For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராவணனின் மனைவி ஆஞ்சநேயருக்கு அளித்த சாபம் என்ன? அதனால் அனுமனுக்கு என்ன நடந்தது தெரியுமா?

அசுர வேந்தன் இராவணனின் மறைவிற்கு பின் அவரது தம்பி விபீஷணருக்கு முடிசூட்டப்பட்டது. ஆனால் அவரின் மனைவியாக இருந்த மகாராணி மண்டோதரிக்கு என்ன ஆனது என்பதை பற்றி நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை.

|

இராமாயண போரின் முடிவு என்னவானது என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். இராமரின் பானத்தால் இராவணனின் உயிர் பறிக்கப்பட்டது. இராமர் சீதையை அழைத்து கொண்டு அயோத்தி சென்று அரசனாக முடிசூட்டி நல்லாட்சி செய்தார். இதுதான் நமக்கு தெரிந்த இராமாயணம் ஆகும், ஆனால் இதை தாண்டியும் பல சம்பவங்கள் உள்ளது.

Life of Mandodari after Ravanas death

அசுர வேந்தன் இராவணனின் மறைவிற்கு பின் அவரது தம்பி விபீஷணருக்கு முடிசூட்டப்பட்டது. ஆனால் அவரின் மனைவியாக இருந்த மகாராணி மண்டோதரிக்கு என்ன ஆனது என்பதை பற்றி நாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. மகாராணி மண்டோதரி அனுமனுக்கு ஒரு சாபம் கூட கொடுத்தார். இந்த பதிவில் இராவணனின் மறைவிற்கு பின் அவரது மனைவிக்கு என்ன ஆனது அவர் ஏன் அனுமனுக்கு சாபம் கொடுத்தார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மண்டோதரியின் பிறப்பு

மண்டோதரியின் பிறப்பு

மண்டோதரி மாயாசுரனுக்கும் அவரது மனைவி ஹேமாவுக்கும் மகளாக கிடைத்தார். ஆம் அவர் அவர்களின் சொத மகள் அல்ல. பார்வதியின் சாபத்தால் தவளையாக இருந்த மதுரா சாபம் நீங்கி அவர்களுக்கு குழந்தையாக கிடைத்தார். அவருக்கு மண்டோதரி என பெயர் வைத்து அவர்கள் வளர்க்க தொடங்கினர்.

கட்டாய திருமணம்

கட்டாய திருமணம்

ஒருமுறை மாயாசுரனின் அரண்மனைக்கு வந்த இராவணன் மண்டோதரியின் அழகில் மயங்கி விட்டார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மண்டோதரியிடம் வேண்டினார். ஆனால் இதற்கு மாயாசுரன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இராவணனுக்கும், மாயாசுரனுக்கும் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இராவணனின் பராக்கிரமம் பற்றி அறிந்த மண்டோதரி தன் தந்தையை காப்பாற்ற இராவணனை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். இராவணனுக்கும், மண்டோதரிக்கும் மேகநாதன், அதிகாயன் மற்றும் அக்சயகுமாரன் என்னும் மூன்று மகன்கள் பிறந்தனர்.

நல்ல மனைவி

நல்ல மனைவி

கட்டாய திருமணமாக இருந்தாலும் மண்டோதரி இராவணன் மீது அளவற்ற அன்பை பொழிந்தார். மண்டோதரி எப்பொழுதும் இராவணனை எச்சரித்து கொண்டேதான் இருந்தார். இராவணனின் வீழ்ச்சிக்கு அவரின் செயல்கள்தான் காரணமாக இருக்கும் என்பதை அறிந்த மண்டோதரி அவரை நல்வழிக்கு அழைத்து செல்ல அனைத்து முயற்சிகளையும் செய்தார்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மண்டோதரியின் கோரிக்கை

மண்டோதரியின் கோரிக்கை

சீதையை இராவணன் கவர்ந்து வந்த பிறகு மண்டோதரி இராவணனிடம் சீதையை விட்டு விடும்படி கெஞ்சினார். ஏனெனில் அவர் நன்கு அறிவார் இராமன் எப்படியும் இராவணனை அழித்து விட்டு சீதையை அழைத்து சென்றுவிடுவார் என்று. ஆனால் இராவணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இராமரின் சுயரூபம்

இராமரின் சுயரூபம்

இராவணனின் இறுதி யுத்தத்தில் அவர் மடிந்த செய்தி கேட்டு மண்டோதரி அவரை பார்க்க போர்க்களம் சென்றார். அங்கே தன் கணவன், மகன்கள், படை என அனைத்தும் அழிந்து போயிருப்பதை கண்டு துயருற்றார். நிர்கதியாக இருந்த அவருக்கு இராமன் தனது உண்மையான அடையாளத்தை காட்டினார்.

