For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...

பகீரதன் செய்த கடும் தவத்தினால் தேவலோகத்தில் இருந்த புனித கங்கை நதி இந்த மண்ணுலகிற்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கை நதியின் வருகையை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி மாத தசமி திதி பாபஹர

|

வைகாசி மாத சுக்லபட்ச தசமி ஜூன் 1ஆம் தேதியன்று பாபஹர தசமியாகவும் கங்கா தசராவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கையில் நீராடினால் நாம் செய்த பத்து வித பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கங்கை பாயும் பகுதிகளில் இந்த கங்கா தசரா விழா கொண்டாடப்படுவது போல ராமேஸ்வரத்திலும் பாபஹர தசமி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் காசி, ராமேஸ்வரம் செய்ய இயலாத நிலையில் வீட்டில் உள்ள தண்ணீரில் கங்கையை நினைத்து புனித நீராடினாலும் அறிந்தும் அறியாமலும் நாம் செய்த பாவங்கள் தீரும்.

Ganga Dussehra 2020: Date, Time, Pooja Benefits

புனித நதிகள் பாயும் புண்ணிய பூமி நம் தேசம். புனித கங்கை நதி இந்த பூமிக்கு வந்த நாளை கொண்டாடும் விதமாக வைகாசி மாத அமாவாசைக்கு பிறகான பத்து நாட்களும் கங்கா தசராவாக கொண்டாடுகின்றன. இந்த நாளில் கங்கை நதியில் புனித நீராடுவதோடு கங்கையை வணங்குகின்றனர். இதனால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பதோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதே நாளில் நாம் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் நீராடுவதும் புண்ணியம்.

வைகாசி மாதம் சூரியன் ரிஷபத்தில் சஞ்சரிக்க கன்னி ராசியில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க சுக்ல பட்சம் தசமி திதி ஒரு புதன்கிழமை நாளில் வியாதிபாத யோகம் கூடி வரும் நல்ல நாளில் கங்கை நதி இந்த தேவலோகத்தில் இருந்து இந்த புண்ணிய பூமியில் பிரவாகம் செய்ததாக சொல்கின்றன புராணங்கள். தேவலோகத்தில் இருந்து கங்கை நதி ஒன்றும் சாதாரணமாக வந்து விட வில்லை. பகீரதன் செய்த கடும் தவத்தின் பலனாகவே இந்த பூமியில் கங்கையின் பிரவேசம் நிகழ்ந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாவங்கள் போக்கும் பாபஹர தசமி

பாவங்கள் போக்கும் பாபஹர தசமி

புனிதமான கங்கை நதியில் நீராடுவதன் மூலம் நாம் செய்த பத்து வித பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதென்ன பத்து வித பாவங்கள் என்று கேட்கலாம். மனதாலோ, உடலாலோ, பேச்சினாலே ஒருவரை காயப்படுத்துதான் பத்து வித பாபங்கள். நாம் இந்த பத்துவிதமான பாவங்களில் ஏதாவது ஒன்றினை நம்மையும் அறியாமல் செய்திருந்தால் அதனை போக்கிக்கொள்ள இந்த பாபஹர தசமியை, காங்கா தசரா தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பத்து வித பாவங்கள்

பத்து வித பாவங்கள்

பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பது, சம்பந்தமில்லா விசயங்களைப் பேசி பிறர் மனதை புண்படுத்துவது மனதால் செய்யும் பாவம். பிறர் பொருளை அபகரிப்பது, அடித்து காயப்படுத்துவது, பிற பெண்களை மனதால் நினைப்பது உடலால் செய்யும் பாவங்கள். தகாத வார்த்தைகளை பேசி பிறர் மனதை காயப்படுத்துவது, பொய் சொல்லுவது, அவதூறாக பேசி பிறரை புண்படுத்துவது, அறிவுக்கு பொருத்தமில்லாத விசயங்களை பேசி பிறரை காயப்படுத்துவது என பத்துவிதமான பாபங்களில் ஏதாவது ஒன்றினை செய்திருந்தாலும் இந்த புனித நாளில் போக்கிக்கொள்ளலாம்.

