For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டு வாசல்ல கூடுகட்டி ஓனரையே வெளிய வரவிடாம ஹவுஸ்அரஸ்ட் செய்த பறவை... பாவம்...

|

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது நிறைய பேருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த செல்லப் பிராணிகளே நம்மை பயனக் கைதியாக வைத்தால் என்ன நடக்கும்? அப்படித்தான் இந்த பறவை வீட்டின் மேற்கூரையில் தஞ்சமடைந்து வீட்டினுள் இருப்பவர்களை பணயக் கைதியாக்கி உள்ளது.

Angry Seagulls

இதைக் கேட்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரலாம், இப்படியும் நடக்குமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் உண்மை. இங்கிலாந்தில் ஒரு வயதான தம்பதியினரை மிரட்டி வருகிறது அந்த சீகல்ஸ் பறவைகள். அவர்களை சொந்த வீட்டில் இருந்து கூட வெளியே வர முடியாத அளவுக்கு பிணைக் கைதிகளாக மாற்றி வைத்துள்ளது. "நான் தான் டா உனக்கு வில்லன்" என்கிற மாதிரியே கோபத்துடன் அவர்களை பயமுறுத்தி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயதான தம்பதியினர்

வயதான தம்பதியினர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதியினர் தங்களது லங்காஷயர் வீட்டின் கூரையில் கூடு கட்டிக் கொண்டிருந்த ஒரு ஜோடி சீகல்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் தம்பதியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முயற்சிக்கும்போது, ​​பறவைகள் ஆக்ரோஷமாகி அவர்களைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற முடியாத படி செய்து விடுகிறது.

MOST READ: இந்த பாத்திரம் எதுல தயாரிச்சது தெரியுமா? மனித சிறுநீர்ல... இனிமே நம்ம சிறுநீர காசுக்கு விக்கலாம்...

பாவம் தாத்தா பாட்டி

பாவம் தாத்தா பாட்டி

வயதான தம்பதியர் ராய் மற்றும் பிரெண்டா பிக்கார்ட் இதைப் பற்றி கூறும் போது "அந்த ஜோடி சீகல்ஸ் பறவைகள் வீட்டின் மேற்கூரையில் கூடு கட்டியுள்ளனர். அவற்றின் குஞ்சுகள் கூரையில் இருந்து நழுவி வீட்டின் முன் வாசக் கதவு கிட்டே விழுந்து விட்டது. இப்பொழுது நாங்கள் எப்பொழுது கதவை திறந்தாலும் ஒரே ஆக்ரோஷமாகவும், கொத்தவும் வருகிறது." என்கிறார்கள்.

கொத்தின பறவை

கொத்தின பறவை

ராய் எப்படியோ ஒரு வழியாக கதவை திறந்து வெளியே சென்ற போது அந்த பறவைகள் 71 வயதான அவரை கடுமையாக தாக்கி உள்ளது. அவரது தலையில் பலமாக கொத்தி இரத்தம் வந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உள்ளூர் மக்கள் போராடியுள்ளனர். வெளியிலே அவர்களை கொண்டு வர ஒரு கூண்டு மாதிரி அமைத்து அதன் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பயங்கரமான சம்பவம்

பயங்கரமான சம்பவம்

இந்த பயங்கரமான சம்பவம் குறித்து ராய் கூறுகையில் எங்களால் முன் கதவு மூலமாக வெளியேறவே முடியவில்லை. அது என்னை தாக்கிய பிறகு நான் மிகவும் காயமடைந்து இருந்தேன். எனது மனைவிக்கும் உடல்நிலை வேற சரியில்லை. இப்பொழுது என்னால் மட்டுமே வெளியேற முடிந்தது. பாவம் அவள் மட்டும் அங்கே மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்றார்.

MOST READ: மட்டன் அரைக்கிற மெஷின்ல் தலையை உள்ளே விட்ட இளைஞர்... பரிதாபமா உயிர்போயிடுச்சு... (விடியோ பாருங்க)

என்னதான் அப்புறம் ஆச்சு?

என்னதான் அப்புறம் ஆச்சு?

ஆனால் அதிர்ஷ்டவசமாக ராயின் வீட்டுடன் கேரேஜ் கதவு ஒன்று இணைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக இப்பொழுது வெளியேற முடிகிறது. விலங்குகள் அமைப்பால் கூட இந்த வயதான தம்பதியினருக்கு உதவ முடியாமல் போச்சு. அந்த குஞ்சுகள் எப்பொழுது பறக்க ஆரம்பிக்குமே அப்பொழுது தான் இவர்களுக்கு விடுதலை கிடைக்கும் போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Angry Seagulls Didn’t Let Elderly Couple Step out of Their House for Days

Having pets is a great thing, but when you have birds who find shelter in your house, it can turn out to be messy. But what happens when birds take shelter on your house roof and make you hostages instead.
Story first published: Saturday, July 6, 2019, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more