Just In
- 9 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 10 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 12 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- 13 hrs ago
நீங்க உங்க குழந்தைங்கள சரியாத்தான் வளர்க்குறீங்களா? இத படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரிஷபம் செல்லும் செவ்வாயால் 2 மாசத்துக்கு இந்த 5 ராசிக்கு மோசமா இருக்கப் போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாய் மேஷ ராசியில் இருந்து வெளியேறி, ரிஷப ராசிக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 05:02 மணிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி. அதே சமயம் செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் "கடவுளின் தளபதி" என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை செவ்வாயின் நட்பு கிரகங்களாகும். செவ்வாய் ஒரு சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகம் மற்றும் இது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாக காரணமாகிறது. இத்தகைய செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்கும் எம்மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் இடம் பெயர்கிறார். எனவே இக்காலத்தில் பேசும் போது வார்த்தைகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் தேவையற்ற வாதங்களையும், மோதல்களையும் தடுக்க உதவும். செவ்வாயின் இந்நிலையால் உங்கள் தாயின் ஆரோக்கியம் குறையலாம். எனவே அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் இக்காலத்தில் சொத்து விற்பனை தொடர்பான விஷயங்கள், கொள்முதல் அல்லது கட்டுமானம் போன்றவை தாமதமாகும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் உங்கள் வளங்களை சரியாக பயன்படுத்தவும். இது நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க உதவும். இக்காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். அதே சமயம் உங்கள் மதிப்பை மற்றவர்களுக்கு காட்ட சில வாக்குவாதங்களில் ஈடுபடலாம். மேலும் இக்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். திருமணமாகாதவர்கள், தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் புதிய உறவைத் தொடங்கலாம். திருமணமானவர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் மாமியாரிடம் இருந்து முழு ஆதரவையும் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். உங்களின் போட்டி குணம் பணிபுரியும் தற்போதைய நிறுவனத்தில் தொழில்முறை வளர்ச்சி மற்றும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக சலுகை சம்பளத்துடன் வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறலாம். வணிக கூட்டாண்மை செய்பவர்கள் இந்த காலத்தில் ஆதாயங்களையும் லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது. இந்த காலம் நிலம் அல்லது சொத்து விஷயங்களில் முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமானது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவது சிறந்த ஒப்பந்தங்களையும் லாபத்தையும் பெற உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 6 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 12 ஆது வீட்டிற்கு செல்கிறார். இம்மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு அவர்கள் விரும்பிய விளைவுகளை பெற வைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இக்காலம் சாதகமானதாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புக்களின் செல்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மையால் சிரமப்படுவீர்கள். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். எனவே இக்காலத்தில் முயற்சி செய்து ஓய்வெடுத்து சரியான தூக்கத்தைப் பெறவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த கால பிரச்சனைகளால் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் வரக்கூடும். அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இளைய உடன்பிறப்புகள் உங்களுக்காக அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பார்கள். தொழில் ரீதியாக, புதிய விஷயங்களில் முதலீடு செய்ய ஒரு நல்ல நேரம் அல்ல. இக்காலத்தில் எதிரிகளுடன் நேரடியாக மோதுவதைத் தவிர்க்கவும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 5 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரப்போகிறது. இக்காலத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பணியிடத்தில் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மற்றவர்களுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவீர்கள். இது உங்கள் துணை அதிகாரிகள் மற்றும் மூத்தவர்களிடையே ஒரு நல்ல இமேஜைப் பெற உதவும். இந்த காலத்தில் வணிகர்கள் பெரிய வணிகத் திட்டங்களையும், திடீரென தங்கள் வணிக இருப்புப் பணத்தையும் பெற வாய்ப்புள்ளது. பயணங்களை மேற்கொள்வது மிகவும் சாதகமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை, சில சமயங்களில் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தும் ஈகோ குணம் உறவுகளை அழிக்கக்கூடும். எனவே அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் நிலையானதாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியைக் கொண்டுவரும். உங்கள் இயல்பில் நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், லட்சியத்துடனும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஆண்டின் எந்தப் பகுதியையும் விட இந்த காலத்தில் நீங்கள் விரும்பிய முடிவுகளை அடைய அதிக வாய்ப்புள்ளது. உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க அல்லது சுயதொழில் செய்ய இது ஒரு சாதகமான காலம். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி செழிப்பும் மேம்படும். இந்த காலகட்டத்தில் மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் இருக்கும். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உயர்அதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சிலர் சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை தொடர்பான முந்தைய எந்தவொரு விஷயமும் இந்த காலகட்டத்தில் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்கார மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் அவசரம் மற்றும் ஆக்கிரமிப்பைத் தவிர்க்கவும்.

