Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
குரு பெயர்ச்சி 2019 - 20: கடகம் லக்னகாரர்களுக்கு வருடம் முழுவதும் வருமானம்
குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தனசு லக்னத்தில் அமரப்போகும் உங்க லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் அமர்கிறார். அங்கிருந்து குடும்ப ஸ்தானம், தொழில் ஸ்தானம், அயன சயன ஸ்தானங்களை பார்வையிடுகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. கடக லக்னகாரர்களுக்கு ஆண்டு முழுவதும் வருமானத்தைத் தரப் போகிறார்.
குருபகவான் கடகத்தில் உச்சமடைபவர் என்பதால் எப்போதும் நன்மையே செய்வார். குரு ஆறாம் வீட்டில் மூலம் நட்சத்திரத்தில் அமர்கிறார். லக்ன அதிபதி சந்திரனுக்கு கேதுவின் நட்சத்திரம் மூலத்தில் உள்ள குரு ஆரம்பத்தில் சில பாதிப்புகளை தருவார். கடன் சின்னச் சின்னச் தொந்தரவுகளைத் தருவார். வேலையில் உழைப்பு கூடும்.

பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்த குரு இனி ஆறாம் வீட்டில் கேது, சனி சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார். ஆறுக்கு உடையவன் ஆறில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். தொலைதூர பயணங்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமையும். வண்டி வாகனத்தில் செலவு வரும். சின்னச் சின்ன உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும்.

குரு பார்வை சுபம்
விருச்சிக லக்னமான ஐந்தாம் வீட்டில் இருந்த குரு தனுசு லக்னமான ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறாம் வீட்டிற்கு வருகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் சிறப்படையும் அவர் பார்க்கும் வீடுகளான மேஷம், மிதுனம், சிம்ம ராசிகள் மீது விழுகிறது.
குரு பார்வை பத்து, பனிரெண்டு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. உங்க லக்னத்தில் இருந்து ஆறு, இரண்டு, பத்து, 12ஆம் வீடுகள் செயல்படத்தொடங்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்களின் இலக்கை நீங்கள் அடைவீர்கள். எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.

கடன் தீரும்
ஆறாம் வீட்டில் ஏற்கனவே சனி கேது இருக்கின்றனர். ஆறாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் நன்மைதான். உங்களது எதிரி யார் என்று அடையாளம் தெரிந்தது. நல்ல காலம் தொடங்கி விட்டது. உங்கள் உடம்பில் இருந்த வியாதிகள் வெளியே தெரியப்போகிறது. நோய்கள் குணமடையும். என்ன நோய் என்று வெளியே தெரியவரும். தொழில் தொடங்க கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சியடைய பண உதவி கிடைக்கும். துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

நிரந்தர வேலை கிடைக்கும்
குரு எந்த ஸ்தானத்தில் அமர்கிறாரோ அந்த ஸ்தானத்தின் கெடுதல்களை நீக்குவார். நிரந்தரமான வேலை கிடைக்கும். உங்க குடும்ப ஸ்தானமான சிம்மத்தை குரு பார்ப்பதால் வருமானம் கொட்டப்போகுது. உங்க வேலைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உயர்வான காலகட்டம். குரு கடன் வாங்க வைப்பார். வயிறு பிரச்சினையை ஏற்படுத்துவார். எதிரிகளை வெல்லும் ஆற்றலைத் தருவார் குருபகவான். ஒருபக்கம் கடன் வாங்கினாலும் இன்னொரு பக்கம் வருமானத்தை அதிகம் கொடுப்பார். அதன் மூலம் கடன் அடையும்.

குழந்தை பாக்கியம் வரும்
அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறவுகள் உற்சாகமடையும் காரணம் குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைகள் விலகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாடு சென்று படிக்கலாம் கல்விக்கான உதவி கிடைக்கும். உடம்பை பத்திரமா பாத்துக்கங்க. சங்கடங்கள் விலக பைரவரை வணங்குங்கள் கஷ்டங்கள் வந்தாலும் நன்மைகள் நடைபெறும்.



Click it and Unblock the Notifications
