For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருத்துவ ஜோதிடம்: தாமிர காப்பு கைகளில் போட்டால் கிடைக்கும் பலன்கள்!

|

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாய் கிரகங்கள் பலமாக இருத்தல் கோபம் அதிமாக வரும், ரத்த அழுத்தம் தைராய்டு, தோலில் உள்ள மெலனின் மாறுபாடு, ரத்த அழுத்தம் மற்றும் கண் குறைபாடு ஏற்படும். இந்த தாமிர செயல்பாட்டை பல உலக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். தாமிர குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக செப்பு பத்திர நீரை குடிக்கலாம், தாமிரத்தினால் செய்யப்பட்ட காப்பு பயன்படுத்தவேண்டும்.

Remedies For Weak Afflicted Sun In Astrology

மனிதனுக்கு பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். சூரியன் பலமற்று இருந்தால் எலும்புகள் பாதிக்கும். இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் வரும், நோய்கள் ஏற்படும். சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் அவர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தையுடன் இணக்கமான உறவு இருக்காது.

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

ஜாதகத்தில் சூரியன் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் பல நன்மைகளும் உண்டாகும். சூரியன் யோகம் ஒருவரை உலகமே திரும்பி பார்க்க வைக்கும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். மன தைரியம், உடல் வலிமை, நோயைத் தாங்கும் சக்தி வந்து சேரும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நீச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். அப்பா இல்லாமல் இருக்கலாம் உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்புக்காப்பு

செம்புக்காப்பு

தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது உடலின் அத்தியாவசியமாக உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். உலர் பருப்புகளிலும், மீன் உணவுகளிலும் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சூரியனால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளில் செம்பு காப்பு அணிந்தால் நன்மைகள் கிடைக்கும். நமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் நமது இணைப்பு திசுக்களுக்கு மட்டுமின்றி நமது எலும்புகள் மற்றும் தோலின் கட்டமைப்பிற்கும் உதவுகிறது. வயதாவதை தாமதப்படுத்துவதற்கும்சருமத்தில் சுருக்கங்களை குறைப்பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.

பாக்டீரியா கொல்லி

பாக்டீரியா கொல்லி

செம்புக்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது. நமது முன்னோர்கள் காலத்திலே காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆன்டி பாக்டீரியாவாக செயல்படும் இது உடலில் இருக்கும் 99 சதவீத பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கிறது. ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.

மூட்டு வலி நீங்கும்

மூட்டு வலி நீங்கும்

இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன் மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செம்பு காப்பு அணிவதன் மூலம் எலும்பு தேய்மானம் அடைவது தடுக்கப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும், இதனால் நமது உடல் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு ஆகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நரம்பு நோய்கள் நீங்கும்

நரம்பு நோய்கள் நீங்கும்

உடலில் தாமிர குறைபாடு என்பது உயர் இரத்த அழுத்தத்திற்கும், கொழுப்பிற்கும் காரணமாக அமைகிறது . ஆய்வுகளின் படி தாமிர குறைபாடு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிகளவு தாமிரமும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே மிதமான அளவில் தாமிரம் கிடைக்க வேண்டும். இதே போல சமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அல்சைமர் நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்

ஆதித்ய ஹிருதயம்

ஆதித்ய ஹிருதயம்

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டவர்கள், பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்று அமர்ந்திருப்பவர்கள் ஆதித்ய ஹிருதயம் படிக்கலாம். தினசரி காலை மாலை சூரிய உதயம், அஸ்தமன நேரத்தில் சூரிய காயத்ரி மந்திரம் படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies For Weak Afflicted Sun In Astrology

According to Vedic Astrology, these are very easy Remedies for Sun Planet which can be performed at home. This Sun (Surya) remedies will help reduce bad effects of malefic or bad sun during its Mahadasha or Antardasha.Lets talk about the Planet Sun, the planet which is responsible for giving energy.
Story first published: Monday, November 25, 2019, 15:32 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more