For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஏன் பூசறோம்?

நாம் நெற்றியில் பூசும் விபூதிக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

எல்லாரும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதோடு நெற்றி நிறைய பட்டை யையும் போட்டுப்போம். இப்படி நெற்றியில் அணியும் விபூதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு தெரியுமா? இந்த சாதாரண விபூதி கடவுளின் சக்தி என்று கூறப்படுகிறது.

Vibhuthi

கடவுளின் ஆன்மீக சாம்பலின் வடிவமாக கருதப்படுகிறது. இயற்கையாகவே இது பக்தியை வழங்கக் கூடியது என்று நம்பப்படுகிறது. அந்தளவுக்கு ஆன்மீக மரியாதை இந்த விபூதிக்கு கொடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபூதி என்று பெயர் வரக்காரணம்?

விபூதி என்று பெயர் வரக்காரணம்?

விபூதி என்ற பெயர் 'விபூ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த, நித்தியமான இறைவன் என்று பொருளாகும். இது கடவுளின் மிக உயர்ந்த சக்தியின் வெளிப்பாடு ஆகும்.

MOST READ: உங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா? இதோ பாருங்க...

புனித அடையாளம்

புனித அடையாளம்

விபூதி இந்து மதத்தின் படி சிவனின் அடையாளமாக கூறப்படுகிறது. அதனால் தான் சிவன் பக்தர்கள் நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்திராட்சை கொட்டையும் அணிகின்றனர். இது தூய்மை, பாதுகாப்பு, தியாகம் மற்றும் சக்தியை உறிஞ்சும் ஒன்றாக கருதப்படுகிறது.

நமது உடல் சாம்பலாகும் போது, மாட்டுச் சாணத்தை எரிக்கும் போது கிடைக்கும் சாம்பல் தான் இந்த திருநீறு. இது நெருப்பில் இடும் தியாகத்தை காட்டுகிறது. இந்த புனித சாம்பலை மக்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

புனித சாம்பலின் பயன்கள்

புனித சாம்பலின் பயன்கள்

உடலின் அடையாளமாக உள்ளது

உடலில் ஆத்ம சக்தியை தக்க வைக்கிறது.

குணப்படுத்துவதற்கான மருந்து

எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மை காக்கிறது.

மாய வித்தை காட்ட, பேயை விரட்ட போன்ற மர்ம செயலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.

அவநம்பிக்கையை குறைத்து தெய்வ நம்பிக்கையை ஊட்டுகிறது.

MOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்...

சிவனும் விபூதியும்

சிவனும் விபூதியும்

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பத்தை பறைசாற்றுகின்றன. அது போன்று தான் நமது பிறப்பும் இறப்பும். இதற்கெல்லாம் தலையாய கடவுள் சிவன் தான். உலகில் உள்ள உயிர்களை படைப்பதும் அழிப்பதும் அவனே. அவரது மூன்றாவது கண் சர்வ வல்லமையும் படைத்த அறிவுக் கண்.

நம் வாழ்க்கை எல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும், மிஞ்சுவது நம் சாம்பல் மட்டுமே. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் கடைசியில் சாம்பாலாக்கப்படுவது தான் பிரபஞ்சம் சொல்லுகிறது.

அந்த புனித சாம்பலை உடம்பு முழுவதும் நாம் பூசிக் கொள்வது சிவனின் சக்தியை ஈர்க்க வழிவகுக்கிறது. இந்த சாம்பல் சிவனின் கோபத்தையும் எடுத்துரைக்கிறது. உயிர்களிடத்து உள்ள தீங்குகளை பாவங்களை போக்கி சாம்பலாக்கி புத்துயிர் மறுபிறவி கொடுக்கிறார் என்பது பொருள்.

காமத்தின் கட்டுப்பாடு

காமத்தின் கட்டுப்பாடு

விபூதி சிவனின் அடையாளமாக பார்க்கப்படுவதோடு பாலியல் ஆற்றலின் எஞ்சிய சக்தியாக விளங்குகிறது. வேதவாக்கியங்களின்படி விபூதி தேஜஸை அதாவது காமத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை தருகிறது. உடம்பில் ஏற்படும் காம இச்சைகளை எரித்து மனசு தூய்மையாக இருக்க உதவுகிறது.

உடம்பில் உள்ள சூட்டை குறைத்து காமத்தை கட்டுப்படுத்துகிறது. சிவன் தனது மூன்றாவது கண்ணான தன் நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனின் காமத்தையும், ஆசையும் எரிக்கலானார் என்று கூறப்படுகிறது.

MOST READ: குபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...

விபூதிகளின் 8 வகையான சக்திகள்

விபூதிகளின் 8 வகையான சக்திகள்

அனிமன் - சிறிய சக்தி

பிரப்தி - பெரும் சக்தி

பிரக்மியாம் - வெளிப்படையான சக்தி மற்றும் ஆசைகளை நிறைவேற்ற கூடியது.

லெகிமேன் - இலகுவான சக்தி

இஸ்கிதா - அதிகாரத்தை பெறுவதற்கான சக்தி

வசிதா - களிப்பு, மயக்கம், வசியம் மற்றும் ஏமாற்றும் சக்தி

மஹிமான் - மாய மந்திரவாதிகளுக்கு பலத்தை வலிமையை கொடுக்கும் சக்தி

காமவசியாதா- காமம், ஆசைகளை கட்டுப்படுத்தும் சக்தி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Essence of Vibhuthi and Its Relation to Lord Shiva

Vibhuthi is a sacred ash used as an identification to the power of God or the mystical and supreme spiritual power of nature. It itself means something that is great, is abundant, powerful, mighty and of great honor.
Story first published: Friday, June 14, 2019, 15:37 [IST]
Desktop Bottom Promotion