For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங

23 ஆண்டுகள் வயிற்றுவலியால் துடித்த பெண்: உள்ளே இருந்தது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற பெண்ணுக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் சிகி்ச்சை பெற்றார். முடிவில் என்ன நடந்தது தெரியுமா?

Surgical Clamp Lodged

23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க... அந்த கொடுமையைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
23 ஆண்டுகள் வேதனை

23 ஆண்டுகள் வேதனை

எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார். அவர்களும் வலி நிவாரணி மருந்துகளை அளிப்பர். அப்போதைக்கு வலி குறையுமே தவிர முற்றிலும் நிற்காது. மீண்டும் வலி வரும். எலீட்டா மருத்துவமனைக்குச் செல்வார். அவர் வாழ்க்கையில் இது வாடிக்கையாகி விட்டது.

MOST READ: ஆன்லைன்ல வீடு வாங்க ஆறேகால் லட்சம் செலவு பண்ணி கடைசியா கிடைச்சது அல்வா தான்...

ஈரலில் பிரச்னையா?

ஈரலில் பிரச்னையா?

ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் எலீட்டாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தரும் மருந்துகள் வலியை மரத்துப்போகச் செய்கின்றன; குணப்படுத்தவில்லை என்று எலீட்டா தெரிவித்தார். இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.

அதிர்ச்சியளித்த எக்ஸ்ரே

அதிர்ச்சியளித்த எக்ஸ்ரே

எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது.

யார் வைத்தது?

யார் வைத்தது?

வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

MOST READ: எவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்?

மருத்துவர்களின் மறதி

மருத்துவர்களின் மறதி

இது குறித்து செய்யப்பட்ட ஓர் ஆய்வில் 30 அறுவை சிகிச்சைக்கு 1 என்ற விகிதத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை உபகரணத்தையோ, கையுறையையோ நோயாளியின் உடலினுள் தவறுதலாய் விட்டு விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையெல்லாமா மறப்பீங்க டாக்டர்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Woman Had Surgical Clamp Lodged in Her Abdomen for 23 Years

Misplacing instruments in the body during surgeries is a regular scene where the patients tend to suffer from chronic pain and illness for years until the real reason is found out.
Desktop Bottom Promotion