For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு வக்ர பெயர்ச்சியால் 119 நாட்கள், அதாவது நவம்பர் 24 வரை இந்த 4 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கப் போகுது...

குரு வக்ர நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார். எனவே 119 நாட்கள் சில ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

|

கிரகங்கள் ராசியை மாற்றும் போது அல்லது கிரகங்களின் இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சனி மற்றும் குரு, மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். அந்த வகையில் மீன ராசியில் பயணித்து வந்த குரு பகவான், சமீபத்தில் அதாவது ஜூலை 29 ஆம் தேதி வக்ரமாக மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளார். குருவின் வக்ர பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் கல்வி, திருமணம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் குரு பகவான்.

Guru Vakra Peyarchi 2022: These Zodiac Signs Should Be Careful For 119 Days In Tamil

பொதுவாக கிரகங்கள் வக்ரமாகும் போது, அதனால் கிடைக்கும் நற்பலன்கள் தாமதமாவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். குரு வக்ர நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார். எனவே 119 நாட்கள் சில ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், குருவின் வக்ர நிலையால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ரமாக இருப்பதால், இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று துயரம் நிறைந்தாக இருக்கும். இந்த வீடு இழப்பு மற்றும் செலவுகளின் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கலாம். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகளால் நிதி பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

மேஷ ராசிக்கான பரிகாரம்

மேஷ ராசிக்கான பரிகாரம்

குருவின் வக்ரத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய மந்திரத்தை சொல்லி, மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யுங்கள். மேலும் சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் குரு வக்ரமாக இருப்பதால், இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த 8 ஆவது வீடு நோய் மற்றும் மரணத்தின் வீடாகும். ஆகவே ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், குறிப்பாக சர்க்கரை நோய், கல்லீரல் நோய் உள்ளவர்கள் இக்கால கட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசிக்கான பரிகாரம்

சிம்ம ராசிக்கான பரிகாரம்

சிம்ம ராசிக்காரர்கள் புஷ்பராக மோதிரத்தை அணிவது நல்லது. அதோடு சனி பகவானுக்குரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். மேலும் சனியுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்வது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாக இருப்பதால், இந்த காலம் சற்று மோசமான காலமாக இருக்கும். ஏனெனில் இந்த வீடு நோயின் வீடாகும். உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏதேனும் இக்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

துலாம் ராசிக்கான பரிகாரம்

துலாம் ராசிக்கான பரிகாரம்

துலாம் ராசிக்காரர்கள் குரு வக்ர பெயர்ச்சியால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சனி பகவானுக்கு நல்லெண்ணெய்/கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்தால், நற்பலன் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு வக்ரமாக இருப்பதால், இக்காலம் மிகவும் வேதனை நிறைந்த காலமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்கால கட்டத்தில் தொண்டை பிரச்சனைகள், தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் தைரியமும், வீரமும் சற்று குறையலாம்.

மகர ராசிக்கான பரிகாரம்

மகர ராசிக்கான பரிகாரம்

குரு வக்ர பெயர்ச்சியின் மோசமான பலன்களைத் தவிர்க்க, குரு பகவானுக்குரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guru Vakra Peyarchi 2022: These Zodiac Signs Should Be Careful For 119 Days In Tamil

Guru vakra peyarchi 2022: these zodiac signs should be careful for 119 days, Read on to know more...
Desktop Bottom Promotion