Just In
Don't Miss
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…
ஒவ்வொரு நாளும் இனிமையானதாகவும், பிரச்சனைகள் இல்லாததாகவும் இருக்க தான் அனைவரும் விரும்புவர். வாழ்க்கை என்றால் அதில் பிரச்சனை இருக்க தானே செய்யும். ஆனால், அதனை சரியான முறையில் கையாண்டு வெளிவந்தால் தான் அதனை கடக்க முடியும். அந்த வகையில், இந்த நாளை இனிமையாக்குவதற்கு உங்களுக்கு உதவும் வகையிலான பலன்கள் தற்போது பார்க்கலாம். இன்று உங்களது ராசிக்கான பலன்களை குறித்து இப்போது தெரிந்து கொள்வோம். இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும், யாருக்கு சிரமங்கள் அதிகரிக்கும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
பணப்பிரச்சனைகள் தீரும் நாள். பண பாக்கிகள் வசூலாகும். வேலை பார்ப்பவர்கள் இன்று கொஞ்சம் பிஸியாக இருப்பர். பணிசுமையும் இன்று அதிகமாக இருக்கும். வணிகர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். உழைப்பின் பயனை கூடிய விரைவில் அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனான கருத்துவேறுபாடு மறைந்து, உறவு மேலும் இனிமையாகும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8:45 மணி வரை

ரிஷபம்
செய்யும் வேலையில் திருப்தியில்லாதது போல் உணர்ந்து மாற்று வேலைக்கு திட்டமிட்டவர்களுக்கு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரப்போகும் நேரமிது. வணிகர்கள், சிறு முதலீட்டில் பெரும் லாபத்தை ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகரிக்கக்கூடும். வரவிற்கு ஏற்ப செலவு செய்ய கற்றுக்கொள்வது சிறந்தது. குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக காணப்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

மிதுனம்
எந்த விஷயத்திலும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கான நல்ல முடிவுகளை கிடைக்கும். பணவரவு உண்டு. அலுவலக பணியில் பரபரப்பாக காணப்படுவீர்கள். வியாபார மாற்றத்திற்கான சரியான நேரம் இதுவல்ல. பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். விருந்தினர் வருகைக்கு வாய்ப்புள்ளது. வீட்டு சூழலில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 9:25 மணி வரை

கடகம்
உங்களது திறமையால் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அதற்காக கவலையோ, பதட்டமோ பட அவசியமில்லை. நேர்மையும், கடின உழைப்பும் உங்களது பலமாகும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான புதிய வழி பிறக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள், வீண் விவாதத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். வீண்விவாதம் பெறும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிட்டும். விருப்பமில்லை என்றாலும், நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உடல்நிலையை பொருத்தவரை, கண்களில் ஏதேனும பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:15 முதல் மதியம் 1 மணி வரை

சிம்மம்
சிறப்பான செயல்திறனால் அலுவலகத்தில் மரியாதை கூடும். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்களது கடுமையான உழைப்பிற்கான பலனை கூடிய விரைவில் அனுபவிப்பீர்கள். போக்குவரத்து தொடர்பான பணியை மேற்கொள்பவர்களுக்கு, நிதி நிலை உயரக்கூடிய நேரம். இருந்தாலும், விதிகள் மற்றும் சட்டங்களை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. சிறு அலட்சியம் கூட பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும். சொத்துகள் தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சமாதான நாளாக அமையும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கன்னி
வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இன்று அமையும். நல்ல வருமானத்தை பார்ப்பீர்கள். புதிய தொழில் தொடர்பான திட்டத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் பிற பணிகள் தொடர்பான விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கண்மூடித்தனமாக சக ஊழியர்களை நம்ப வேண்டாம். பெரிய செலவு எதாவது செய்வதற்கு எண்ணம் இருந்தால், அதனை கைவிடுவது நல்லது. பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு நேரம் ஒதுக்கினால், நெருக்கம் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்
பண விவகாரத்தை பொறுத்தவரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று எந்தவொரு நிதி பரிவர்த்தனையும் செய்வதாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலை செய்பவர்களுக்கு மூத்த அதிகாரிகளுடனான நல்லுறவு மேம்படும். அவரது சிறிய பேச்சைக் கூட புறக்கணிக்க மறக்காதீர்கள். சில சவால்களுக்கு பிறகு வணிகர்கள் சரியான பலனை அடையலாம். ஆரோக்கியம் குறித்து கூற வேண்டுமென்றால், உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை. வறுத்த, பொரித்த, காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்
பிறருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால், அதனை ஒருபோதும் தவறவிட்டு விடாதீர்கள். ஒரு சிறு உதவி வாழ்வில் பெரும் பிரச்சனைக்கு முடிவினை கொண்டு வரும். பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட கால நிதி பிரச்சனை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிட்டும். அலுவலக நிலுவை பணிகளை விரைந்து முடிக்க முயற்சி செய்யவும். அலட்சியப்போக்கு வேலையில் பிரச்சனையை உண்டாக்கக்கூடும். வணிக விரிவாக்கத்திற்கு சாதகமான நேரமிது. குடும்ப வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும். உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வாழ்க்கை துணையுடனான காதல் அதிகரிக்கும் நாள். உங்கள் உடல்நலம் பற்றிப் பேசும்போது, அதீத சோர்வு காரணமாக சற்று மோசமாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு
உங்கள் எதிரிகளுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளின் கை ஓங்கும் நாள் என்பதால் உஷாராக இருக்க வேண்டும். பணத்தைப் பற்றிப் பேசினால், மிகவும் கடினமான போராட்டத்திற்குப் பிறகு பணத்தைப் பெறலாம். கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் மனகசப்பால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். வணிகர்கள் சிறு இழப்பை சந்திக்க நேரிடும். வணிகம் தொடர்பான முடிவுகளை விரைவாக எடுக்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்
பழைய கடன் தொல்லை தலைதூக்கும் நாள். கடனை திரும்பப்பெற கடன்காரர்களின் அழுத்தம் அதிகரிக்கலாம். அதுபோன்ற தருணங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். பொருளாதாரம் குறித்த முடிவுகளை மிகுந்த சிந்தனைக்கு பிறகு எடுப்பது சிறந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் எரிச்சலாக உணர்வீர்கள். உங்கள் நடத்தையை கொஞ்சம் மாற்றுவதன் மூலம் நிலையை சாதகமாக மாறுவதை உணர்வீர்கள். வேலை ஒருங்கிணைப்பை உங்களது வேலையின் மூலம் பிறருக்கு நிரூபிப்பீர்கள். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் பிற்பகல் 2:05 மணி வரை

கும்பம்
திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் நிறைந்து இருக்கும். வாழ்க்கை துணையாலும், குழந்தைகளாலும் இன்று மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். பண வரவு நிம்மதி தரும். புதிய வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் பாராட்டை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:45 மணி வரை

மீனம்
இன்று உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டிய நாள். வீண் சண்டைகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பிரச்சனை பெரியதாகக்கூடும். தேவையற்ற குழப்பங்கள் மனதை ஆட்கொள்ளலாம். வியாபாரத்தின் புதிய முயற்சிகளிலும், கடும் உழைப்பினாலும் நல்ல பலனை பெறுவீர்கள். பண விரயம் அதிகமாகும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றிப் பேசும்போது, அதிக மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 முதல் 9 மணி வரை