For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மன்னரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது... அவர் யார் தெரியுமா?

தென்னிந்தியாவை சில குறிப்பிட்ட வம்சத்தை சேர்ந்தவர்களே பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்தனர். ஆனால் வடஇந்தியாவை பல வம்சத்தினர் குறிப்பிட்ட ஆண்டுகள் ஆண்டு வந்தனர்.

|

இந்தியாவின் வரலாறு என்பது பல வித்தியாசமான பக்கங்களைக் கொண்டது. பரந்து விரிந்து இந்திய நிலப்பரப்பை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு வம்சாவளியை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இதில் பல மோசமான மன்னர்களும் இருந்தார்கள், சிறப்பான மன்னர்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே இந்திய வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஆனால் எந்த மாதிரியான இடம் என்பதுதான் இங்கு வித்தியாசம்.

interesting stories about Maharaja Ranjit Singh

தென்னிந்தியாவை சில குறிப்பிட்ட வம்சத்தை சேர்ந்தவர்களே பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்தனர். ஆனால் வடஇந்தியாவை பல வம்சத்தினர் குறிப்பிட்ட ஆண்டுகள் ஆண்டு வந்தனர். அதில் முக்கியமான ஒரு வம்சம் பஞ்சாபை ஆண்ட சீக்கிய வம்சம் ஆகும். அதில் குறிப்பிடும்படியான மன்னர் என்றால் அது மகாராஜா ரஞ்சித் சிங் அவர்கள்தான். இவர் வரலாற்றில் எந்த விதமான இடத்தை பெற்றிருந்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாராஜா ரஞ்சித் சிங்

மகாராஜா ரஞ்சித் சிங்

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தில் ஆட்சிக்கு வந்த சீக்கிய பேரரசின் முதல் அரசர் மகாராஜா ரஞ்சித் சிங் ஆவார். அவர் நவம்பர் 13, 1780 இல் பிறந்தார் மற்றும் 27 ஜூன் 1839 இல் இறந்தார்.

ஒற்றைக் கண் அரசர்

ஒற்றைக் கண் அரசர்

குழந்தை பருவத்திலேயே ரஞ்சித் சிங் பெரியம்மை நோயால் தன்னுடைய ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். ஆனால் பின்னாளில் மன்னராகும் தகுதியை வளர்த்துக் கொண்ட ரஞ்சித் சிங் திறமையான மன்னராக மாறியபோது ஒற்றைக் கண்ணால் பார்க்கும் அரசர் அல்ல அனைவரையும் சமமாக பார்க்கும் அரசர் என்று புகழப்பட்டார். இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதான பெண்மணி

வயதான பெண்மணி

மகாராஜா ரஞ்சித் சிங் ஒருமுறை நகர்வலம் வந்தபோது வயதான பெண்மணி ஒருவர் கூட்டத்தில் இருக்கும் அனைவரையும் விலக்கிக்கொண்டு மகாராஜாவின் குதிரையை நோக்கி வந்தார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அவரை அந்த மூதாட்டியை நெருங்கினர்.

MOST READ: ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அவர்களின் இந்த செயல்கள்தான் காட்டிக்கொடுக்கிறதாம் தெரியுமா?

மூதாட்டியின் செயல்

மூதாட்டியின் செயல்

மன்னரை நெருங்கிய மூதாட்டி தன் கையில் வைத்திருந்த உலோகத்தட்டை மன்னரின் காலைக் கொண்டு தேய்த்தார். மன்னரின் பாதுகாவலர்கள் அந்த மூதாட்டியை அப்புறப்படுத்த நெருங்கினர். ஆனால் மகாராஜா அவர்களை பின்னே செல்லுமாறு கட்டளை இட்டார். மூதாட்டியின் செயலுக்கான காரணத்தை அவரிடம் வினவினார்.

மூதாட்டி சொன்ன காரணம்

மூதாட்டி சொன்ன காரணம்

மன்னரின் கேள்விக்கு அந்த மூதாட்டி மக்கள் அனைவரும் உங்களை ' பராஸ் ' என்று அழைக்கிறார்கள். பராஸ் என்பதன் அர்த்தம் தத்துவஞானியின் கல் என்பதாகும். எனவே எனது இரும்பு பாத்திரத்தை உங்களின் காலில் தேய்த்து தங்கமாக மாற்ற எண்ணினேன் என்று அவர் அப்பாவியாக கூறினார்.

மன்னரின் செயல்

மன்னரின் செயல்

மகாராஜா ரஞ்சித் சிங் தனது பெயருக்கு ஏற்ப வாழ்ந்தார், மூதாட்டியின் செயலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் அந்த மூதாட்டிக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான பணத்தையும், பொருளையும் வழங்கினார். தனது பராஸ் என்னும் பெயருக்கு ஏற்ப அவர் வாழ்ந்தார்.

MOST READ: விதவைப்பெண்களுக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்னென்ன தெரியுமா?

குழந்தைகள்

குழந்தைகள்

மகாராஜா ரஞ்சித் சிங்கின் பெருமையைக் கூறும் மற்றொரு கதை குழந்தைகளுடன் தொடர்புடையது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அங்கிருந்த மரத்தில் இருந்த மாம்பழங்களை அடிக்க நினைத்தனர்.

கல்லை எறிந்தனர்

கல்லை எறிந்தனர்

அங்கிருந்த குழந்தைகளில் ஒருவர், சாலையில் கிடந்த செங்கலில் ஒன்றை எடுத்து எறிந்தார். ஆனால் குறித் தவறி அந்த செங்கல் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மன்னரின் தலையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. வீரர்கள் சிறுவனைப் பிடித்து மகாராஜா முன்னிலையில் அழைத்து வந்தனர். குழந்தைகள் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர். தாங்கள் மாம்பழத்தைதான் அடிக்க நினைத்ததாகக் விளக்கினர்.

மன்னரின் இரக்கம்

மன்னரின் இரக்கம்

மகாராஜா ரஞ்சித் சிங் தன்னை தாக்கியதற்கு மரம் மாம்பழத்தை கொடுக்கும் என்றால் என்னைத் தாக்கியதற்காக நானும் ஏதாவது திரும்ப கொடுக்க வேண்டுமல்லவா என்று என்று கேட்டு வீரர்களை குழந்தைகளுக்கு மாம்பழங்களை விநியோகிக்கும்படி கூறினார்.

MOST READ: சுபாஷ் சந்திர போஸின் மரணம் முதல் இந்தியாவின் ஏலியன்கள் விமானத்தளம் வரையான உறையவைக்கும் ரகசியங்கள்...

மன்னரின் குணம்

மன்னரின் குணம்

போர்களில் ஈடுபட்டு, தனது சாம்ராஜ்யத்தை அமைத்து, தனது குடிமக்களைப் பற்றி மிகவும் சிந்தனையுடனும் அக்கறையுடனும் இருக்கவும், ஒரு மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கங்களை நியாயப்படுத்தவும் முடியும் என்று நினைப்பது கடினமான ஒன்றாகும். அவர் உண்மையிலேயே இந்தியாவின் சிறந்த மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Stories About Maharaja Ranjit Singh

Here are some interesting stories about Maharaja Ranjit Singh
Story first published: Tuesday, November 26, 2019, 12:26 [IST]
Desktop Bottom Promotion