கன்னி
கன்னி ராசியின் 3 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதன் விளைவாக, திடீர் நன்மைகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் விரும்பிய முடிவுகளைத் தரும். நீங்கள் அந்தந்த தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இருப்பினும், சில நேரங்களில் இந்த நிலையில் இருக்கும் செவ்வாயால் உங்கள் நம்பிக்கைகள் குறித்து அதிக கடுமையான கருத்துக்களைப் பெறக்கூடும். இது எளிதில் சண்டைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த காலத்தில் சிறந்த முடிவுகளைப் பெற உங்கள் போக்கில் செயல்படுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் தந்தையுடனான சில கருத்து வேறுபாடுகள் வீட்டில் கசப்பான சூழலை உருவாக்கலாம். ஆனால் அவரிடமிருந்து வரும் எந்தவொரு ஆலோசனையும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள். இக்காலத்தில் உங்கள் உடைமைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே பயணங்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் அது அதிக செலவு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் திடீர் ஆதாயங்கள் கிட்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலத்தில் உங்கள் துணையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையே குறிப்பாக நிதி விஷயத்தில் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். அமைதியாக இருங்கள் இல்லாவிட்டால் பிரச்சனை தீவிரமாகிவிடும். தொழில் ரீதியாக, உங்கள் ரகசிய எதிரிகள் உங்களை முயற்சி செய்து துன்புறுத்தலாம். எனவே இக்காலத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வகையான அலுவலக வதந்திகளிலும் சிக்காதீர்கள். யாரையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டாம். இல்லையெனில், நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலம் வேலைகளை மாற்ற உங்களை ஊக்குவிக்கும். ஆனால் அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் வணிக கூட்டாளர்களுடன் தெளிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இது சிறந்த காலம். இது வியாபாரத்தில் தேவையற்ற மோதல்கள் மற்றும் தவறான புரிதல்களைத் தவிர்க்க உங்களுக்கு உதவும். இந்த காலகட்டத்தில் திடீர் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு உடல் பிரச்சனையாக இருந்தாலும், அதை அலட்சியமாக இருக்காதீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருங்கள். மொத்தத்தில், இந்த காலம் கலவையான மற்றும் சாதாரணமான காலமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். திருமணமாகாதவர்கள், தங்கள் துணையை கண்டுபிடிக்கக்கூடும். மறுமணம் செய்ய விரும்புவோர், இக்காலத்தில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். தொழிலைப் பொறுத்தவரை, நிலுவையில் உள்ள பணிகள் சிறப்பாக முடிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் வறுத்த மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில், அடிவயிற்றுப் பகுதி தொடர்பான சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இது ஆரோக்கியத்திற்கு சாதகமான முடிவுகளைத் தரும்.

தனுசு
தனுசு ராசியின் 5 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இக்காலத்தில் தடைகளை தைரியமாக கையாள்வீர்கள். உங்கள் எதிரிகளிடம் ஆதிக்கம் செலுத்தி, அவர்களை எளிதி கட்டுப்படுத்துவீர்கள். இக்காலத்தில் பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் சில மோதல்கள் ஏற்படலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய துறைகளில் வேலைவாய்ப்பு கிட்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் செலவுகளை செய்ய வேண்டியிருக்கலாம். எனவே வருமானத்திற்கும், செலவுகளுக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால், நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்பு சக்தி குறையக்கூடும். இதனால் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்படலாம். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது, தியானம், யோகா போன்றவற்றை செய்ய முயலுங்கள். இது ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் வழக்கத்தை விட அதிகமாக கவனம் செலுத்தினால், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம்.

மகரம்
மகர ராசியின் 4 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் குழந்தைகள் மூலம் லாபத்தைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. தொழிலைப் பொறுத்தவரை, நீங்கள் நல்ல நிதி மற்றும் பண பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் சொத்தை வாங்க அல்லது விற்க திட்டமிட்டிருந்தால், இது மிகவும் உகந்த காலமாக இருக்கும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் நீங்கள் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் இருப்பீர்கள். செவ்வாயின் நிலை உங்களின் அணுகுமுறையில் ஒரு கடினமான மற்றும் அவசரத்தை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக வேலையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கும்பம்
கும்ப ராசியின் 3 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலம் உங்கள் தாய்க்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தாய்வழி உறவினர்களிடம் இருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வாகனங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். இந்த காலகட்டத்தில் விவகாரங்களை ஆளவும், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தவும் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்கலாம். இது வீட்டுச் சூழலில் ஒற்றுமையைக் குலைக்கும் சில மோதல்களை உருவாக்கக்கூடும். கடந்த கால பிரச்சனைகள் இக்காலத்தில் மீண்டும் தோன்றக்கூடும். இது வீட்டுச் சூழலில் எதிர்மறையை அதிகரிக்கும். எனவே கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்தில் கவனத்தை செலுத்துங்கள். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் சகாக்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கப் போகிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு நல்ல காலம், ஆனால் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். திறமை மற்றும் திறனுடன் செயல்படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பொருள் வசதிகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகள் அழகான வெகுமதிகளைத் தரும். மேலும் இது உங்கள் சுய நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த காலம் தெளிவு நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆற்றலும், சகிப்புத்தன்மையும் அதிகமாக இருக்கும். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து மீள்வீர்கள். உங்கள் பொழுதுபோக்குகள், ஆசைகள் அல்லது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பயணங்களை நிறைவேற்றவும் இந்த காலம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மனக்கிளர்ச்சி அல்லது பொறுமையற்றவராக இருப்பதால், சாலையில் கவனமாக இருங்கள். முக்கியமாக வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உடன்பிறப்புகளுடன் சில மோதல்கள் ஏற்படக்கூடும். அவர்களுடன் பழகும் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.