For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!

வாழ்க்கையின் சுக-துக்கங்களை பகிர்ந்து கொள்வதிலிருந்து சவாலான சூழ்நிலைகளை ஒன்றாக எதிர்கொள்வது வரை அனைத்திலும் வாழ்க்கைத்துணையின் பங்கு உள்ளது.

|

அனைவரின் வாழ்க்கையிலும் வாழ்க்கைத்துணையின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையின் சுக-துக்கங்களை பகிர்ந்து கொள்வதிலிருந்து சவாலான சூழ்நிலைகளை ஒன்றாக எதிர்கொள்வது வரை அனைத்திலும் வாழ்க்கைத்துணையின் பங்கு உள்ளது. சரியான வாழ்க்கைத்துணையுடன் வாழும்போது மட்டுமே திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் திருமண வாழ்க்கை பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உங்கள் துணையின் எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும், அசுத்தமானதாக இருக்கக்கூடாது என்று சாணக்யா கூறியுள்ளார்.

Chanakya Niti: Qualities Should Check While Choosing Life Partner

உங்கள் வாழ்க்கைத்துணையின் தேர்வு உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனவே உங்கள் வாழ்க்கைதுணையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனம் அவசியம். திருமண விஷயங்களில் ஒருபோதும் அவசரப்படாதீர்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன், அவர்களைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது என்று சாணக்கியர் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் உங்கள் துணையைப் பற்றி இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வது உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுமை

பொறுமை

அனைவரின் சூழ்நிலைகளும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இது காலப்போக்கில் மாறலாம். வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது இயற்கைதான். அதுபோன்ற சூழலில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். திருமணத்திற்கு முன் இதை கண்டிப்பாக பாருங்கள். ஒரு பொறுமையான நபர் பிரச்சனையில் உங்களுடன் நின்று உங்களுக்கு சரியான பாதையைக் காட்டுவார். உங்கள் வாழ்க்கை துணையிடம் இந்த குணங்கள் இருந்தால், மிகப்பெரிய சவாலை கூட எளிதில் சமாளிக்கலாம். மேலும், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கடவுள் நம்பிக்கை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். எனவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள்.

மனதின் நற்குணம்

மனதின் நற்குணம்

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் முகத்தை மட்டும் பார்க்காமல் மனதையும் பார்க்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால் அழகு காலப்போக்கில் மங்கிவிடும், ஆனால் மனத்தின் அழகு எப்போதும் அழிவதில்லை. உள் அழகு அல்லது மனதின் நல்வாழ்வு உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை அழகாக வைத்திருக்கும். உங்கள் வாழ்க்கை துணைக்கு இந்த குணங்கள் இருந்தால், அவர்கள் குடும்பத்தை ஒன்றிணைப்பார்கள். குடும்ப பந்தத்தை உடைக்க அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

 பரஸ்பர மரியாதை

பரஸ்பர மரியாதை

எந்தவொரு உறவிலும் பரஸ்பர மரியாதை மிகவும் முக்கியமானது என்கிறார் சாணக்கியர். கணவன்-மனைவி உறவில் இருவரும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். அப்போதுதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத்துணை பெரியவர்களை மதிக்க வேண்டும். அதனால் அவர்கள் உங்கள் பெற்றோரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றுவார்கள்.

 கோபம்

கோபம்

திருமணத்திற்கு முன் உங்கள் துணையின் கோபத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் உறவுகளை உடைக்கிறது. கோபக்காரன் சரி, தவறு என்ற வித்தியாசத்தை மறந்து விடுகிறான். கோபக்காரன் தன் வாழ்க்கை துணையிடமும் இதையே கடைப்பிடிப்பான். இதனால், உங்கள் உறவு முறியலாம்.

 பேசும் முறை

பேசும் முறை

பேச்சு ஒரு நபரின் உறவை இணைக்கிறது. கணவன்-மனைவியின் இனிய பேச்சால்தான் திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவுகிறது. வாழ்க்கை துணையின் கசப்பான வார்த்தைகள் திருமண வாழ்க்கையில் இடைவெளியை உண்டாக்கும். எனவே திருமணத்திற்கு முன் உங்கள் துணையின் பேசும் முறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Qualities Should Check While Choosing Life Partner

Find out the qualities should check while choosing a life partner, according to Chanakya.
Desktop Bottom Promotion