For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நேரத்தில் தூங்குவது உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?

இந்து மதத்தை பொறுத்தவரையில் அதிகாலை நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் நேரடியாக கடவுளை சென்றடையும் என்று கூறுவார்கள்.

|

இந்து மதத்தை பொறுத்தவரையில் அதிகாலை நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் நேரடியாக கடவுளை சென்றடையும் என்று கூறுவார்கள், ஆனால் உண்மையில் காலை நேரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு மாலை நேரமும் முக்கியமானதாகும்.

Does Sleeping In The Evening Bad

பகலும், இரவும் சந்தித்துக் கொள்ளும் இந்த நேரத்தில் தெய்வங்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆசீர்வாதத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நேரத்தில் அவர்களை அவமதிக்கும் வகையான எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் மாலை நேரத்தில் தூங்கக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இது தவிர மாலை நேரத்தில் தூங்கக்கூடாது என்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளது. அது என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடவுளை வரவேற்கும் நேரம்

கடவுளை வரவேற்கும் நேரம்

சூரிய அஸ்தமனத்தைத் தொடர்ந்து மாலை நேரங்களில், மக்கள் வீட்டிலும் சுற்றிலும் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். பல வீடுகளில் மாலை நேரத்தில் பூஜையறையில் விளக்கேற்றி வைப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மாலை நேரத்தில் கண்டிப்பாக வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பார்கள். . இந்தச் செயல் வீட்டிற்கு வெளியே உள்ள தீய சக்திகளைத் தடுக்க உதவும் என்றும், வீட்டிற்குள் வரும் கடவுள்களுக்கு வரவேற்பு சமிக்ஞையை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது.

தேவியின் வருகை நேரம்

தேவியின் வருகை நேரம்

மாலை நேரங்களில், துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வீடுகளுக்குள் நுழைந்து மக்களை ஆசீர்வதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த நேரத்தில், மாணவர்கள் தங்களை படிப்புக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும், பெரியவர்கள் வழிபாட்டிலோ அல்லது பக்தி பாடல்கள் மற்றும் மந்திரங்களைக் கேட்பதிலோ நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. மாலை நேரத்தில் செய்யப்படும் இந்த செயல்கள் தெய்வங்களின் ஆசீர்வாதங்களை பெற உதவுவதாக கூறப்படுகிறது. வழக்கமான ஆசீர்வாதத்தை விட இந்த செயல்கள் கூடுதல் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.

தூக்கம்

தூக்கம்

மக்கள் மாலையில் ஒருபோதும் தூங்கக்கூடாது என்று கூறப்படுகிறது, இது சோம்பல் மற்றும் தாமச போக்கை அதிகரிக்கும். அனைத்து மக்களும் சாத்வா, ராஜஸ் மற்றும் தாமஸ் ஆகிய மூன்று குணங்களால் உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் அர்த்தம் நேர்மறை, முரட்டுத்தனம் மற்றும் சோம்பலைக் குறிக்கும். மாலையில் தூங்கும்போது தாமஸ் குணம் அதிகம் ஊக்குவிக்கப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை உருவாக்கும்.

MOST READ: உலக தூக்க தினம்: உலகை மாற்றியவர்களின் வித்தியாசமான தூங்கும் முறைகள் என்ன தெரியுமா?

ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

பொதுவாகவே மாலை நேரத்தில் தூங்குவது உங்களுக்கு பல அசௌகரியங்களை உருவாக்கும். மாலை தூங்கி எழுந்த பிறகு நாம் அதிக சோர்வாக உணர்வோம், இதனால் இரவிலும் நம்மால் நல்ல தூக்கத்தை பெறமுடியாது.

செரிமானக் கோளாறுகள்

செரிமானக் கோளாறுகள்

மாலையில் தூங்குவது செரிமானத்தையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், அந்த நேரத்தில் தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக பிற பயனுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுவது நல்லது.

நமது கலாச்சாரமல்ல

நமது கலாச்சாரமல்ல

பெரும்பாலான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்குப் பின்னால், கலாச்சாரரீதியான சில அம்சங்களும், செயல்முறைகளும் இருக்கிறது. நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. பண்டைய காலம் முதலே மாலை நேரத்தில் தூங்குவது நமது கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றாகும்.

வேலைகளை முடிக்கும் நேரம்

வேலைகளை முடிக்கும் நேரம்

மாலை நேரம் என்பது அனைத்து விதமான பணிகளையும் முடிப்பதற்கான காலம் ஆகும். கணக்குகளைப் பார்ப்பது, குழந்தைகளின் வீட்டுப்பாடம் செய்வது, அருமையான நாள் வழங்கியதற்காக நன்றி தெரிவிப்பதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுவது உட்பட அன்றைய தினம் செய்யப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நம்மை தயார்படுத்துங்கள். அன்றைய நாளின் நமது வெளியுலக வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் நேரமாக இது இருக்கிறது.

MOST READ: கொடூரமாக கொல்லப்பட்ட உலகத்தின் முக்கியமான தலைவர்கள்... உலக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்...!

கலந்துரையாடும் நேரம்

கலந்துரையாடும் நேரம்

மரபுகளின் படியும் சரி, மருத்துவரீதியாகவும் சரி மாலை நேரத்தில் தூங்குவது என்பது பொருத்தமற்றதாக இருக்கிறது. மாலை நேரம் என்பது ஒரு அற்புதமான நேரமாகும், அதனை வீட்டில் இருந்து இனிமையான வானிலையை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். இந்த பொன்னான நேரத்தை தூங்குவதில் வீணடிப்பதை விட, இந்த நேரத்தை நம் தனிப்பட்ட மற்றும் குடும்ப வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: sleep god தூக்கம்
English summary

Does Sleeping In The Evening Bad

Read to know why we should not sleep in evening.
Story first published: Friday, March 13, 2020, 16:22 [IST]
Desktop Bottom Promotion