For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல எது உண்மை... எது பொய்னு கண்டுபிடிங்க... இன்டர்நெட்டில் வைரலான சில பொய் படங்கள் இதோ

இணைய தளங்களில் வைரலான ஆனால் உண்மையற்ற போலியான படங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றி இங்கே பார்க்கப் போகிறோம். அது பற்றிய ஒரு புகைப்படத் தொகுப்பு தான் இது.

|

இன்டர்நெட்டில் பல புகைப்படங்கள் நாள்தோறும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில படங்கள் நிஜத்தைப் போல் இருக்கும் போலியான படங்கள். இதனைப் பற்றி அறியாத மக்களும் உண்மையான படத்தைப் போல் இருப்பதால் சற்று குழப்பம் அடைவர். இந்த படத்தின் படைப்பாளர்கள் கேலியாகவும் கிண்டலாகவும் சில நேரம் இவற்றை படைத்திருக்கலாம் . இந்த படத்தைக் காண்பவர்களில் பாதிபேர் இதனை நிஜமென்று நம்பி ஏமாறுவார்கள். அப்படி இன்டர்நெட்டில் வைரலான சில போலி புகைப்படங்கள் பற்றி இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
CT ஸ்கேன் செய்யப்படும் சிங்கம்

CT ஸ்கேன் செய்யப்படும் சிங்கம்

இந்த புகைப்படம் 1970ம் ஆண்டு வெளிவந்தது. ஒரு திரைப்பட தயாரிப்பு கம்பெனியின் அறிமுகத்திற்கு இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது.

MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...

இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம்

இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம்

இது கோபமாக இருக்கும் பூனைக்குட்டி இல்லை. பூனைக்குட்டிக்கு புருவம் தீட்டி கோபமாக இருப்பது போல் வரைந்துள்ளார்கள்.

09/11ன் போலியான புகைப்படம்

09/11ன் போலியான புகைப்படம்

நம்மில் பலர் இதனை உண்மை என்று நம்புவோம். தாக்குதலுக்கு முன் போலியான டூரிஸ்ட் படங்களைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு நிவாரணத்தை அளிக்கக் கூடிய புகைப்படமாக இருக்கும். இந்த வெளிப்பாடு உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும் என்று நம்புகிறோம்.

ஐன்ஸ்டின் சைக்கிள் ஓட்டுவது

ஐன்ஸ்டின் சைக்கிள் ஓட்டுவது

வெடிகுண்டு வெடிக்கும் நேரத்தில் ஐன்ஸ்டின் சைக்கிள் ஒட்டவில்லை. வெடுகுண்டு வெடிக்கும் நேரத்தில் ஐன்ஸ்டின் சைக்கிள் ஓட்டுவது போன்ற இந்த புகைப்படம் உண்மை அல்ல. இரண்டு வெவ்வேறு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து படமாக்கிய ஒரு சாமர்த்திய வெளிப்பாடு இந்த புகைப்படம்.

இந்த விண்கலம் கூட போலியானது

இந்த விண்கலம் கூட போலியானது

இந்த விண்கலத்தின் புகைப்படம் கூட போலியானது. ஆனால் இந்த புகைப்படத்தை உருவாக்கியவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையில் இந்த படத்தில் எது உண்மை எது போலி என்று தெரியாத அளவிற்கு மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாசா படம்

தீபாவளி நாசா படம்

ஒவ்வொரு தீபாவளிக்கும் பகிரப்படும் ஒரு பழைய புகைப்படம்

தீபாவளியின்போது நாசாவால் வெளியிடப்பட்ட புகைப்படம் என்ற வதந்தி இந்த புகைப்படம் குறித்து வெளியானது. ஆனால் இதனைப் போலி என்று நாம் அனைவரும் அறிவோம்.

MOST READ: இந்த ஒரு ராசிக்காரர் மட்டும் வந்தா ராஜாவாதான் வருவேன்னு அடம்பிடிக்கிறாரே அது ஏன் தெரியுமா?

குள்ள ஒட்டகச்சிவிங்கி என்று ஒன்று கிடையாது

குள்ள ஒட்டகச்சிவிங்கி என்று ஒன்று கிடையாது

இந்த குள்ள ஒட்டகச்சிவிங்கி மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு குள்ள ஒட்டகச்சிவிங்கி கிடையாது. இது உண்மையும் அல்ல.

இது நிச்சயம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தான்

இது நிச்சயம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தான்

இந்த புகைப்படம் உண்மையானதல்ல என்றாலும் பார்ப்பதற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் ஒரு புகைப்படம் இது. இது வித்தியாசமாக இருந்தாலும் ஓரளவிற்கு இது ஒரு போலியான புகைப்படம் என்று தெரிகிறது.

இது நிறம் தீட்டும் போட்டி அல்ல

இது நிறம் தீட்டும் போட்டி அல்ல

ஆம், கருப்பு சிங்கம் என்று ஒன்று கிடையாது. வெள்ளை சிங்கத்தின் புகைப்படத்தை எடிட் செய்து கருப்பு நிறம் தீட்டப்பட்டு உருவாக்கியது தான் இந்த புகைப்படம்.

MOST READ: பித்தப்பை கல் பெண்களுக்கும் வருமா? உங்க கணையம் பத்தி உங்களுக்கே தெரியாத 5 விஷயம் இதோ

இது நிஜமாகவே போற்றப்பட வேண்டிய படம்

இது நிஜமாகவே போற்றப்பட வேண்டிய படம்

இந்த படம் இரண்டு புகைப்படங்களின் கலவை ஆகும். இந்த பெரிய பாறையின் மேல் அமைந்திருக்கும் மாளிகை போலியானது, மாளிகை இருப்பது மற்றொரு புகைப்படத்தில். ஆனால் இந்த படம் உண்மையானதாக தோன்றும் அளவிற்கு இரண்டையும் இணைத்து நுணுக்கமாக செய்யபப்ட்ட வேலைப்பாடுகள் பாராட்டிற்குரியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fake Viral Pictures On The Internet That Look Real

There are several images that are being circulated on the internet and they look so real that most of the times, people get confused with the facts. Whether the creators of these pictures do it for fun or not, such pictures go viral in no time and at least half of the people seeing these pictures believe them to be real.
Story first published: Friday, March 15, 2019, 12:12 [IST]
Desktop Bottom Promotion