Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தெரிஞ்சே ஒரு வருஷம் கெட்டுப்போன உணவை மட்டும் சாப்பிடும் மனிதர்... இப்படியொரு மனுஷனா?
ஒரு வருடம் தொடர்ந்து கெட்டுப் போன காலாவதியான உணவுப் பொருள்களை சாப்பிட்ட மனிதர் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
சூப்பர் மார்கெட் சென்று பொருட்கள் வாங்கும்போது முதலில் நாம் ஒவ்வொருவரும் பார்ப்பது அந்த பொருளுக்குரிய காலாவதி தேதியை மட்டுமே. காலாவதியாகும் தேதி நெருங்கும் பொருளை நாம் வாங்குவதை பெரும்பாலும் தவிர்ப்போம். குறைவான காலாவதி தேதி கொண்ட பொருட்களை நாம் பெரும்பாலும் குறைந்த அளவு மட்டுமே வாங்குவோம்.

ஆனால், இந்த பதிவை நீங்கள் படித்தவுடன் காலாவதி தேதி குறித்த உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள நேரலாம். அந்த அளவிற்கு ஒரு வித்தியாசமான வழக்கைப் பற்றி நாம் இப்போது காணவிருக்கிறோம். ஆம், குறிப்பாக காலாவதி தேதி முடிந்த பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்கி உட்கொள்ளும் ஒரு நபர், அது குறித்த ஒரு விரிவான ஆய்வையும் நடத்தி இருக்கிறார். தொடர்ந்து படித்து அதன் விபரங்களை அறிந்து கொள்ள வாருங்கள்.

காலாவதி பொருள்கள்
இந்த நபர் காலாவதியான பொருளை ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை அல்ல, தொடர்ந்து ஒரு வருடம் வாங்கி உட்கொண்டிருக்கிறார். இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், இவரின் இந்த முடிவிற்கு இவர் குடும்பம் மொத்தமும் ஆதரவாக இருந்தது. அவர்களும் காலாவதி தேதி முடிந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளனர்.

எங்கு இந்த கொடுமை
மேரிலாந்தைச் சேர்ந்த இந்த மனிதர் தயாரிப்புகளின் காலாவதி தேதிகளின் கட்டுக்கதைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார். காலாவதியான தயாரிப்புகள் ஆரோக்கியமற்றவை என்ற மக்களின் எண்ணம் தவறு என்பதை நிரூபிக்க, அவர் ஒரு வருடம் முழுவதும் காலாவதியான பொருட்களை உண்டு வாழ்ந்து வந்தார்.

எதுக்கு இந்த டெஸ்ட்?
காலாவதியான உணவை உட்கொள்வதற்கான அசாதாரண பரிசோதனையின் முழு யோசனையின் பின்னணியில் இருப்பவர் ஸ்காட் நாஷ். ஒரு முறை காலாவதியான யோகர்ட்டை அவர் சாப்பிட்ட பிறகு தான் இந்த யோசனை அவருக்குத் தொடங்கியது. உண்மையில் அவருடைய குளிர்சாதன பெட்டியில் அந்த யோகர்ட்டை வைத்திருந்ததை அவர் முற்றிலும் மறந்து விட்டார்.

யோகர்ட்
அந்த யோகர்ட் காலாவதியாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதன் காரணமாக அவர் அந்த யோகர்ட்டை சாப்பிடாமல் இருக்கவில்லை. அதனை எடுத்து தனது ஸ்மூதியில் கலந்து உட்கொள்ளத் தொடங்கினார். யோகர்ட்டின் சுவையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், அதை உட்கொண்ட பிறகு எந்தவிதமான உடல்நலப் பிரச்சினைகளையும் அனுபவிக்கவில்லை என்றும் ஸ்காட் கூறினார். இந்த தருணத்தில் தான், இப்போதெல்லாம் காலாவதி தேதியை நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

உணவுச்சந்தை
தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலரும்' மற்றும் MOM's ஆர்கானிக் சந்தையின் உரிமையாளருமான ஸ்காட், இதனைப் பரிசோதிப்பது குறித்து தீவிர சிந்தனை செய்தார். அவருடைய ப்ளாகில் காலாவதியான உணவு பொருட்களை உட்கொள்வதின் அனுபவம் குறித்து முற்றிலும் பகிர்ந்து கொண்டார்.
உணவுத் துறையில் தேதியிடும் முறையை திருத்த வேண்டும். ஏனெனில் இது உணவுச் சந்தையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் செய்தி வெளியிட்டார்.

வெண்ணெய்
பல மாதங்களாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட வெண்ணெய்யின் மேல் ஒரு அடுக்கு படர்ந்திருந்ததாகவும், அந்த அடுக்கை ஒரு கத்தி கொண்டு சுரண்டி எடுத்து விட்டு அதனை மீண்டும் சமையலில் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
உணவுப் பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடுவது என்பது உணவு உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரை நல்ல தயாரிப்புகளை தூக்கி எறிய ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு உத்தி ஆகும், இது "திட்டமிட்டு வழக்கொழிந்துப் போகச் செய்தல்" என்ற முறையாகும். இப்படி செய்வதன் மூலம் நுகர்வோர் பழைய பொருட்களை தூக்கி எறிந்துவிட்டு, புதிய பொருட்களை வாங்க முடியும். உற்பத்தியாளர்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
