For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தப்பித்தவறியும் புத்தாண்டு அன்னிக்கு இதெல்லாம் செஞ்சுடாதீங்க.....

புத்தாண்டு நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு பலவிதமான சுவாரஸ்யமான திட்டங்களை பலரும் தீட்டுவர். ஆனால் புத்தாண்டு தினத்தன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று மனதில் கொள்ள வேண்டியவைகளும் உள்ளன.

|

2020 புத்தாண்டில் காலடியை எடுத்து வைக்கப் போவதால் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்போம். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், ஆண்டின் முதல் நாளன்று ஒருசில தீர்மானங்களை எடுக்க உலகம் முழுவதும் பலரும் மும்முரமாக இருப்பர். புத்தாண்டு நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு பலவிதமான சுவாரஸ்யமான திட்டங்களை பலரும் தீட்டுவர்.

ஆனால் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சொல்லப்போனால் அவை மிகவும் பிரபலமான புத்தாண்டு மூடநம்பிக்கைகள் ஆகும். இப்போது அந்த மூடநம்பிக்கைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

புத்தாண்டின் முதல் நாளன்று தட்டைப்பயறு மற்றும் கீரைகளை பலர் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால், இவற்றை உண்பதன் மூலம் அந்த வருடத்தில் அதிர்ஷ்டம் கொட்டும் மற்றும் வீட்டின் நிதி நிலைமை மேம்படும். வீட்டின் செழிப்புக்காக கீரைகளுடன் பட்டாணி சாப்பிட வேண்டும். இதில் பட்டாணி நல்ல அதிர்ஷ்டத்தையும், கீரைகள் பணத்தையும் குறிக்கும்.

#2

#2

புத்தாண்டு அன்று வீட்டில் உள்ள குப்பைகளையோ அல்லது உணவையோ அல்லது வேறு எந்த பொருளையோ தூக்கி எறியக்கூடாது. எதை தூக்கி எறிவதாக இருந்தாலும், புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள் அல்லது புத்தாண்டு தினத்தின் மறுநாள் தூக்கி எறியுங்கள். ஒருவேளை தூக்கி எறிந்தால், வீட்டில் செல்வம் நிலைத்தில்லாமல், செலவு அதிகமாக இருக்கும் என்ற ஓர் நம்பிக்கை உள்ளது.

#3

#3

புத்தாண்டு அன்று யாரிடமும் கடன் வாங்கவோ அல்லது பணத்தைக் கொடுக்கவோ கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால், வருடம் முழுவதும் உங்கள் நிதி நிலைமை இப்படி தான் இருக்கும். எனவே இந்நாளில் உங்கள் பர்ஸில் பணத்தை முழுமையாக நிரப்பி வைத்திருங்கள். இதனால் வருடம் முழுவதும் பணம் உங்கள் பர்ஸில் நிரம்பி இருக்கும்.

#4

#4

புத்தாண்டு தினத்தின் போது எக்காரணம் கொண்டும் அழக் கூடாது. இதனால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சியை இழந்து இருக்கக்கூடும். எனவே நீங்கள் வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்க விரும்பினால், ஆண்டின் முதல் நாளில் அழாதீர்கள்.

#5

#5

புத்தாண்டு அன்று துணியை துவைக்கக்கூடாது. வீட்டில் அழுக்குத் துணிகள் இருந்தால், ஜனவரி 2 ஆம் நாள் துவையுங்கள். உலகின் சில பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளன்று பாத்திரம் கூட கழுவமாட்டார்களாம்.

#6

#6

வீட்டில் உள்ள அலமாரியை காலியாக வைத்திருக்கக்கூடாது. எனவே உங்கள் வீட்டில் உள்ள அலமாரி காலியாக இருந்தால், புத்தாண்டின் முதல் நாளன்றே ஏதாவது பொருளால் நிரப்புங்கள். இல்லாவிட்டால் வருடம் முழுவதும் அலமாரி காலியாக இருப்பது போன்றே உங்கள் வாழ்வும் இருக்கும் என்று சில மக்கள் நம்புகின்றனர்.

 #7

#7

புத்தாண்டு பிறக்கும் தினத்தில் மட்டுமின்றி, முந்தைய நாளில் இருந்தே வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருங்கள். இதனால் முந்தைய வருடம் வீட்டில் புகுந்த துர்சக்திகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

#8

#8

எதையும் உடைக்காதீர்கள். முக்கியமாக கண்ணாடியை தப்பித்தவறியும் நழுவ விட்டு உடைத்து விடாதீர்கள். கண்ணாடியை மட்டுமின்று வேறு எந்த பொருளையும் உடைத்துவிடாதீர்கள். இதனால் வீட்டில் துரதிர்ஷ்டம் தான் குடிப்புகும்.

#9

#9

மிகவும் பிரபலமான மற்றும் உண்மையான ஓர் மூடநம்பிக்கை தான் இது. அது என்னவெனில், புத்தாண்டு தினத்தின் போது யார் முதலில் உங்கள் வீட்டிற்கு வருகிறார்களோ, அவர்களைப் போன்று உங்களுக்கு அந்த ஆண்டு இருக்கும் என்பது. குறிப்பாக வீட்டிற்கு வருபவர் உயரமாக, மாநிறமாக மற்றும் நன்கு அழகாக காட்சியளிக்க வேண்டும். இதனால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையுமாம்.

#10

#10

புத்தாண்டு பிறந்த நடுராத்திரியில் உங்கள் துணைக்கு முத்தம் கொடுங்கள். இதன் மூலம், அந்த வருடம் முழுவதும் நல்ல அன்புடனும் பிணைப்புடனும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஒருவேளை நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் செல்ல பிராணிக்கு முத்தம் கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Year 2020: Things To Avoid Doing On New Year's Day

There are only a few days left for 2019 to end and it is quite obvious that you will be extremely excited to welcome a new year. But do you know there are certain things that you must keep in your mind while celebrating new year. Here we listed some new year superstitions. Read on...
Story first published: Friday, December 27, 2019, 15:35 [IST]
Desktop Bottom Promotion