For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

|

திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவொருவரின் வாழ்க்கையிலும் கொண்டாடப்படும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் கடைபிடிக்கப்படும் சில பழக்கங்களும், மூடநம்பிக்கைகளும் நம்மை வெறுப்படையச் செய்வதுடன் சிலசமயம் அச்சுறுத்தவும் செய்கிறது. இன்று இந்திய திருமணங்கள் வேகமாக மாறி வருகின்ற போதிலும், பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை இன்னும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Dramatic Rituals of Wedding Night

புதுமணத் தம்பதிகளாக மணமகனும், மணமகளும் ஒன்றாகக் கழிக்கும் முதல் இரவில் கூட பல பாரம்பரிய மூடநம்பிக்கைகள் நிறைந்துள்ளது. விசித்திரமான சில முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூடநம்பிக்கைகள்

மூடநம்பிக்கைகள்

திருமணத்தைக் காட்டிலும் முதல் இரவிற்கு பத்து மடங்கு மூட நம்பிக்கைகள் நிலவுகிறது. இந்த மூடநம்பிக்கைகள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் உள்ளது. உதாரணத்திற்கு மேற்குநாடுகளில் முதல் இரவு அன்று தலையணைக்கு அடியில் லிம்பர்க் சீஸ் வைப்பது அதிக குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.

மற்ற மூடநம்பிக்கைகள்

மற்ற மூடநம்பிக்கைகள்

முதல் இரவு அன்று முதலில் தூங்குபவர்கள் முதலில் இறந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. திருமண வாழ்வை தொடங்கும்போதே மரண பயம் காட்டி தொடங்குவது மணமக்களின் மனதில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் உணர்வதில்லை.

மலர் அலங்காரம்

மலர் அலங்காரம்

முதல் இரவு அன்று தம்பதியினரின் அறையை வாசனையான மலர்கள் கொண்டு அலங்கரிப்பது என்பது பல காலமாக இருக்கும் வழக்கமாகும். மலர்களின் இனிமையான மணமும், இனிப்புகளின் வாசனையும் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்க ஒரு காதல் மனநிலையை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. வழக்கமாக விருப்பமான பூக்கள் ராஜ்னிகந்தா (டியூபரோஸ்), ரோஜாக்கள் மற்றும் மல்லிகைகள் ஆகும், ஏனெனில் இவை ஒரு கவர்ச்சியான நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை தம்பதியினருக்கு ஒரு பாலுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

MOST READ: இந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைனு துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா?

பால்

பால்

இந்து தர்மத்தின் கூற்றுப்படி, திருமணம் என்பது இரண்டு ஆத்மாக்களின் ஒன்றிணைவு ஆகும், அதாவது தனிப்பட்ட உடல்கள் தனித்தனி அமைப்பாகவே இருக்கின்றன, ஆனால் முதல் இரவில் ஆத்மாக்கள் ஒன்றோடு ஒன்றிணைகின்றன. முதல் இரவில், புதிதாக திருமணமானவர்களுக்கு பாரம்பரியமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்படுகிறது, அதில் முதல் இரவு அனுபவத்தை மேம்படுத்த நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் மிளகு கலக்கப்படுகிறது. இதுதவிர காமசூத்திரத்தில் கூறியுள்ளபடி பாலில் பெருஞ்சீரகம், தேன், லிகோரிஸ் யாரும் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கப்டுகிறது. இது தம்பதிகளின் பாலுணர்வை அதிகரிக்கும்.

பால் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம்

பால் கொடுப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம்

இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பல மரபுகளின் ஆரம்பகாலம் என்னவென்பதே பலருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்து திருமணம் என்பது இந்து மதத்தின் மிகவும் புனிதமான சடங்குகளில் ஒன்றாகும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் பால்என்பது தூய்மையானது, அது புதுத்தம்பதிகளின் இல்வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக அமையும். அதேபோல இது அவர்களின் பாலுணர்வையும் தூண்டும்.

வெள்ளை பெட்சீட்

வெள்ளை பெட்சீட்

இந்த பழக்கம் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்டது. திருமணத்திற்கு முன்னதான உடலுறவு என்பது பாவச்செயலாக கருதப்பட்டு வந்தது. பெண்களின் கன்னித்தன்மைக்கு இந்து மதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முன்காலங்களில் முதல் இரவு படுக்கையில் வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அதில் ஏற்படும் கரை மணப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக கருதப்பட்டது. இது ஒரு பெண்ணுக்கு செய்யப்படும் அபத்தமான காரியம் என்று பின்னாளில்தான் உணர்ந்தார்கள்.