விபீஷணன்

விபீஷணன்

போர் முடிந்த பிறகு விபீஷணனுக்கு இலங்கையின் அரசனாக முடிசூட்டினார் இராமர். மேலும் இராமர் விபீஷணனிடம் மண்டோதரியை திருமணம் செய்து கொண்டு அவரை இலங்கையின் ராணியாக மீண்டும் அமர்த்தும்படி கூறினார். ஆனால் அதற்கு மண்டோதரி மறுத்துவிட்டார்.

MOST READ: இந்த திசையில் தலைவைத்து தூங்குபவர்களுக்கு ஆயுள் குறையுமாம் தெரியுமா?

தனிமையில் மண்டோதரி

தனிமையில் மண்டோதரி

முடிசூட்டு விழாவிற்கு பிறகு இராமர், சீதை, இலட்சுமணன், வானர சேனை அனைத்தையும் அயோத்திக்கு அனுப்பி வைத்துவிட்டு மண்டோதரி அரண்மனைக்குள் சென்று தனிமையை ஏற்படுத்தி கொண்டார். வெளியுலகத்துடன் தனக்கிருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்து கொண்டார். சில காலங்களுக்கு பிறகு வெளியே வந்த மண்டோதரி இராமரின் அறிவுரைப்படி விபீஷணனை திருமணம் செய்து கொண்டார்.

இராவணன் வீழ்ச்சிக்கான காரணங்கள்

இராவணன் வீழ்ச்சிக்கான காரணங்கள்

இராவணனின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது சகோதரன் விபீஷணன் என்று கூறுவார்கள். ஏனெனில் அவர் செய்த துரோகம்தான் இராவணின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் மண்டோதரி அறியாமல் செய்த தவறுதான் இராவணனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

விபீஷணனின் துரோகம்

விபீஷணனின் துரோகம்

இராவணனை வெல்வது என்பது எவராலும் முடியாத காரியம் என்று விபீஷணன் நன்கு அறிவார். எனவே விபீஷணன் இராவணனின் உயிர் ரகசியம் அவரின் தொப்புளில் ஒளிந்திருப்பதை இராமனிடம் தெரிவித்தார். மேலும் எந்தவொரு ஆயுதத்தாலும் இராவணனின் உயிரை பறிக்க முடியாது என்றும் அது மண்டோதரியின் பாதுகாப்பில் இருக்கும் மந்திர ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்றும் இராமனிடம் கூறினார்.

அனுமனின் தந்திரம்

அனுமனின் தந்திரம்

இராமரின் கட்டளை பேரில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அனுமன் இராவணனின் கோட்டைக்குள் முனிவர் வேடத்தில் நுழைந்தார். மண்டோதரியுடம் தந்திரமாக பேசி அந்த மந்திர அம்பு இருக்குமிடத்தை தெரிந்து கொண்டார்.

MOST READ: இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பெருங்குடலில் புண்ணை ஏற்படுத்தும் தெரியுமா?

மண்டோதரியின் சாபம்

மண்டோதரியின் சாபம்

மந்திர அம்பை எடுத்திக்கொண்டு அனுமன் பறந்து சென்ற போதுதான் மண்டோதரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் தன் கணவரின் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்தினார். இராவணனின் உயிற்ற உடலை பார்த்த பின்பு " யாருக்காக இன்று என்னை நீ ஏமாற்றினாயோ அவர் ஒருநாள் உன்னை விட்டு நிரந்தரமாக பிரிவார். இன்று எப்படி நான் துக்கத்தில் வாழ்கிறேனோ அதேபோல நீயும் வாழ்நாள் முழுவதும் துக்கத்தில் இருப்பாய் " என்று அனுமனுக்கு சாபம் அளித்தார். அவர் அளித்த சாபத்தின் படியே இராமரின் மறைவிற்கு பின் அனுமன் மிகவும் துயருற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life of Mandodari after Ravana's death

Do you what happened to Ravans's wife Mandodari after his death?
Desktop Bottom Promotion