For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 ராசிகளும் உங்க ஜாதகப்படி இந்த வருஷம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கு... மறக்காம செய்ங்க

|

2019 ம் ஆண்டு நம் ஒவ்வொருவருக்கும் புதிய சாகசங்களையும் , தொடக்கத்தையும் கொடுக்கும் என்று நம்புவோம். ஒவ்வொரு ஏழாண்டுக்கு ஒரு முறை நமது உடலில் உள்ள அணுக்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, நம்மை புதிய மனிதராக மாற்றும்.

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் ஆன்மிகம் அல்லது நமது உணர்வுகளுக்கு நெருக்கமான சில செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவோம். இந்தப் முறையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்துணர்வு

புத்துணர்வு

ஒரு புதிய மாற்றம் அல்லது புதுப்பித்தலுக்கான சரியான காலம் என்பது புத்தாண்டு. இந்த புதுப்பித்தல் முயற்சி என்பதில் பழையவற்றை முற்றிலும் ஒதுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பழைய விஷயங்களை புது ஆண்டின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இதுவரை இல்லாத ஒரு வளர்ச்சியைக் காண்பது தான் இதன் பொருள். இந்த மாற்றத்தை உண்டாக்க ஜோதிடம் ஒரு மிகப்பெரிய அளவில் துணை நிற்கிறது.

MOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா?

ஆழ்மனம்

ஆழ்மனம்

உங்கள் ஆழ்மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை வெளிக்கொணர்வதில் ஜோதிடம் சிறப்பாக துணை புரிகிறது. இந்த எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் குறிக்கோள் மற்றும் லட்சியத்தை நோக்கி உங்களால் எளிதில் பயணப்பட முடியும். ஒவ்வொரு ராசியும் அதற்கான விசேஷ குணம் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே போல், ஒவ்வொரு நபரும் தங்களுக்கான தனி பலம் மற்றும் பலவீனத்தைக் கொண்டுள்ளனர். இந்த குணங்கள் ஒவ்வொரு தனித்தனி நபரின் வாழ்வில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஜோதிடம்

ஜோதிடம்

ஜோதிடம் உங்கள் உற்சாகம், சுய மரியாதை மற்றும் இயற்கை திறமைகளை பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் சிறந்த முறையில் அணுகுவதற்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொரு ராசியையும் தனித்தனியாக ஆராய்ந்து, உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள சிறந்த நுட்பங்களை ஆய்ந்து சொல்வதற்கான ஒரு பதிவு தான் இது. ஆகவே இதனைப் படித்து உங்களை நீங்கள் எளிதில் புதுப்பித்து இன்னும் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்.

மேஷ ராசி

மேஷ ராசி

மேஷ ராசியினராகிய நீங்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. உங்கள் மனதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வைத்திருப்பீர்கள். ஆகவே இந்த வருடம் எதாவது மாற்றத்தை நீங்கள் விரும்பினால் , உங்கள் மனதை கொஞ்சம் திறந்து வையுங்கள். உங்கள் நம்பிக்கையில் எப்போதும் ஸ்திரமாக இருப்பீர்கள், சில நேரம் இது பிடிவாதம் என்றும் கூறப்படும். ஆகவே உங்கள் நம்பிக்கையுடன் சேர்த்து உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவரின் எண்ணத்தையும் சிறிது காதில் வாங்கிக் கொள்ள பழகுங்கள். உங்களின் புரிதல் மற்றும் அன்பில் மாற்றத்தை அறியும்போது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மிகவும் ஆச்சர்யப்படலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி

உற்சாகமே இல்லாத ஒரு சக்கரத்தில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்படும் ரிஷப ராசியினர், அதில் இருந்து வெளிவர அதிகம் முயற்சிப்பீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குங்கள், தனித்தன்மை பெற்ற செயல்களில் உதாரணமாக , கவிதை எழுதுவது, கிக் பாக்சிங் போன்றவற்றை செய்து பாருங்கள். உங்களை நீங்கள் பிசியாக வைத்துக் கொள்வதால், ஆர்வமற்ற மனநிலை பாதிப்பில் இருந்து வெளிவர முடியும். உங்கள் பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதால் நீங்கள் அறியாத குணநலன்கள் உங்களில் இருந்து வெளிப்படுவதை உங்களால் உணர முடியும். இவற்றை உங்கள் வாழ்வில் வரவழைத்து அந்த அனுபவத்தை உணர முற்படுங்கள்.

MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...

மிதுன ராசி

மிதுன ராசி

மிதுன ராசியினர், இந்த ஆண்டு, உங்கள் உள்ளுணர்வை நம்புவதற்கு பழகவும் கற்றுக் கொள்ளவும் வேண்டும். இந்த முயற்சி உங்களை புது பாதைக்கு வழிநடத்திச் செல்ல உதவுகிறது. உங்கள் மனம் சொல்லும் பாதையை நம்பி அந்த திசையில் செல்லுங்கள், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்கள் விசித்திரமான ஆளுமை இந்த ஆண்டு எண்ணற்ற சுவாரஸ்யமான குணங்களை பெறுவதற்கு கட்டாயமாக உள்ளது, மற்றும் நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்பும்போது நீங்கள் அவற்றை மிகவும் எளிதாகக் காணலாம்.

கடக ராசி

கடக ராசி

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வளையத்தை இந்த ஆண்டு அவசியம் புனைய வேண்டும். உங்கள் உணர்ச்சி மிகுந்த தன்மை, உங்களை புரிந்து கொள்ளும் தோழியாக உணர வைக்கும் அதே நேரத்தில் சில விஷயங்களை நடுநிலையாக ஆராய்ந்து முடிவெடுக்காமல் தனிப்பட்ட முறையில் எடுக்க அனுமதிக்கிறது. உங்களை நீங்கள் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், என்ன நினைப்பார்கள் என்ற பயமின்றி உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.

சிம்ம ராசி

சிம்ம ராசி

சிம்ம ராசியினர் மற்றவர்களுக்கு சேவை செய்து மகிழ்வளிக்கும் தன்மையை போக்க சரியான ஆண்டு இந்த ஆண்டு. உங்களின் இந்த குணம் உங்களுக்கு ஒரு போதும் உதவாது. இந்த தன்னலமற்ற குணத்தால் உங்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள், பலருக்கும் உங்களைப் பிடிக்கும் என்றாலும் உங்கள் அன்பை பலரும் தவறாக பயன்படுத்த நினைப்பார்கள். உங்கள் உணர்ச்சிகளை பட்டை தீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் குணத்தை உண்மையாக போற்றுபவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். உங்கள் உதவியைப் பெற்றுக் கொண்டு வெறுமையை தருபவர்களை ஒதுக்கி விடுங்கள்.

கன்னி ராசி

கன்னி ராசி

கேளிக்கை எதுவும் இல்லாத வேலை உங்கள் மன நிலையை மாற்றும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பு உங்களை வெகு தூரம் தனிமை படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து விட்டீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களை தளர்த்திக் கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள். ஒரு நாள் கடின உழைப்பை மறந்து குழந்தை போல் ஆர்வமாக உங்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடுங்கள். துள்ளி குதித்து விளையாடுங்கள். உங்கள் கண் முன்னே உங்களில் ஒரு மாற்றத்தை உணருவீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியினர், வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். வாழ்வில் உள்ள சந்தோசம், அழகு ஆகியவற்றை இதுவரை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு வாழ்வின் அடுத்த பக்கத்தைப் பார்த்து எல்லாவற்றிலும் சமநிலையை உணரும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னார்வ தொண்டு முயற்சிகளில் ஆர்வம் கொள்ளுங்கள். இந்த சமூகத்துடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் உங்கள் இதயத்திற்கு அமைதி கிடைக்கும்,, உங்கள் வாழ்வில் கலை மற்றும் இதர அழகான சூழ்நிலைகளுக்கு நன்றியைத் தெரிவிப்பீர்கள்.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிகம்

புதுபித்துக் கொள்வது என்பது உங்களைப் பொறுத்த வரையில் ஒரு புதிய செயல் அல்ல, ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் நீங்களே எல்லா நிலையிலும் ஒரு வலையை பின்னிக் கொண்டே வருகிறீர்கள். உங்களுக்காக நீங்கள் தக்க வைத்துக் கொண்டுள்ள பகுதியை மற்றவர்களிடம் வெளிபடுத்துவதால் அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். மற்றவர்களிடம் உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதால் உங்கள் மர்மத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். உங்களைப் பற்றி அக்கறையுள்ள அனைவருக்கும் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டவிழ்த்துவிட கற்றுக்கொள்வீர்கள் என்றால் உங்களுக்குள் ஒரு புதிய மனிதரை உங்களால் பார்க்க முடியும்.

