TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?
மரபு என்பது நம் இரத்தத்தோடு கலந்துள்ள விஷயம். சில மரபுகள் நமது பாரம்பரியத்தின் வேர்களிலிருந்தே தோன்றியவை. ஆனாலும் இன்னமும் சில முட்டாள்தனமான மரபுகள் பின்பற்றப்பட்டு தான் வருகின்றன. இவற்றுள் சில பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், ஆச்சரியமூட்டும் வகைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த மாதிரி மூர்க்கத்தனமான, அதிர்ச்சியூட்டும் மரபுகளை நீங்கள் கடந்து வந்தது உண்டா? இல்லை என்றால் உங்களுக்கான விருந்து காத்திருக்கிறது. உலகில் இன்னமும் பின்பற்றி வரும் 6 வித்தியாசமான மரபு முறைகளை பற்றி இப்பொழுது பார்க்க போகிறோம். இதை பின்பற்றும் மனிதர்களை பார்க்கும் போது வேடிக்கையாக தோன்றுகிறது.
ஆண்மையை நிரூபிக்க
அமேசானிய சாடேரி-மாவெக் பழங்குடியினர் தாங்கள் இளவட்டம் ஆனதை நிரூபிக்கும் விதமாக கைகளில் கம்பளி கையுறைகளை அணிந்து கொண்டு 10 நிமிடங்கள் நடனமாடிக் காட்டுவார்களாம். வெறுமனே கையுறை இல்லாமல் அதனுள் கொடிய விஷமுடைய கடிக்கும் எறும்புகளை நிரப்பி அணிய வேண்டுமாம். இந்த எறும்பின் கடி தேனியின் கொடுக்கை விட 30 மடங்கு அதிக வலியை கொடுக்க கூடியது. இந்த வலியோடு ஒவ்வொருவரும் 10 நிமிடங்கள் நடனமாடியே ஆக வேண்டுமாம். இந்த பழக்கத்தை அவர்கள் வாழ்நாளில் 20 முறை செய்து வருகிறார்கள். இப்படி செய்து காட்டினால் அவர்கள் வாலிப வயதை அடைந்து விட்டனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்த எறும்புகளை அமேசானிய காடுகளில் வேட்டையாடுவதும் இவர்களின் பொழுதுபோக்காக உள்ளது.
MOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா?
நாக்கில் அலகு குத்துதல்
சிங்கப்பூரில் உள்ள இந்து மக்கள் தைப்பூச விழாவில் இந்த மரபுகளை பின்பற்றுகின்றனர். தைப்பூசத்திற்கு விரதம் புரிவதோடு நாக்கில் ஈட்டியை வைத்து அலகு குத்துதல் போன்ற மரபை செய்கின்றனர். இந்த விழா தமிழ் காலண்டர் படி தை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் இங்கே ஸ்ரீ சீனிவாச என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். அங்கே அணிவகுப்பம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவருக்கு மட்டுமல்ல பார்ப்பவர்க்கும் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அலகு குத்தும் போது ஏற்படும் வலி வேதனையை தாங்குதல் தங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.
பூட்டானின் காதல் வேட்டை
பூட்டான் இளைஞர்கள் வெறுமனே காதலில் மட்டும் விழுவதில்லை. அவர்கள் இங்கே காதலை வேட்டையாடுகிறார்கள். பிடித்தமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பெற்றோர்களின் கண்ணில் படாமல் தனக்கு பிடித்த பெண்ணை கண்டறிந்து காதல் கொள்ள வேண்டும். பூட்டனின் வீடுகள் அமைப்புகள் ஓரே மாதிரியாக இருப்பதால் இது அவ்வளவு சுலபமல்ல. மேலும் எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஓரே அறையில் தூங்கும் போது மெதுவாக சென்று பெண்ணை கைபிடிக்க வேண்டும். மாட்டிக் கொண்டு விட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இது ஆண்களுக்கு சவாலாகவே உள்ளது. இப்படித்தான் இவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மனிதனின் மாமிசத்தை உண்ணுதல்
அமேசானிய யானோமமி பழங்குடியினர் 'எண்ட்கானிபலிசம்' என்று அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மனிதனின் மாமிசத்தை உண்ணுதல் என்று பொருள். அதே சமூகத்தைச் சேர்ந்த மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் சாம்பலை சாப்பிடுகிறார்கள். அதற்கு வருடாந்திர நினைவு தினத்தையும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த நாளில் இறந்தவர்களை பற்றி யாரும் பேசக் கூடாது. இறந்தவர்களின் சாம்பலை வாழைப்பழத்தில் கலந்து சாப்பிடுவது இவர்களது மரபு. இதன் மூலம் அவர்களின் ஆத்மா எங்கும் செல்லாமல் தங்களுக்குள்ளே இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு எவ்வளவோ ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவது ஆச்சர்யம் அளிக்கிறது.
பற்களை நிரப்புதல்
மானுஷா யாத்னியா என்று இந்த விழா அழைக்கப்படுகிறது. பாலினேச மக்கள் இதை பாரம்பரிய பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். இது ஒரு பெண் பருவ வயதை அடையும் போது நடத்தப்படுகிறது. பற்களை பொருத்துவது, சவப்பெட்டி போன்று படுக்கை செய்து காரியங்கள் செய்வது போன்ற இவ்வாறு செய்கிறார்கள். பேராசை, காமம் போன்ற எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்கிறார்கள். பெண்ணுக்கு பற்களை பொருத்துவது ஒரு தந்தை தன் கடமை முழுவதையும் அந்த பெண்ணுக்கு செய்து விட்டார் என்று நம்புகிறார்கள்.
MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...
குழந்தையை தூக்கிபோடுதல்
இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இந்த மரபு பிரபலமாக உள்ளது. பால்கனியில் இருந்து 30 அடி உயரத்தில் குழந்தையை கீழே தூக்கி போடுகிறார்கள். அப்படி செய்தால் அவர்கள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் வரும் என நம்பப்படுகிறது. பயப்படாதீங்க, கீழே குழந்தையை ஒரு துணியால் பிடிக்க நான்கு பேர்களை ஏற்பாடும் செய்து இருப்பார்களாம். தற்போது இந்த மரபு பின்பற்ற கூடாது என்று குழந்தை உரிமை ஆய்வாளர்கள் தடை விதித்துள்ளனர்.
இந்த உலகத்தில் நாம் இதுவரை எதிர்பாராத ஆச்சர்யங்களும் அதிசயங்களும் இருக்கத்தான் செய்கிறது. வித்தியாசமான மனிதர்கள் அவர்களின் மரபுகள் எல்லாம் சுவராஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஓரே இடத்தில் வாழ்க்கையை ஓட்டாமல் இதைக் காண நாம் தான் உலகத்தை சுற்ற வேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானதும் கூட.