For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...

|

சில சமயங்களில் நம் எல்லோர் கவலையும் தீர ஒரு சிறு அரவணைப்பு இருந்தால் போதும். காரணம் அந்த சிறு அரவணைப்பே நமக்குள் மிகப்பெரிய சக்தியை கொடுக்க வல்லது.நம்ம கமல்ஹாசன் ஸ்டைல சொல்லணும்னா இந்த "கட்டிப்பிடி வைத்தியம்" வேற லெவல் தான். ஒருத்தர் நம்மை அரவணைத்தாலே போதும் நம் மனதில் எளிதில் நேர்மறை மாற்றம் ஏற்படும்.

Cuddling

இப்படிப்பட்ட ஒரு வேலையைத் தான் ஒரு பெண் செய்து வருகிறார். அவர் செய்யும் கட்டிப்பிடி வைத்தியம் தான் இப்பொழுது நியூ ட்ரெண்ட். ஜெசிகா என்ற இந்த பெண் கட்டிப்பிடி வைத்தியத்தில் சிறந்த தெரபிஸ்ட். இதை அவர் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக செய்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவரை பற்றி

அவரை பற்றி

ஜெசிகா ஓ நீல் என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் மற்றவர்களை அரவணைக்க ஒரு முடிவு எடுத்தார். எல்லாருக்கும் ஏதே ஒரு விதத்தில் ஒரு அரவணைப்பும் ஆறுதலும் தேவைப்படுகிறது. அதை நன்றாக உணர்ந்த இந்தப் பெண்மணி அதை ஒரு தெரபிஸ்ட் தொழிலாக செய்து வருகிறார். இதன் மூலம் நிறைய வருவாய் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கட்டிப் பிடி வைத்தியம் செய்ய 80 டாலர் வரை இவர் வாங்குறாராம்.

MOST READ: இனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இவருக்கு வரும் முக்கால்வாசி வாடிக்கையாளர்கள் 18-85 வயதை நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். திருமணம் ஆன திருமணமாகாத என்று ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். பொதுவாக இங்க வருபவர்களில் குறை என்னவென்றால் தனிமையில் வாடுவது, மனநிலை பாதிப்பு போன்ற பிரச்சனை தான் காரணமாக இருக்கிறதாம்.

பாலியல் நோக்கம் இல்லை

பாலியல் நோக்கம் இல்லை

நான் ஒவ்வொரு நாளும் நிறைய வாடிக்கையாளர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு என்னை தெரியாது. அவர்கள் என்னிடம் தங்கள் மனதில் உள்ள கவலைகளை கூறுகிறார்கள். அவர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுகிறேன். என்னுடைய இந்த தொழிலில் எந்த வித பாலியல் நோக்கமும் கிடையாது. இது முழுமையாக ஆறுதல் அளிக்கும் ஒரு தெரபி மட்டுமே. அப்படியும் சிலர் பாலியல் நோக்கில் இருந்தால் அது குறித்து நான் பேசி அவர்களை தெளிவு படுத்தி புரிய வைத்து உள்ளேன் என்கிறார்.

MOST READ: எடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு

அதே மாதிரி எந்தவொரு வாடிக்கையாளர்களும் தப்பாக நடக்க முயற்சி செய்வதில்லை. எல்லோரும் இந்த தெரபியை மதிக்கிறார்கள். யாரும் எனக்கு பாலியல் தொந்தரவு தரவில்லை. அவர்களின் ஆறுதல்களுக்கு நான் தோள் கொடுப்பதால் என்னை மதிக்கிறார்கள். என்னுடன் அன்புடன் இருக்கிறார்கள் என்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த மாதிரியான கட்டிப்பிடி வைத்திய தொழிலை தொடங்கி வேண்டும் என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு மசாஜ் தெரபிஸ்ட் ஆகவும், ஆலோசராகவும் இருந்த போது இந்த எண்ணம் துளிர்த்தது.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

நாம் ஒருத்தரை அரவணைக்கும் போது அவர்களின் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மன அழுத்தம் எல்லாம் சீராகும் என்பதை கண்டறிந்தேன். நீங்கள் அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் போது சொரோடோனின் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கிறது.

ஜெசிகா ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களது குறைகளை முதலில் தெரிந்து கொள்கிறார்.

MOST READ: முள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா? வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...

பணத்தை விட ஆறுதல்

பணத்தை விட ஆறுதல்

ஒவ்வொரு நாளும் விதவிதமான மனிதர்களையும் பிரச்சினைகளையும் நான் பார்க்கிறேன். எல்லாரும் இதை ஒரு சாதாரண கட்டிப்பிடி வைத்தியமாக பார்ப்பதில்லை. தங்களுக்கு கிடைக்கும் பெரிய ஆறுதலாகவும் மாற்றமாகவும் பார்க்கிறார்கள். அதே மாதிரி நானும் இந்த தொழிலில் பணத்தை விட நிறைய பேருக்கு ஆறுதலும் அரவணைப்பும் அளித்துள்ளோம் என்பதில் பெருமிதம் அடைகிறேன். அவர்களின் வாழ்க்கையில் என்னால் ஏதோ ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வந்த திருப்தி என்னுள் எழுகிறது என்று தன்னுடைய சேவையை வீடியோ மூலம் நம்முடன் பகிர்ந்து உள்ளார்.

ஜெசிகா சொன்ன மாதிரி நிறைய பேர்களின் பிரச்சனைகளுக்கு சிறு ஆறுதல் அரவணைப்பு இருந்தாலே போதும். எல்லாம் சரியாகிவிடும். உங்களுடைய அரவணைப்பும் உங்கள் உறவுகளுக்கு தேவைப்படலாம். உங்களுடைய சிறு ஹக் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு மருந்தாகலாம் என்பதை மறவாதீர்கள்.

.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Makes Money by Cuddling Total Strangers

Sometimes all that we need is a simple hug and we are good to go! Being heard or a simple hug has the power of changing the state of mind to a great extent. After all, cuddling is known as the best form of therapy
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more