For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது?

|

திருமண சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சாரத்திற்கும் மாறுபடும். பெரும்பாலான திருமண சடங்குகளில் மணமக்கள் உறுதிமொழி ஏற்பது கண்டிப்பாக இருக்கும், மேலும் மணமக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுப்பது, நமது நாட்டை பொறுத்தவரை மாங்கல்யம் கட்டுவது என பல்வேறு விதமான திருமண சடங்குகள் இருக்கும்.

திருமணம் என்பது உலகம் முழுவதும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். பொதுவாக திருமணம் நடைபெறும் இடத்தை புக் செய்வது, திருமணத்திற்கான ஆடைகளை வாங்குவது, வரும் விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பது இதுதான் நாம் அறிந்த திருமணம். ஆனால் சில நாடுகளில் திருமணங்கள் வேறுவிதமாக நடத்தப்படுகிறது. இதில் சில வேடிக்கையானதாகவும், சில அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. இந்த பதிவில் சில விசித்திர திருமண சடங்குகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துஜியா மக்களின் அழுகை சடங்கு, சீனா

துஜியா மக்களின் அழுகை சடங்கு, சீனா

சீனாவின் துஜியா மக்கள் திருமண நாளுக்கு 30 நாட்களுக்கு முன்னர் அழுவதன் மூலம் திருமணத்திற்குத் தயாராகிறார்கள். மணமகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அழுகிறாள். 10 நாட்களுக்குப் பிறகு, அவரின் அம்மாவுடன் சேர்ந்து அழுவார்கள், பின்னர் பத்து நாட்களுக்குப் பிறகு, அவளுடைய பாட்டி, குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் தினமும் ஒரு மணி நேரம் அழுகிற வரை இது தொடர்கிறது. அதிர்ஷ்டவசமாக இது சோகத்தின் செயல் அல்ல, ஆனால் இது உண்மையில் மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாகும். ஏனெனில் பெண்கள் அனைவரும் வெவ்வேறு தொனியில் அழுகிறார்கள், இவர்களின் அழுகை சத்தம் கிட்டத்தட்ட ஒரு பாடல் போல ஒலிக்கிறது.

மணமகள் மீது எச்சில் துப்புதல், மாசாய் நேஷன், கென்யா

மணமகள் மீது எச்சில் துப்புதல், மாசாய் நேஷன், கென்யா

கென்யாவின் மாசாய் தேசத்தின் மிகவும் வினோதமான திருமண சடங்குகளில் ஒன்று இதுவாகும். மாசாய் மக்கள் நடத்திய திருமண விழாவில், மணமகளின் தலை மொட்டையடித்து, ஆட்டுக்குட்டி கொழுப்பு மற்றும் எண்ணெய் அவரது தலையில் தடவப்படுகிறது. மணமகளின் தந்தை மகளின் தலை மற்றும் மார்பகங்களை துப்பி ஆசீர்வதிக்கிறார். துப்புவது பொதுவாக அவமானத்தின் அடையாளமாகும், ஆனால் மாசாய் தேசத்தில் இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கருதப்படுகிறது. பின்னர் அவர் தனது கணவருடன் புறப்படுகிறார். கணவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் தங்கியிருக்கும் வீட்டில் தங்கமாட்டார், பின்னர் அவரது மாமியார் தலையை மொட்டையடிக்கப்படுகிறார். இது திருமண விழாவை கணவனும், மனைவியும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்கப்போவதை அறிவிக்கிறது.

மணமகனின் கால்களை அடிப்பது, தென்கொரியா

மணமகனின் கால்களை அடிப்பது, தென்கொரியா

தென் கொரியாவில் திருமண விழாவுக்குப் பிறகு "மணமகனின் கால்களை அடிப்பது" என்ற சடங்கு நடைபெறுகிறது. மணமகனின் நண்பர்கள் அவரது காலணிகளை அகற்றி, அவரது கால்களை ஒரு கயிறு அல்லது கவசத்துடன் கட்டிக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவரது கால்களை தரையில் இருந்து தூக்கி, அவரது கால்களை ஒரு குச்சியால் அல்லது உலர்ந்த மஞ்சள் கோர்வினாவால் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். மஞ்சள் கொர்வினா ஒரு வகையான மீன், இது முதல் திருமண இரவுக்கு முன்பு மணமகனை வலிமையாக்கும் என்று நம்பப்படுகிறது. இது வேதனையாக இருக்கலாம், ஆனால் இது கொடூரத்தை விட வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு வேடிக்கையான பாரம்பரியம், இதன் பின்னணியில் மணமகனின் வலிமையையும் அறிவையும் சரிபார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சோதனையின் போது அவர் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுவார். இந்த வேடிக்கையான சடங்கு கொரிய திருமண கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

MOST READ: சாஸ்திரத்தின் படி இந்த பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் பர்ஸில் இருந்தால் பணம் உங்களை தேடி வருமாம்...!

மணப்பெண்ணை வாசலில் தூக்கிக்கொண்டு செல்வது

மணப்பெண்ணை வாசலில் தூக்கிக்கொண்டு செல்வது

மணப்பெண்ணை வாசலில் சுமந்து செல்லும் பாரம்பரியம் ஒரு புதிய பாரம்பரியம் அல்ல. இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது மற்றும் சில வேறுபட்ட தோற்றங்களைக் கொண்டுள்ளது. ஒரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இந்த சடங்கு இடைக்கால ஐரோப்பாவில் தொடங்கியது, அங்கு ஒரு மணமகள் தனது கால்களின் வழியாக தீய சக்திகளால் பாதிக்கப்படக்கூடியவர் என்று பலர் நம்பினர். எந்த தீய சக்திகளையும் கொண்டுவருவதைத் தவிர்ப்பதற்காக, மணமகன் மணமக்களை தங்கள் புதிய வீட்டிற்கு தூக்கிச் சென்றார். மேலும், சில பழங்காலத்தவர்கள் மணமகள் தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறுவதில் சிறிதும் தயக்கம் இல்லை என்பதைக் காட்ட வேண்டும் என்று நம்பினர், அதனால் வாசலின் வீட்டு வாசலுக்குதூக்கிச் செல்லப்பட்டனர்.

