For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுமன் யாரை, எதற்காக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? அதிர்ச்சியாகாம படிங்க...

இராமருக்கு சேவை செய்யவே பிறந்ததாக கருதப்படும் அனுமன் தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார். ஆனால் அவருக்கு திருமணம் நடந்தது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.

|

இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் அனுமன் ஆவார். இராமாயணத்தில் அனுமனின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. இராமருக்கு சேவை செய்யவே பிறந்ததாக கருதப்படும் அனுமன் தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார். ஆனால் அவருக்கு திருமணம் நடந்தது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.

how Hanumans thirst for knowledge led to his marriage

இது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கதையாகவும், நம்ப முடியாத தகவலாகவும் இருக்கலாம். ஆனால் அனுமனின் வரலாற்றில் இது பற்றிய குறிப்புகள் உள்ளது. அந்த திருமணமும் அவர் ஞானத்தை பெறுவதற்காகவும், தன்னுடைய குருவின் வேண்டுகோளிற்காகவும்தான் செய்து கொண்டார். இந்த பதிவில் அனுமன் ஏன் திருமணம் செய்தார், ஏன் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பராசர முனிவரின் பார்வை

பராசர முனிவரின் பார்வை

பராசர மகரிஷியின் கூற்றுப்படி, அனுமன் சூர்ய பகவானை தனது குருவாக வணங்கி, வேதங்களைப் படித்து, ஒன்பது வியாகர்ணங்களில் தேர்ச்சி பெற்றார். அனுமன் அஜன்ம பிரம்மச்சாரியாக இருந்ததால் அனுமனால் ஒன்பது வியாகரனங்களை படிக்க தகுதியற்றவராக இருந்தார். ஏனெனில் அதற்காக ஒரு க்ருஹஸ்த என்ற நிலை அவசியம்.

அனுமனின் மனைவி

அனுமனின் மனைவி

அனுமனின் கல்வியை முடிக்க வேண்டுமென்பதற்காக திருமூர்த்திகள் சூர்ய பகவானை அணுகி, சூரியனின் கதிர்கள்களில் இருந்து சுவர்ச்சலா தேவி என்னும் ஒரு அழகிய கன்னியை படைத்தனர். அவர் ஒரு அஜன்ம பிரம்மச்சாரினியாக உருவாக்கினர். எனவே அவரை திருமணம் செய்துகொள்வதன் மூலம் அனுமனின் பிரம்மச்சரியத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அவரை க்ருஹஸ்த நிலையை அடைய வைக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

திருமணமாகியும் பிரம்மச்சாரி

திருமணமாகியும் பிரம்மச்சாரி

க்ருஹஸ்த நிலையை அடைந்த பிறகு ஒன்பது வியாகர்ணங்களில் ஒரு மேதை ஆனார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவர் வாழ்நாள் முழுவதையும் ராமருக்கு சேவை செய்தார். எனவே அவர் திருமணம் செய்தும் பிரம்மச்சாரியாகத்தான் வாழ்ந்தார். இதன்படி அனுமன் சூரிய பகவானின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

MOST READ: டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கும் எகிப்திய மம்மிக்கும் உள்ள உறையவைக்கும் ரகசியதொடர்பு என்ன தெரியுமா?

சூர்ய பகவான் கேட்ட குருதட்சணை

சூர்ய பகவான் கேட்ட குருதட்சணை

சூர்ய பகவான் அனுமனிடம் கூறினார், " அனுமனே நீ பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை குடித்த சிவபெருமானின் அவதாரம். மேலும் நீ வாயுபகவானின் புதல்வன், என்னுடைய வெப்பத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய ஒரே ஆள் நீதான். எனவே என்னுடைய கதிரில் இருந்து உருவாக்கப்பட்ட எனது புதல்வி சுவர்ச்சலா தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் " என்று கூறினார். இந்த திருமணம் நீ எனக்கு அளிக்கும் குருதட்சணையாக இருக்கும் என்றும் கூறினார்.

