்டங்களைக் கைவிட்டு தங்கள் மனதின் குரலுக்கு செவி கொடுத்துவிடுகின்றனர். எதிர்பாராத சந்திப்பில் காதல், யதார்த்தமான காதல், முதல் பார்வையில் காதல், போன்ற காதல் கதைகள் அரச குடும்பத்தினருடைய வாழ்வில் இயல்பாகவே இருந்திருக்கின்றன.
MOST READ: கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
எதிர்பாராத சந்திப்பில் காதல் கொண்டு, பின்னர் திருமணம் முடித்துக் கொண்ட ஏழு அரச குடும்பத்து காதல் கதைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

அரசர் எட்டாம் எட்வர்ட் மற்றும் வாலிஸ் சிம்சன்
இங்கிலாந்து அரசர் எட்டாம் எட்வர்ட் மற்றும் வாலிஸ் சிம்சன் ஆகியோரின் காதல் கதை மிகவும் பிரபலமாகவில்லை என்றாலும், அது மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஒன்றாகும். வாலிஸ் சிம்சன் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, விவாகரத்துப் பெற்றிருந்த அமெரிக்க பெண்மணி ஆவார். அரசர் எட்டாம் எட்வர்டுக்கு அடுத்து வந்த அரசரின் மனைவியின் மூலம், வாலிஸ் சிம்சன் எட்டாம் எட்வர்டுக்கு அறிமுகமானார். எதிர்பாரா இந்த அறிமுகத்தில் தங்கள் இதயங்களை பரிமாறிக் கொண்ட இவர்கள் நாளடைவில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இறுதியில் தங்களது அரச குடும்பத்து சட்டதிட்டங்கள் ஏற்றுக் கொள்ளாததால், அரசர் எட்டாம் எட்வர்ட் தனது அரச பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வாலிஸ் சிம்சனைத் திருமணம் செய்து கொண்டார்.

இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா
இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஆகியோரின் காதல் கதை மிகவும் பிரபலமான ஒன்று. சார்லஸ், டயானாவின் மூத்த சகோதரியான சாரா ஸ்பென்சரோடு காதலில் இருந்த போது, டயானாவை முதன் முதலாக சந்தித்தார். அப்போதைய சந்திப்பு அவர்களுக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விருந்தில் சார்லஸ் எதிர்பாராமல் டயானாவை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பில் இருவரும் காதல் கொண்டு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். பின் 1981 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும் 1992 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர்.

சுவீடன் அரசர் பதினாராம் கார்ல் குஸ்டாஃப் மற்றும் சில்வியா சோமர்லாத்
1972 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும் மற்றும் தொகுப்பாளராகவும் சில்வியா பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அரசர் பதினாராம் கார்ல் குஸ்டாஃபை சந்திக்க நேர்ந்தது. முதல் பார்வையிலேயே இருவரும் காதல் கொண்டனர். பின் 1976 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்பெயின் அரசர் ஆறாம் ஃபிலிப் மற்றும் அரசி லெட்டிசியா
அரசி லெட்டிசியா, அரசர் ஆறாம் ஃபிலிப்பைத் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒரு பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். ஃபிலிப்பைத் திருமணம் செய்த பின்பு ஸ்பெயின் நாட்டின் அரசியாக மகுடம் சூடினார். திருமணத்திற்கு முன்பு அவர் தனது பத்திரக்கையாளர் பணியில் இருந்த போது கலிசியாவின் கடற்கரையோரம் படர்ந்திருந்த எண்ணெய் பரவலைப் பற்றி தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அரசர் ஆறாம் ஃபிலிப் அந்த பகுதியைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளித்து வந்தார். அப்போது இருவரும் சந்திக்க நேர்ந்தது. பின் இருவரும் காதல் கொண்டு 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

டென்மார்க் இளவரசர் ஃப்ரட்ரிக் மற்றும் மேரி டோனால்ட்சன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிக்க வந்த ஃப்ரட்ரிக் ஒரு கேளிக்கைக் கூடத்தில் (பப்) மேரி டோனால்ட்சனை முதன் முதலாக சந்தித்தார். பின் இருவரும் காதல் கொண்டு 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் சுவீடன் இளவரசி சோஃபியா
திருமணத்திற்கு முன்பு இளவரசி சோஃபியா ஒரு கவர்ச்சிகரமான மாடலாகவும், தொலைக்காட்சி போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளராகவும் இருந்தார். அப்போது ஒருமுறை தங்கள் நண்பர்கள் அளித்த மதிய விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த இளவரசர் கார்ல் மற்றும் இளவரசி சோஃபியா ஆகிய இருவரும் முதன் முறையாக சந்திக்க நேர்ந்தது. அந்த முதல் சந்திப்பே அவர்களுக்குள் காதலை விதைத்தது.

அப்துல்லா பின் அல்-ஹூசைன் மற்றும் ஜோர்டன் அரசி ராணியா
ஜோர்டன் நாட்டின் தலைநகரான அம்மானில் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்காக ராணியா பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜோர்டன் நாட்டு அரசரின் சகோதரி ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்தில் அப்துல்லாவும் ராணியாவும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பில் இருவரும் காதல் கொண்டனர். பின் இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் நிச்சயம் செய்து கொண்டு, திருமணம் செய்து கொண்டனர்.