For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு சனிக்கிழமையும் இத செஞ்சா.. ஏழரை சனியின் தாக்கம் குறையுமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க...

ஒருசில செயல்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் சனி பகவானை மகிழ்வித்து ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

|

நீதிமான் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு 2023 ஜனவரி 17 ஆம் தேதி சென்றார். சனி பகவான் ஒரு ராசிக்கு செல்லும் போது, அதன் தாக்கம், முன் மற்றும் பின் இருக்கும் ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசிக்கு சென்றதால், மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி நடக்கிறது. அதில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாம் கட்டமும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமும் தொங்குகிறது.

Do These Remedies On Every Saturday To Get Relief From The Effect Of Elarai Sani In Tamil

சனி பகவானின் தாக்கம் ஒரு ராசிக்கு ஏழரை ஆண்டுகள் இருக்கும். இந்த ஏழரை ஆண்டுகள் சனி பகவான் பல சோதனைகளை தருவதோடு, பல இழப்புக்களையும், பல நன்மைகளையும் வழங்குவார். மொத்தத்தில் வாழ்க்கையைப் புரிய வைப்பார். ஆனால் ஒருசில செயல்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் சனி பகவானை மகிழ்வித்து ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிகாரம் #1

பரிகாரம் #1

சனிக்கிழமைகளில் இரும்பு, கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு விதைகள் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்வதன் மூலம், சனிபகவானை மகிழ்விக்கலாம். அதுவும் ஏழரை சனி நடப்பவர்கள், இதை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வருவதன் மூலம், சனியின் அசுப பலன்களைத் தவிர்க்கலாம்.

பரிகாரம் #2

பரிகாரம் #2

சனி பகவான் அரச மரத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமானால், சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். அத்துடன் சனி ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஏழரை சனி நடப்பவர்கள் செய்து வர, சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

பரிகாரம் #3

பரிகாரம் #3

ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் இருக்கும் கோவிலுக்கு சென்று, அவருக்கு எள்ளு எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயுடன் கருப்பட்டி சேர்த்து அர்ச்சனை செய்தால், சனி தோஷம் பாதி குறையும் என்பது நம்பிக்கை.

பரிகாரம் #4

பரிகாரம் #4

ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க சனி பகவானை மட்டும் தான் வழிபட வேண்டும் என்பதில்லை. அனுமனை வழிபடுவதன் மூலமும், அனுமன் சாலிசாவை பாராயண்ம் செய்வதன் மூலமும், சனியின் தாக்கத்தை மற்றும் அசுப பலன்களைக் குறைக்கலாம்.

பரிகாரம் #5

பரிகாரம் #5

ஒவ்வொரு சனிக்கிழமையும் பறவைகள், விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலமும் சனியின் தாக்கம் குறையும். குறிப்பாக ஏழரை சனி நடப்பவர்கள் இச்செயலை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வந்தால், ஏழரை சனியால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

பரிகாரம் #6

பரிகாரம் #6

சனி பகவானை மகிழ்விக்க விரும்பினால், ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்ததை தானம் செய்யுங்கள். இதனால் சனி பகவானின் கோபம் குறைவதோடு, ஏழரை சனி உங்களுக்கு நடந்தால், அதன் தாக்கமும் குறையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do These Remedies On Every Saturday To Get Relief From The Effect Of Elarai Sani In Tamil

In this article, we share some astrological remedies to get relief from the effects of elarai sani. Read on to know more...
Story first published: Saturday, January 21, 2023, 13:42 [IST]
Desktop Bottom Promotion