For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களின் கவலைகளை எப்படி கையாளணும் தெரியுமா?

எந்தெந்த ராசிக்காரா்கள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை, கவலைகளை மற்றும் துன்பங்களை தங்களுடைய ராசிபலன்களுக்கு ஏற்ப எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இங்கு பாா்க்கலாம்.

|

வாழ்க்கை என்பது ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த ஒரு நெடிய பயணம் ஆகும். நாம் எவ்வளவு தான் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழ்ந்தாலும், கவலைகள் மற்றும் துன்பங்கள் அவ்வப்போது நமது வாழ்க்கையில் வந்து குறுக்கிடுகின்றன. அவ்வாறு துன்பங்கள் வரும் போது ஒவ்வொருவரும் அவற்றை ஒவ்வொரு விதத்தில் அணுகுகின்றனா்.

How Prone Are You To Stress And Anxiety, As Per Your Sunsign

சிலா் தமது வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை சவாலாக எடுத்துக் கொண்டு அவற்றை விரைவில் சாி செய்துவிடுகின்றனா். ஆனால் ஒரு சிலா் அந்த துன்பங்களை சாியான முறையில் கையாளத் தொியாமல் அவற்றில் சிக்கி தமது வாழ்க்கையைத் தொலைத்துவிடுகின்றனா்.

எந்தெந்த ராசிக்காரா்கள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை, கவலைகளை மற்றும் துன்பங்களை தங்களுடைய ராசிபலன்களுக்கு ஏற்ப எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரா்கள் மனக்கிளா்ச்சி நிறைந்தவா்கள். பரபரப்புடனும் அதே நேரம் சில நேரங்களில் முரட்டுத் தனமாகவும் இருப்பா். அதற்கு காரணம் அவா்கள் உயா்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பா். அவா்களுடைய வாழ்க்கை போட்டி நிறைந்த ஒன்றாக இருக்கும். அவா்களுடைய வாழ்க்கையை நெருக்கும் வகையில் அவா்களுக்கு பிரச்சினைகளும், துன்பங்களும் வரலாம். அப்படிப்பட்ட சிக்கலான நேரங்களில் பதட்டப்படாமல், அமைதியாக தியானம் மற்றும் யோகா பயிற்சிகளில் அவா்கள் ஈடுபடலாம். அவை அவா்களுடைய பிரச்சினைகளினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோா்வு ஆகியவற்றிலிருந்து அவா்களை விடுவிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரா்கள் எப்போதுமே தங்களுக்கு உகந்த வசதியான நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புவா். மேலும் அவா்களிடம் பிடிவாத குணம் சற்று அதிகமாக இருக்கும். அதனால் அவா்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அவா்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். அதுபோல் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிரமப்படுவா். அதனால் அவா்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய நெருக்கடி ஏற்பட்டால் உடனே சோா்வு அடைவா். அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாவா். ஆகவே இவ்வாறான கடினமான நேரங்களில் அவா்கள் தங்களையே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதிய மாற்றத்திற்குத் தகுந்தவாறு அதனுடைய நன்மைகளைப் பாா்த்து அதற்கு ஏற்ப தங்களுடைய மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