MOST READ: டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கும் எகிப்திய மம்மிக்கும் உள்ள உறையவைக்கும் ரகசியதொடர்பு என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் இருக்க முதல் இரவு மரபுகள்

உலகம் முழுவதும் இருக்க முதல் இரவு மரபுகள்

உலகம் முழுவதும் முதல் இரவு தொடர்பாக பல மரபுகளும், கலாச்சாரங்களும் உள்ளது. திருமண விழாக்கள் உலகம் முழுவதும் வேறுபட்டவை என்பது பொதுவான அறிவு, ஆனால் திருமண இரவில் கூட பன்முகத்தன்மை நீண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? புதுமணத் தம்பதிகள் திருமண ஆனந்த இரவை அடைய அனுமதிப்பதற்கு முன்பு தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் செய்யும் சுவாரஸ்யமான செயல்பாடுகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க மரபு

அமெரிக்க மரபு

அமெரிக்காவில் திருமணம் முடிந்த கையோடு மணமகனும், மணமகளும் தகர டின்கள் பின்னாடி கட்டப்பட்ட காரில் முதல் இரவுக்கு செல்வார்கள். இது பாரம்பரிய மரபுகளில் இருந்து தப்பிக்க கண்டுபிடிக்கப்பட்ட முறையாகும்.

ஸ்காட்லாந்து மரபுகள்

ஸ்காட்லாந்து மரபுகள்

பெரும்பாலான திருமண மரபுகள் ஸ்காட்லாந்தில் இருந்து உருவானதுதான். முதல் இரவன்று குடிசையில் தூங்குவது, அதிர்ஷ்டத்திற்காக திருமண படுக்கையில் தண்ணீர் தெளித்தல் மற்றும் புதுமணத் தம்பதியரின் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு மணமகளின் பெற்றோருடன் ஒரு வாரம் தங்குவது போன்றவை அவர்களின் முதல் இரவு மரபுகளாகும்.

MOST READ: அனுமன் யாரை, எதற்காக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? அதிர்ச்சியாகாம படிங்க...

ஜெர்மன் மரபு

ஜெர்மன் மரபு

ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மக்கள் தொல்லை தரும் முதல் இரவு மரபுகளை கடைபிடிக்கின்றனர். இது சிவேரி என்று அழைக்கப்படுகிறது. தம்பதியினர் தங்கள் முதல் இரவை ஒன்றாகக் கழிக்கும் இடத்திற்கு வெளியே அவர்கள் சத்தம் போடுகிறார்கள். சிலர் தங்கும் அறையுடன் சுற்றி விளையாடுகிறார்கள், ஏராளமான பலூன்களைப் போடுவது, படுக்கை முழுவதும் உணவைப் பரப்புவது, அலாரம் கடிகாரத்தை எல்லா இடங்களிலும் மறைப்பது போன்ற செயல்களில் நண்பர்கள் ஈடுபடுவார்கள்.

ரோமானிய மரபு

ரோமானிய மரபு

புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகள் தடுமாறுவது துரதிர்ஷ்டம் என்று அவர்கள் கருதுவார்கள். எனவே வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் நண்பர்கள் மணமகளை சுமந்து செல்வார்கள். பின்னாளில் மணமகன்களே இதனை செய்யத் தொடங்கினார்கள்.

மேற்கு ஆப்பிரிக்கா மரபு

மேற்கு ஆப்பிரிக்கா மரபு

மேற்கு ஆப்பிரிக்காவில் மக்கள் பெண்களின் கன்னித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். . மணமகளின் தாய் முதல் இரவில் மணமகள் கன்னியாக இருந்தால் அவளுக்கு பணத்தை வெகுமதியாக அளிப்பார்கள். காலையில், தம்பதிகள் பயன்படுத்திய உடைகள் இரத்தக் கறைகளுக்கு பரிசோதிக்கப்படுகின்றன. சில அம்மாக்கள் தங்கள் மகளின் உடையை வீட்டு வாசலில் கொடியாக பறக்கவிடுவார்கள்.

MOST READ: உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா?

மார்குவேசிய மரபு

மார்குவேசிய மரபு

இவர்களின் மரபு மிகவும் அதிர்ச்சிகரமானதாகும். முதல் இரவு அன்று மணமகள் அனைத்து ஆண் விருந்தினர்களுடன் உறவு கொள்வார்கள், இறுதியாகத்தான் மணமகனுடன் உறவு கொள்வார்கள். இது அவர்களின் முதல் இரவை மறக்க முடியாத இரவாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dramatic Rituals of Wedding Night

Read to know the various traditions dramatic rituals of a wedding night
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more