தனுசு ராசி

தனுசு ராசி

எல்லா ராசியினரையும் பார்க்கும்போது, நீங்கள் உலகம் சுற்றும் வாலிபர் என்று சொல்லலாம். எப்போதும் உங்களுக்கு பல ஆயிரம் திட்டங்களும் , பல ஆயிரம் யோசனைகளும் உண்டு. இந்த ஆண்டு உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஆண்டாக மாற்றுங்கள். நீண்ட காலமாக உங்கள் எண்ணத்தில் உள்ள குறிக்கோளை நோக்கி தினமும் ஒரு அடி எடுத்து வையுங்கள். உங்கள் குறிக்கோள் மிகப் பெரியதாக அலல்து சிறியதாக இருக்கலாம். ஆனால் அதனை சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு முடிவில் முடிக்கபட்ட திட்டங்கள், ஒரு புதிய தொழில், புதிய உறவு மற்றும் உங்களையே புதிதாக காட்ட உதவும்.

மகரம்

மகரம்

நீங்கள் பாரம்பரியத்தை மறக்காதவர். பழம் பெருமை பேசுபவர். இது உங்களுக்கு அழகைக் கூட்டும். ஆனால் இந்த ஆண்டு நவீன முறையில் எதாவது வித்தியாசமாக யோசியுங்கள். ப்ளாக் எழுதுவது, யு ட்யுப் சானல் தொடங்குவது இப்படி எதாவது செய்யுங்கள். இப்படி செய்வதால் உங்கள் குணம் இன்னும் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் பண்புகளை புதுப்பிக்க இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருங்கள்.

கும்ப ராசி

கும்ப ராசி

கும்ப ராசியினராகிய உங்கள் விசித்திர தனித்துவ ஆளுமை, மக்களை உங்கள் பக்கம் எப்போதும் திருப்புகிறது. நீங்கள் ஒரு சமுதாய பட்டாம்பூச்சி, மற்றவரிடம் உள்ள சிறப்புகளை உங்களால் எளிதில் வெளிக்கொணர முடியும். இந்த ஆண்டு, உங்கள் அன்பை மற்றவரிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் தன்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் புது முயற்சி ஆகும். உங்களின் சோம்பேறித்தனம் இந்த ஆண்டு உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். ஆகவே இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பாக இருந்து மற்றவர்களின் பாராட்டுதலைப் பெற்றிடுங்கள்.

MOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...

மீன ராசி

மீன ராசி

மீன ராசியினர் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ஆண்டு இது. பகல் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர் நீங்கள். அந்த கனவுகளை நிஜமாக்கும் நேரம் இந்த ஆண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கற்பனை உலகத்தில் இருந்து வெளிவந்து உங்களைச் சுற்றி இருக்கும் மகிழ்ச்சியூட்டும் உண்மை உலகை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கனவுகளைத் துரத்துவதன் மூலம், உங்கள் நிஜமான திறமையை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஜோதிட கணிப்பின்படி, உங்கள் ஆழ்மனதை தட்டி எழுப்புவதால் நீங்கள் எண்ணும் வளமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும். உங்கள் சுயத்தை உணரவும், உங்களைப் புதுப்பிக்கவும் இந்த 21019 ம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். ஆகவே இந்த வளமான வாய்ப்பைப் பெற , சில ஆன்மீக முயற்சிகள் மூலம் உங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Reinvent Yourself in 2019 Using Astrology

Astrology can guide you toward the best manner in which to harness your motivation, self-esteem, and natural capabilities for enlightened evolution. Let’s look at each sign individually and explore the best techniques for reinventing yourself in 2019
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more