அனுமனின் தயக்கம்

அனுமனின் தயக்கம்

அனுமன் தன் குரு கூறியதைக் கேட்டு அவருக்கு பதில் அளித்தார், " பிரபு நான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளேன், என்னால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் " என்று கூறினார். அதற்கு சூரியபகவான் " இந்த சுவர்ச்சலா தெய்வீக குணம் வாய்ந்தவள், அவள் பக்தியுள்ள மனைவியாக இருப்பாள். . திருமணத்திற்குப் பிறகும் நீ பிரம்மச்சாரியாக இருப்பாய் என்ற வரத்தை நான் உனக்குத் தருகிறேன். நீங்கள் தொடர்ந்து பிரஜாபத்ய பிரம்மச்சாரியாக இருப்பீர்கள். உங்கள் திருமணம் பிரபஞ்சத்தின் நலனுக்காக மட்டுமே, அது நீங்கள் தேர்ந்தெடுத்த பிரம்மச்சரியத்தை பாதிக்காது " என்று கூறினார்.

அனுமனின் ஒப்புதல்

அனுமனின் ஒப்புதல்

அனுமன் தனது குருவின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். பராசர சம்ஹிதாவில் சூர்ய பகவான் ஜெய்ச்தா சுதா தசமியில் தனது மகள் சுவர்ச்சலாவை திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இது உத்தர நட்சத்திரத்தின் கீழ் ஒரு புதன்கிழமை ஆகும். பாரம்பரியத்தை மதிக்கிறவர்கள், இன்றுவரை கூட, ஜெய்ச்தா சுதா தசமியில் நாளில் அனுமனின் திருமணத்தை அனுசரிக்கின்றனர். ஆந்திராவில் அனுமனும், சுவர்ச்சலா தேவியும் ஒன்றாக இருக்கும் கோவிலே உள்ளது.

சமண இராமாயண பதிப்பு கூறுவது என்ன?

சமண இராமாயண பதிப்பு கூறுவது என்ன?

விமலாசூரி எழுதிய ராமாயணத்தின் சமண பதிப்பான பத்மாசரிதத்தில் பமானகதி மற்றும் அஞ்சனா சுந்தரி ஆகியோரின் மகனான அனுமனை ஒரு வித்யாதரர் (ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்டவர்) என்று குறிப்பிடுகிறது. அஞ்சனை தனது மாமியாரால் வெளியேற்றப்பட்ட பிறகு வனத்தில் ஒரு குகையில் அனுமனை பெற்றெடுத்தார். அவரை அவரது மாமா மீட்டுச்சென்ற போது அஞ்சனை அனுமனை கைத்தவறி கீழே போட்டுவிட்டார், ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகாமல் அவர் விழுந்த பாறைதான் உடைந்தது. குழந்தை அவரது பெரிய மாமாவின் தீவான ஹனுருஹாவில் வளர்க்கப்பட்டார், அதில் இருந்து அனுமனுக்கு அவரது பெயர் கிடைக்கிறது.

MOST READ: இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...!

திருமணம்

திருமணம்

இராமாயணத்தின் இந்த பதிப்பில், அனுமன் பிரம்மச்சாரி இல்லை. அவர் கரதுஷன மற்றும் ராவணனின் சகோதரி சந்திரநகாவின் மகள் இளவரசி அனங்ககுசுமாவை மணக்கிறார். அனுமன் முதலில் தனது மாமியார் கரதுஷானாவைக் கொன்றதற்காக இராமரிடம் கோபப்படுகிறார். இருப்பினும், அவரைச் சந்தித்ததும், ராவணனால் சீதா கடத்தப்பட்டதை பற்றி அறிந்ததும் அவர் இராமரின் ஆதரவாளராகிறார். அவர் ராமர் சார்பாக இலங்கைச் செல்கிறார், ஆனால் இராவணனை சரணடையச் செய்ய முடியவில்லை. அதன்பின் போரில் இராமருடன் பங்கேற்று பல சாகசங்களை செய்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Hanuman's Thirst For Knowledge Led To His Marriage?

Read to know how Hanuman's thirst for knowledge led to his marriage.
Story first published: Tuesday, November 19, 2019, 15:01 [IST]
Desktop Bottom Promotion