For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பழிப்பு குற்றத்திற்கு மற்ற நாடுகளில் கொடுக்கப்படும் மிருகத்தனமான தண்டனைகள்!

உலகின் பல நாடுகளில் கற்பழிப்பு குற்றங்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

|

இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும், இன்னமும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். உலகிலேயே மிகவும் மோசமான ஒரு குற்றம் என்றால் அது பாலியல் வன்புணர்வு என்னும் கற்பழிப்பு குற்றமாகத் தான் இருக்க முடியும். இந்தியாவில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்றைய சமூகத்தில் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

MOST READ: மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

சிறிய குழந்தைகளையும் விட்டு வைக்காமல் சில காம கொடூரர்கள் மோசமாக நடந்து கொள்வதோடு, சமூகத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். இம்மாதிரியான குற்றவாளிகள் இந்தியாவில் மட்டுமே சுதந்திரமாக எந்தவொரு பயமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உலகின் பல நாடுகளில் இம்மாதிரி கற்பழிப்பு குற்றங்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த நாடுகளில் கற்பழிப்பு குற்றங்களை புரியவே பலர் அஞ்சுவார்கள்.

இக்கட்டுரையில் கற்பழிப்பு குற்றங்களுக்கு மற்ற நாடுகளில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனா

சீனா

சீனாவில் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் உள்ளது. சில சமயங்களில் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, இங்கு குற்றவாளிகளின் ஆணுறுப்பு துண்டிக்கப்படுமாம்.

ஈரான்

ஈரான்

ஈரானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை தூக்கிலிடுவார்கள் அல்லது பொது மக்கள் முன்னிலையில் சுட்டு கொல்வார்கள்ம். சில சமயங்களில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியால் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பாரார். இருப்பினும், 100 சவுக்கடி அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவார்.

நெதர்லாந்து

நெதர்லாந்து

எந்த வகையான பாலியல் குற்றங்களும், ஏன் விருப்பமில்லாத முத்தங்கள் கூட நெதர்லாந்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றவாளிகளுக்கு வயதைப் பொறுத்து 4 முதல் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

வேறு எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு சட்டம் நெதர்லாந்தில் உள்ளது. அது என்னவென்றால் விபச்சாரம் செய்பவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தாலும், நெதர்லாந்தில் 4 வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும்.

ப்ரான்ஸ்

ப்ரான்ஸ்

ப்ரான்ஸில் கற்பழிப்பு குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு சித்திரவதையுடன் 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தண்டனை 30 வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தைப் பொறுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஒருவர் கற்பழிப்பு குற்றத்தைப் புரிந்தால், குற்றவாளிகளை நான்கு நாட்களில் தலையில் சுட்டு மரணத்தை தண்டனையாக அளிப்பார்களாம்.

வட கொரியா

வட கொரியா

வட கொரியாவில் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு பாசம் எதுவும் பார்ப்பதில்லை. இங்கு பாலியல் பலாத்காரத்திற்கு உடனடியாக தலையில் சுட்டுக் கொல்லும் படி நீதி வழங்கப்படுமாம்.

ரஸ்யா

ரஸ்யா

ரஸ்யாவில், பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு 3 வருடத்திற்கும் அதிகமாக சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பொறுத்து, தண்டனையானது 30 ஆண்டுகள் வரை செல்லலாம்.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றத்தைப் புரிந்து நிரூபிக்கப்பட்டுவிட்டால், அந்த நபர் பொது மக்களின் முன்னிலையில் தூக்கிவிடப்படுவார்.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில், கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனையாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு இழப்பீடு எதுவும் இல்லை. மேலும் குற்றம் புரிந்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுவர்.

க்ரீஸ்

க்ரீஸ்

க்ரீஸில், குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

எகிப்து

எகிப்து

எகிப்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நபர் பொது இடங்களில் தூக்கிலிடப்படுகிறார். இதனால் இந்த கொடூர குற்றத்திற்கான விளைவுகளை மக்கள் அறிந்து, இனிமேல் இம்மாதிரியான குற்றத்தினை யாரும் புரிய யோசிப்பர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் இருவகையான சட்டங்கள் உள்ளன. ஒரு கற்பழிப்பு வழக்கு கூட்டாட்சி சட்டத்தின் கீழ் வந்தால், பாலியல் பலாத்காரத்திற்கு அபராதம் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படலாம். கற்பழிப்பு தண்டனைக்கான மாநில சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.

நார்வே

நார்வே

நார்வேயில், கற்பழிப்பு குற்றத்திற்கு 4 முதல் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் இது பாதிக்கப்பட்டவரின் பாதிப்பைப் பொறுத்து ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இஸ்ரேலில், பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தது 4 வருடங்கள் முதல் அதிகபட்சமாக 16 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brutal Punishments Against Rape All Over The World

Here are some brutal punishments against rape all over the world. Read on...
Story first published: Thursday, December 19, 2019, 17:14 [IST]
Desktop Bottom Promotion