பேய்களை விரட்ட விலங்குகளுடன் திருமணம் செய்வது, இந்தியா

பேய்களை விரட்ட விலங்குகளுடன் திருமணம் செய்வது, இந்தியா

இந்தியாவின் சில பகுதிகளில் பேய்கள் மக்களின் உடலில் வசிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக பற்களுடன் பிறக்கும் குழந்தைகள், விகாரமான மற்றும் முகச்சிதைவு கொண்ட குழந்தைகள் பேய்களால் பிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வித்தியாசமான சாபத்தை உடைக்க ஒரே வழி அந்த பெண் ஒரு விலங்குடன், பொதுவாக ஒரு ஆடு அல்லது நாயை திருமணம் செய்து கொள்வதுதான். அவர்கள் ஒரு ஆடம்பரமான திருமண விழாவை மது மற்றும் நடனம் கொண்டு நடத்துகிறார்கள். இது ஒரு கேலி விழாவைத் தவிர வேறொன்றுமில்லை. இது தீயசக்திகளை விரட்டும் ஒரு சடங்கு மட்டுமே அதன்பின் அந்த பெண் யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மணமகளை கருப்பாக்குதல், ஸ்காட்லாந்து

மணமகளை கருப்பாக்குதல், ஸ்காட்லாந்து

மணமகளின் மீது கருப்பு சாயம் பூசுவது என்பது ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு சடங்காகும். இது திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஒரு வெறுக்கத்தக்க சடங்கின் ஒரு பகுதியாகும். இந்த சடங்கில் மணமகள் அவர்களின் நண்பர்களால் பல பொருட்களைக் கொண்டு அலங்கோலமாக்கடுகிறார். தீய சக்திகளை விரட்டுவதற்காக மணப்பெண் மற்றும் மணமகனை சூட் மற்றும் மாவில் மூடும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் இது இன்னும் நடக்கிறது.

MOST READ: ஆம்பளையா பொறந்தது ஒரு குத்தமா? 136 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த 'காம' சைக்கோ...!

 கய்ஸ் அலா கச்சு, கொள்ளையர்களின் செயல்முறை

கய்ஸ் அலா கச்சு, கொள்ளையர்களின் செயல்முறை

கய்ஸ் அலா கச்சு என்பது மணமகளை கடத்திச் செல்லும் ஒரு வித்தியாசமான சடங்காகும். இது உலகம் முழுவதும் வரலாறு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்த சடங்கு "மணமகள் கடத்தல்" என்றும் அழைக்கப்படுகிறது. இளைஞன் ஒரு பெண்ணை கடத்தினால் அல்லது வஞ்சகத்தால் கடத்துகிறான், பெரும்பாலும் நண்பர்கள் அல்லது ஆண் உறவினர்களுடன் வருவான். அவர்கள் அவளை அவரது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள், அங்கு ஆணின் பெண் உறவினர்கள் அவனை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக மேல் தாவணியை அணிய அந்த பெண்ணை சமாதானப்படுத்துவார்கள், அதுவரை அந்தபெண் ஒரு அறையில் வைக்கப்படுகிறாள். ரோமானி மற்றும் கிர்கிஸ்தான் போன்ற சில கலாச்சாரங்களில் மணமகள் கடத்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

 முத்த பாரம்பரியம், ஸ்வீடன்

முத்த பாரம்பரியம், ஸ்வீடன்

திருமணத்தின் போது முத்தம் கொடுப்பது சாதாரணமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த சடங்கு அப்படிப்பட்டதல்ல. இந்த சடங்கில் நீங்கள் விரும்பினால் மணமகன், மணமகள் யாருக்கு வேண்டுமென்றாலும் முத்தம் கொடுக்கலாம். திருமணத்தின் போது மணமகன் ஏதாவது ஒரு காரணத்திற்காக நகர்ந்து செல்ல நேர்ந்தால் திருமணமாகாத இளைஞர்கள் மணப்பெண்ணை முத்தமிடலாம். அதேபோல மணமகனுக்கும் திருமணம் ஆகாத பெண்கள் முத்தமிடலாம். இது ஸ்வீடனின் தனித்துவமான பாரம்பரியமாகும்.

MOST READ: ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா? இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...!

பண நடனம்

பண நடனம்

பணம் நடனம் என்பது பல்வேறு கலாச்சாரங்களில் சில திருமண வரவேற்புகளில் ஒரு நிகழ்வாகும். இது 1990-ல் போலந்தில் தோன்றியது. பண நடனத்தின் போது, ஆண் விருந்தினர்கள் மணமகளுடன் நடனமாட பணம் செலுத்துகிறார்கள், சில சமயங்களில் பெண் விருந்தினர்கள் மணமகனுடன் நடனமாட பணம் செலுத்துகிறார்கள். திருமண வரவேற்பின் போது, மணமகள் தனது தந்தையுடன் நடனமாடுவார், அதே நேரத்தில் ஒரு உறவினர் ஒரு மேலங்கியை வைத்திருக்கிறார். கவசத்தில் பணத்தை வைக்கும் விருந்தினர்கள் மணமகனுடன் நடனமாடும் வாய்ப்பை வென்றனர். இந்த முறை மணப்பெண்ணின் தோழிகள், பணிப்பெண்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Wedding Rituals in Various Cultures

Read to know some bizarre wedding rituals in various cultures.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more