For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புளிய மரத்தில் பேய் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இந்தியா மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

|

இந்தியா மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல நம்பிக்கைகளுக்கு பின்னால் சில அறிவியல் உண்மைகள் இருக்கிறது ஆனால் பல நம்பிக்கைகள் வெறும் மூடநம்பிக்கைகளாகவே இருக்கிறது.

Hair raising superstitions after sun sets

மூடநம்பிக்கைகளில் பெரும்பாலானவை முடி சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதில் மிகவும் பிரபலமான ஒரு நம்பிக்கை என்னவென்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை சீவக்கூடாது என்பதாகும். மேலும் முடியை விரித்தும் வைத்திருக்கக்கூடாது என்று கூறுவார்கள். இந்த பதிவில் இதற்கான காரணங்கள் மற்றும் முடி பற்றிய மேலும் பல நம்பிக்கைகளை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் மாலை நேரத்தில் தலை சீவக்கூடாது?

ஏன் மாலை நேரத்தில் தலை சீவக்கூடாது?

மாலை நேரத்தில் தீயசக்திகள் அதிகம் அலையும் அதனால் தலையை சீவக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில்தான் அவை மிகவும் பலம் வாய்ந்தவையாக இருக்கும் எனவும், அழகான நீண்ட கூந்தல் இருக்கும் பெண்கள் அவற்றின் எளிய இலக்காக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.

முடியை உதிரவிடக்கூடாது

முடியை உதிரவிடக்கூடாது

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடி உதிர்வதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் தலை பின்னி வைத்திருக்க வேண்டும்? பூஜை செய்யும்போது கூட பெண்கள் தங்கள் தலையை பின்னிதான் இருக்க வேண்டும். ஏனெனில் முடி உதிர்வது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

முடியை அப்புறப்படுத்துவது

முடியை அப்புறப்படுத்துவது

முடியை சீவுவது, தலையை பின்னி இருப்பது மட்டுமின்றி இருக்கும் மற்றொரு நம்பிக்கை முடியை அப்புறப்படுத்துவதாகும். முடியை அப்புறப்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும் ஏனெனில் அது தவறானவர்கள் கைகளுக்கு கிடைத்து விட்டால் நீங்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரலாம்.

பௌர்ணமி அன்று தலை சீவுவது

பௌர்ணமி அன்று தலை சீவுவது

பௌர்ணமி இரவன்று நீங்கள் தலைவாரவே கூடாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தலைவாருவது தீயசக்திகளை உங்கள் வீட்டுக்கு நீங்களே அழைப்பது போன்றதாகும்.

MOST READ: இந்த ஜென்மத்தோட ராசிப்படி முன்ஜென்மத்துல நீங்க எப்படிப்பட்டவங்களா இருந்தீங்கனு தெரியுமா?

மாதவிடாயின் போது தலை குளிப்பது

மாதவிடாயின் போது தலை குளிப்பது

மாதவிடாயின் முதல் நாளில் தலை குளித்தால் பெண்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் என்பது இன்றும் நிலவும் ஒரு மூடநம்பிக்கையாகும். மேலும், மாதவிடாய் நேரத்தில் இரவில் தலைக்கு குளிப்பது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சீப்பை கீழே போடுவது

சீப்பை கீழே போடுவது

பிரபலமான மற்றொரு நம்பிக்கை நீங்கள் தலை வாரும் போது சீப்பை கீழே போட்டுவிட்டால் உங்களுக்கு விரைவில் பெரியய கெட்ட செய்தியோ, ஏமாற்றமோ வரப்போகிறது என்று அர்த்தம்.

முடியை வீட்டை சுற்றி போடுவது

முடியை வீட்டை சுற்றி போடுவது

வீட்டை சுற்றி ஒருபோதும் முடியை போடக்கூடாது என்று நம்பப்படுகிறது.ஏனெனில் அவ்வாறு முடியை போடுவது குடும்பத்தில் சண்டையையும், குழப்பங்களையும் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு ரூபாய் நாணயம்

ஒரு ரூபாய் நாணயம்

இந்திய கலாச்சாரத்தில் ஒரு ரூபாய் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் பணத்தை பரிசாக கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு கொடுக்கும் போது ஒற்றைப்படை எண்ணில் கொடுப்பது வாங்குபவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் என்பது நம்பிக்கையாகும்.

MOST READ: இராவணனின் வீழ்ச்சிக்கு பின்னர் இராமருக்கு உதவிய வானர சேனைக்கு என்ன நடந்தது தெரியுமா?

புளியமரம்

புளியமரம்

இந்தியாவில் புளியமரமானது பேய்களின் வசிப்பிடமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது, ஆனால் இது உண்மையல்ல. இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் புளியமரம் மற்ற மரங்களை விட அதிகளவு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடும். இதனால் சுவாசிப்பதற்கு பிரச்சினை ஏற்படும். எனவே புளியமரத்திடம் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair tamarind tree முடி
English summary

Hair raising superstitions after sun sets

We Indians have a set of beliefs and superstitions that are carried from generation to generation.
Story first published: Friday, April 26, 2019, 13:21 [IST]
Desktop Bottom Promotion