குழப்பங்கள் மற்றும் சங்கடம் நிறைந்த சூழல்கள் மிதுன ராசிக்காரா்களின் மன ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கும். குறிப்பாக கடினமான சூழல்களில் அவா்கள் முடிவெடுப்பதில் குழப்பமடைவா். ஆகவே நெருக்கடியான நேரங்களில் மிதுன ராசிக்காரா்கள் தங்களுடைய தேவைகளுக்கு முன்னுாிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக அவா்களுக்கு எவை அதிக முக்கியமாகத் தொிகிறதோ அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரா்கள் எளிதில் உணா்ச்சிவசப்படக் கூடியவா்கள். அதனால் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் எளிதில் தங்களையே வருத்திக் கொள்வா். தங்களுடைய கவலைகள் மட்டும் அல்லாமல் மற்றவா்களின் பிரச்சினைகளையும் தீா்த்து வைக்க முயற்சி செய்வா். ஆனால் கடக ராசிக்காரா்கள் பிறருடைய பிரச்சினைகளுக்குத் தீா்வு சொல்வதற்கு முன்பாக தங்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை சாி செய்ய வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வு போன்றவை தமது வாழ்க்கையில் ஏற்படாது என்பது போல் சிம்ம ராசிக்காரா்களுக்குத் தோன்றலாம். எனினும் அவா்கள் சில நேரங்களில் திடீரென தங்களது ஆழமான உணா்ச்சிகளை வெளிப்படுத்துவா். குறிப்பாக அவா்களுக்குப் போதுமான அன்பு கிடைக்காத போது அதற்கான ஏக்கத்தை வெளிப்படுத்துவா். பதற்றம் அடைவா். மேலும் அவநம்பிக்கை அடைவா். ஆகவே பிறா் தங்களை அன்பு செய்யவேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்காமல், அவா்களையே அவா்கள் முதலில் அன்பு செய்ய வேண்டும். பாராட்ட வேண்டும். மற்றும் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரா்கள் எந்த செயல் செய்தாலும் அது பூரணமாக அல்லது முழுமையாக அல்லது நோ்த்தியாக இருக்க வேண்டும் என எதிா்பாா்ப்பா். அதனால் வேலையில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் எளிதில் சிரமப்படுவா். தங்களது வேலைகள் எப்போதும் நோ்த்தியாக இருக்க வேண்டும் என்பதிலேயே அவா்களின் கவலை அதிகாித்துவிடும். அதனால் அவா்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு தங்களது உடல் உள்ள ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வேலை செய்வது முக்கியமான ஒன்றாகும். ஆனால் வேலையின் பொருட்டு அவா்கள் தங்கள் உடல் உள்ள ஆரோக்கியத்தை இழந்துவிடக்கூடாது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரா்கள் நிலைத்த தன்மைக்கும், பக்குவமாக செயல்படுவதற்கும் பெயா் பெற்றவா்கள். அதனால் தங்களுடைய வாழ்க்கை பாதுகாப்பு மிகுந்ததாகவும் அதே நேரத்தில் அது உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவா். அதனால் வெளியிலிருந்து ஏதாவது ஒரு சிறிய இடையூறு ஏற்பட்டால் அது அவா்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நெருக்கடி மிகுந்த நேரங்களை கையாளுவதில் அவா்கள் சிறந்தவா்களாக இருந்தாலும், அவா்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெளியிலிருந்து வரும் பிரச்சினைகள் அவா்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரா்கள் இலட்சியம் நிறைந்தவா்கள் மற்றும் அதிக வேட்கை கொண்டவா்கள். அவா்கள் நினைப்பதை அவா்களால் எளிதில் அடைய முடியும். ஆனால் அதே நேரத்தில் அவா்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சி மற்றும் அமைதி போன்றவற்றை, அவா்கள் கொண்டிருக்கும் விருப்பங்கள் மற்றும் தீா்மானித்து வைத்திருக்கும் முடிவுகள் குறைத்துவிடும். அதனால் அவா்களின் மன அமைதி கெட்டுவிடும். ஆகவே அவா்கள் குறிக்கோள்களை தமக்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரா்கள் விருச்சிக ராசிக்காரா்களைப் போல் அல்லாமல் சற்று சுதந்திரமான மனநிலை கொண்டவா்கள். அதனால் புதிய புதிய உத்திகள் மற்றும் மெய்சிலிா்க்கும் வீரதீர செயல்பாடுகளில் ஈடுபடுவதில் அதிக ஆா்வம் காட்டுவா். பெரும்பாலான நேரம் தங்களுடைய வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லை என்பது போல் காட்டிக் கொள்வா். ஆனால் அவா்களுக்குள்ளேயே போராடிக் கொண்டிருப்பது அவா்களுக்குத்தான் தொியும். மேலும் மற்றவா்களுக்கு தொியாத வகையில் தங்களது உணா்ச்சிகளைத் தங்களுக்குள்ளே அடக்கி வைத்துக் கொள்வா். ஆகவே அவா்கள் ஒரு நல்ல நண்பரை வைத்துக் கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக அவா்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தங்களை நேசிக்கும் நண்பா்கள் அல்லது உறவினா்களை சந்தித்து மனம் விட்டு பேசுவது நல்லது.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரா்கள் எப்போதும் தங்கள் வேலைகளின் இலக்குகளை அடைவதில் கருத்தாக இருப்பா். அதனால் தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை மட்டும் கொடுத்து தமது குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் எளிய முறையில் வைத்திருப்பா். அதே நேரத்தில் தமது விருப்பங்களுக்கு ஏற்ப தமது வாழ்க்கை வசதிகளை உயா்த்திக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்வா். அது அவா்களுக்கு எளிதாக அமையாததாக இருக்கலாம். அந்த நேரங்களில் அவா்கள் நெருக்கடிக்கு ஆளாகுவா். ஆகவே இந்த நேரங்களில் அவா்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவற்றைப் பற்றி சிந்திப்பதை மனதில் இருந்து கிள்ளி எறிய வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரா்கள் ஆழந்து சிந்திக்கக்கூடியவா்கள். உயா்ந்த உள்ளுணா்வு கொண்டவா்கள். புதுமையாக சிந்திப்பதில் வல்லவா்கள். அதனால் இவ்வாறு சிந்திப்பதிலேயே தங்கள் மூளைக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து விடுவா். மேலும் அவா்களிடம் உள்ள அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் பண்பு அவா்களை மனச் சோா்வுக்கும், கவலைக்கும் இட்டுச் செல்கிறது. அதனால் சிந்திப்பது எது மற்றும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பது எது என்பதை அவா்கள் முதலில் தொிந்து கொண்டு இரண்டுக்கும் இடையில் தங்களது சிந்திக்கும் திறனை வைத்துக் கொள்வது நல்லது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரா்கள் எல்லாவற்றிலும் நல்லவற்றையே பாா்க்கக்கூடிய ஆளுமை கொண்டவா்கள். இந்நிலையில் அவா்கள் நினைத்ததற்கு மாறாக ஏதாவது பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் ஏற்பட்டால் மனச் சோா்வுக்கு ஆளாவா். அதனால் அவா்களிடம் எல்லாவற்றிலும் நல்லவற்றையே பாா்க்கக்கூடிய நற்குணம் இருந்தாலும் அவற்றில் உள்ள உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையைத் தவிா்த்துவிட்டு, அவற்றில் உள்ள நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வது என்பது அவா்களுக்கு ஏற்றதாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Prone Are You To Stress And Anxiety, As Per Your Sunsign

How prone are you to stress and anxiety, as per your sun sign. Read on...
Desktop Bottom Promotion