கங்கை புராண கதை

கங்கை புராண கதை

கங்கா நதி பூமிக்கு வந்தது பற்றி புராண கதை உள்ளது. தேவலோகத்தில் மந்தாகினியாக ஓடும் புண்ணிய நதி பாதாள உலகத்தில் பாகீரதியாகவும், பூமியில் கங்கையாகவும் பாய்ந்து வளப்படுத்துகிறாள். தனது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீர பல ஆண்டுகள் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவர் பகீரதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்ததன் பலனாக பூமிக்கு வர சம்மதித்த கங்கை தனது வேகத்தை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

பூமிக்கு வந்த கங்கை

பூமிக்கு வந்த கங்கை

சிவனிடம் சம்மதம் வாங்க மீண்டும் தவமிருந்தார் பகீரதன். ஒருவழியாக சிவனின் சம்மதமும் கிடைக்கவே, மகிழ்ச்சியாக பாய்ந்து வந்தார் கங்கை. தனது சடாமுடியால் கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்தினார் சிவபெருமான். வேகம் குறைந்து அமைதியாக பூலோகத்தில் பாய்ந்தார் கங்கை அன்னை. உடனே பகீரதன் கங்கை அன்னையிடம் வேண்டுகோள் வைத்தார். பாதாள லோகத்தில் உள்ள முன்னோர்களின் அஸ்தியை கரையச் செய்து புனிதப்படுத்திய பின்னர் பூவுலகத்தில் பாய்ந்து புனிதப்படுத்துவீராக என்று கேட்கவே கங்கை அன்னை அவ்வாறே செய்தார்.

கங்கா தசரா கொண்டாட்டம்

கங்கா தசரா கொண்டாட்டம்

வைகாசி மாத வளர்பிறையில் கங்கை அன்னை பூமிக்கு வந்து பகீரதனின் முன்னோர்கள் செய்த பாபங்களை நீக்கிய நாள் பாபஹர தசமி நன்னாள். இந்த நாளைத்தான் கங்கா தசமியாக வட இந்தியாவில் பத்து நாட்கள் கங்கை பாயும் நதிக்கரைகளான காசி, அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய ஊர்களில் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி கங்கா தசரா நாளாகும். மே 31 ஆம் தேதி மாலை 5.37 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பகல் 2.58 மணி வரை தசமி திதி உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் யாரும் கங்கை பாயும் நதிக்கரைக்கு செல்ல முடியாது வீட்டில் உள்ள தண்ணீரிலேயே கங்கையை நினைத்து வணங்கி புனித நீராடினாலும் நம்முடைய பாபங்கள் நீங்கும்.

ராமாயணத்தில் பாபஹர தசமி

ராமாயணத்தில் பாபஹர தசமி

ராவணனை வதம் செய்த ராமபிரான் சீதா தேவி, லட்சுமணர் உடன் ராமேஸ்வரத்தில் கடற்கரை மணலில் லிங்கம் உருவாக்கி வழிபட்டு தன்னுடைய பிரம்மஹத்தி தோசத்தையும் பாவங்களையும் போக்கிக்கொண்டார். இந்த நாளும் பாபஹர தசமி நாள் என்கிறது புராணம். எனவே காசிக்கு போக முடியவில்லையே, ராமேஸ்வரம் போக முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். நம் வீட்டில் இருந்தே புனித நீராடுவோம் பாபங்களை போக்கிக்கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganga Dussehra 2020: Date, Time, Pooja Benefits

Ganga Dussehra also known as Ganga Gangavatara is falling on June 1, 2020, Monday.Ganga Dussehra falls during Dashami Tithi of Vaikasi Shukla Paksha and currently falls in month of May or June.
Desktop Bottom Promotion