For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இறுதிசடங்கில் பெண்கள் அனுமதிக்கப்படமால் இருப்பதற்கான அதிர்ச்சி காரணம் என்ன தெரியுமா?

பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வதையாவது நீங்கள் எப்போதாவது பாரித்துள்ளீர்களா? பார்த்திருக்க வாய்ப்பில்லை.

|

இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை என்பது இன்றும் கூட பல விஷயங்களில் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. சில கோவில்களுக்குள் செல்லக்கூடாது, சில கடவுளை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நீடித்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் நாம் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் பெண்கள் ஏன் இறுதிச்சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை.

Why Indian Women Are Debarred From Funeral Rituals

பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வதையாவது நீங்கள் எப்போதாவது பாரித்துள்ளீர்களா? பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பழங்காலம் முதலே பெண்கள் இறுதிச்சடங்குகளை பொறுத்த வரையில் அழுவதுடனும், சில சடங்குகளை செய்வதுடனும் பெண்களின் வேலை முடிந்துவிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடுகாடு

சுடுகாடு

சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது ஒருவரின் ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து மேல் உலகதிற்கு அனுப்பி வைக்கும் புனிதமான சடங்காக கருதப்படுகிறது, இதன்மூலம் அந்த ஆன்மா மீண்டும் பிறக்க இயலும் என்று நம்பப்படுகிறது. மற்றொரு நம்பிக்கை என்னவெனில் இறுதிச்சடங்கின் போது ஏதவாது தவறு நேர்ந்து தொந்தரவு ஏற்பட்டால் அந்த ஆன்மா நிம்மதியை இழந்து அமைதியின்றி அலையும் என்று கூறப்படுகிறது.

அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இந்து கலாச்சாரத்தின் படி ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு அவர்களின் சாம்பல் புனித நீரில் கரைக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக பெண்கள் இந்த இறுதிச்சடங்குளை செய்வது, பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வது, சுடுகாட்டிற்கு வருவது போன்ற சடங்குகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை மேற்கொண்டு பார்க்கலாம்.

புராணகாலங்களில் தடுக்கப்படவில்லை

புராணகாலங்களில் தடுக்கப்படவில்லை

பெண்கள் ஏன் இறுதி சடங்குகளில் அனுமதிக்க படுவதில்லை என்பதை ஆராய ஆராய்ச்சியாளர்கள் முயன்ற போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் புராணகாலங்களில் பெண்கள் இறுதிச்சடங்குகளில் அனுமதிக்கப்பட்டுத்தான் கொண்டிருந்தார்கள். மஹாபாரத போரில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த போது பாஞ்சாலி, குந்தி முதற்கொண்டு அனைத்து பெண்களும் அங்கிருந்ததாகத்தான் கூறப்படுகிறது. பீஷமரின் இறுதிச்சடங்கின் போது பாண்டவர் மற்றும் கௌரவர் இருபுறத்திலும் இருந்த அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர்.

வாரிசுரிமை

வாரிசுரிமை

இறந்தவரின் சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமோ அவர்களே இறுதிச்சடங்கை வழிநடத்த வேண்டும் என்றும், கொள்ளி வைக்க வேண்டுமென்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது. பண்டைய காலங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லாமல் இருந்தது. இப்போது சொத்தில் உரிமை கிடைத்தாலும் இந்த சடங்குகளில் உரிமை இன்னும் கிடைக்கவில்லை.

MOST READ:உங்களின் ராசிப்படி எந்த ராசிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா?

மகன் இல்லையென்றால்

மகன் இல்லையென்றால்

ஒருவேளை இறந்தவர்களுக்கு மகனோ அல்லது நேரடி ஆண் வாரிசு இல்லையென்றால் கூட குடும்பத்தில் மூத்தவர்கள் மனைவியையோ அல்லது மகளையோ கொள்ளி வைக்க விடாமல் தூரத்து சொந்தம் யாராவது ஒருத்தரைத்தான் கொள்ளி வைக்க விடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

குழந்தைகள் மற்றும் உறவினர்களை கவனிக்க

குழந்தைகள் மற்றும் உறவினர்களை கவனிக்க

குழந்தைகளையும், வீட்டையும் பார்த்து கொள்வதோடு இறுதி சடங்கிற்கு வருகை புரிந்தவர்களையும் பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி இருக்கும்போது அது பெண்ணாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? ஆண்கள் அனைவரும் சுடுகாட்டிற்கு சென்றவுடன் வீட்டையும்ம் குழந்தைகளையும் பார்த்து கொள்ள பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

மகனே சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியும்

மகனே சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியும்

பண்டைய காலத்தில் நிலவிய பிரபலாமான நம்பிக்கைகளில் ஒன்று ஆண் பிள்ளைதான் இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல முடியும் என்பது. மரணத்திற்கும், சொர்க்கத்திற்கும் இடையில் ஆண் பிள்ளைகளே பாலமாய் இருப்பதாக அனைவராலும் நம்பப்பட்டது. மரணத்திற்கு பிறகு மகன் இறுதி சடங்குகளை செய்து கொள்ளி வைத்தால், இறந்தவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

பெண்களை மென்மையான இதயம்

பெண்களை மென்மையான இதயம்

அந்த கால ஆண்கள், ஏன் இப்போது கூட சில ஆண்கள் பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களால் தனக்கு விருப்பமானவர்கள் எரிவதை பார்க்க முடியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் பெண்களை சுடுகாட்டிற்கு அழைத்து செல்வதில்லை. ஆனால் ஆணை விட பெண்கள் மனதளவில் மிக மிக வலிமையானவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

MOST READ:அடிக்கடி மரத்துப்போகுதா? அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது... தொட்டா அவுட் தான்

பேய்கள்

பேய்கள்

அனைத்திற்கும் மேலாக கூறப்படும் ஒரு காரணம் பெண்கள் தீய ஆவிகளாலும், பேய்களாலும் பாதிக்கப்பட கூடாது என்பதாகும். சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடக்கும் போது அங்கு நூற்றுக்கணக்கான ஆவிகள் அலைந்து கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் பெண்கள் அங்கிருப்பது ஆவிகளுக்கு மிகவும் எளிமையான இலக்காக அவர்களை மாற்றிவிடும். இது அவர்களுக்கு பேரழிவை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: women body பெண்கள்
English summary

Why Indian Women Are Debarred From Funeral Rituals

Check out the shocking reasons for why Indian women not allowed in funeral rites.
Desktop Bottom Promotion