For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆருத்ரா தரிசனம்… உத்தரகோசமங்கை மரகத நடராஜரின் மகிமைகள்!

|

புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 9ஆம் தேதியன்று மரகத நடராஜருக்கு ஆண்டு ஒரு முறை நடத்தப்படும் சந்தனக் காப்பு களைதல் நிகழ்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற இருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மரகத நடராஜரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் நிறைந்தது என்று கருதப்படுவதால், களையப்பட்ட இந்த சந்தனத்தை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு பணம் கொடுத்து வாங்கிச் செல்வதுண்டு.

Arudra Darisanam in Uthirakosamangai Temple on January 10

தாதாடும் பூஞ்சோலைத் தாய் நமைஆளும்

மாதாடு பாகத்தன் வாழ்பதி என் கோதாட்டி

பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்

உத்தர கோச மங்கை ஊர்...

இது திருவாதவூரார் என்றழைப்படும் மாணிக்கவாசப்பெருமான் உத்தரகோச மங்கையைப் பற்றி புகழ்ந்து பாடிய பாடலாகும். மேலும், தன்னுடைய திருவெம்பாவை பாடலிலும் இத்தலத்தைப் பற்றி குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உத்தரகோசமங்கை நடராஜர்

உத்தரகோசமங்கை நடராஜர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உள்ளது மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி கோவில். உலகப் புகழ்பெற்ற சிவாலயமாகும். உலகிலேயே, அதிக முறை கொள்ளை முயற்சி நடைபெற்ற கோவில் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம். இங்குள்ள சுமார் 6 அடி உயரம் உள்ள மரகதத்தால் ஆன நடராஜர் சிலை தான். உலகிலுள்ள 1087 சிவாலயங்களில் எல்லாமே நடராஜர் சிலைகள் அனைத்துமே ஐம்பொன்னால் செய்யப்பட்டிருக்கும். அதைத்தான் திருவிழா நாட்களில் வீதியுலா வரச்செய்வார்கள்.

மரகத நடராஜர்

மரகத நடராஜர்

உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள நடராஜர் சிலை மட்டும் தான் முழுவதும் மரகதத்தால் உருவான சிலையாகும். பொதுவாக மரகதம் ஒலி எழுப்பினால் உடைந்து போகும் என்பார்கள். பின்பு எப்படி உளியை வைத்து மரகத நடராஜரை செதுக்கினார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த மரகத நடராஜர் சிலையானது மனதால் நினைத்து சுயம்புவாக உருவானதாக சொல்லப்படுகிறது.

ராவணன் மண்டோதரி திருமண தலம்

ராவணன் மண்டோதரி திருமண தலம்

உலகில் உருவான சிவாலயங்களில் முதல் சிவாலயமாக இது கருதப்படுகிறது. சிவபெருமான் வேதாகமங்களின் சூட்சும ரகசியத்தை பார்வதிக்கு உபதேசித்த இடமாகும். அதனால் தான் இந்த ஊருக்கு உத்திரன் (ருத்ரன்)+ மங்கை+ கோசம் (ரகசியம்) உத்தரகோசமங்கை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு ஆதி சிதம்பரம் என்ற பெயரும் உண்டு. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடைபெற்றது. மூலவரான மங்களநாத சுவாமியே முன்னின்று அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாக ஐதீகம்.

ராஜ தோற்றத்தில் நடராஜர்

ராஜ தோற்றத்தில் நடராஜர்

ஆதி சிதம்பரம் என்று சொல்லப்படும் இங்கு நடராஜர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்ட மறுநாள் சிதம்பரத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டையும் பிரதிஷ்டை செய்தது. சாட்சாத் சண்முக வடிவேலன் தான். உலகிலுள்ள மற்ற சிவாலயங்களில் உள்ள நடராஜர் சிலைகள் அனைத்துமே இவ்விரண்டு மூலவர்களையும் பார்த்து தான் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவ்விரண்டு சிலைகளிலும் கழுத்திலும் இடுப்பிலும் பாம்பு கிடையாது. தலையில் கங்கை கிடையாது. புலித்தோல் உடையும் கிடையாது. இவ்விரண்டு சிலைகளுமே ராஜ தோற்றத்தில் உள்ளன.

பாம்பின் தலைமீது நடராஜர்

பாம்பின் தலைமீது நடராஜர்

மற்றொரு சிறப்பு என்னவெனில், பொதுவாக நடராஜர் சிலைகள் அனைத்துமே, இடக்கால் தூக்கியபடி அந்தரத்தில் நிற்கும். வலது காலின் நுனியில்(மதுரையில் கால் மாற்றி ஆடியதைத் தவிர) முயலகக் குறும்பன் என்னும் அசுரனை நசுக்கிக்கொண்டு காட்சியளிப்பார். ஆனால், உத்தரகோசமங்கை கோவிலில், நடராஜரின் திருவடியானது பாம்பின் தலைமீது வைத்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும்.

ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு

ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு

இந்த நடராஜர் சிலையை வெளியே கொண்டுவரமுடியாது. இச்சிலையை உள்ளேயே வைத்து சந்நிதி கட்டப்பட்டுள்ளது. அதோடு, நடராஜர் மரகதத்தால் உருவானதால், சிறு சிறு ஒளி, ஒலிகளும் நடராஜர் சிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், ஆண்டு முழுவதும் அச்சிலையிலிருந்து அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி குளிர்ச்சியாகவே வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான, திருவாதிரை தினத்தன்று மட்டுமே, சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்பு மீண்டும் சந்தனத்தால் மூடிவைக்கப்படும்.

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

இந்த ஆண்டு வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி, வரும் ஜனவரி 9ஆம் தேதியன்று சந்தனக்காப்பு களைதல் நிகழ்வு நடைபெறும். அதையடுத்து ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை 4.30 மணி முதல், மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் மகா தீபாராதனையும், அருகிலுள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தபெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறும்.

சந்தனத்தின் குணம்

சந்தனத்தின் குணம்

ஆருத்ரா தரிசன நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மரகத நடராஜரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் நிறைந்தது என்று கருதப்படுவதால், களையப்பட்ட இந்த சந்தனத்தை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு பணம் கொடுத்து வாங்கிச் செல்வதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Arudra Darisanam in Uthirakosamangai Temple on January 10

The annual Santhana Kappu ceremony will be held at the renowned Uttirakosamangai Mangalnatha Swamy Temple on January 9 at the Marakatha Natarajar. Arudra Darisanam will be held on January 10.
Story first published: Tuesday, December 24, 2019, 16:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more