எச்சரிக்கை! இந்த ராசிக்காரங்க ஒன்று சேர்ந்தா... வாழ்க்கை நரகமா தான் இருக்கும்...

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள். காதலிக்கும் போது எல்லாம் ஜோதிடம் பார்த்து, பொருத்தம் பார்த்து எல்லாம் காதலிக்கமாட்டோம். ஆனால் ஒரு காதல் வெற்றியடைவதிலும், அந்த காதல் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைப்பதிலும் ஒருவரது ராசிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆம், காதல் என்று வந்துவிட்டால், ராசியின் மீது யாருக்கும் நம்பிக்கை இருக்காது.

இன்று பல காதலர்கள் காதலிக்கும் போதே பிரச்சனைகள் வந்து பிரிந்துவிடுகிறார்கள். இதற்கு அவர்களது ராசிகளும் ஓர் காரணமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆம், ஜோதிடத்தின் படி, ஒருசில ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காதாம். அப்படியே ஒன்று சேர்ந்தாலும், ஏதேனும் பிரச்சனையால் பிரியக்கூடும் அல்லது எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்க நேரிட்டு, வாழ்க்கையே நரகம் போன்று இருக்கும்.

இப்போது எந்த ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து, உங்கள் துணையுடன் அல்லது காதலருடன் அடிக்கடி சண்டை வருவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருச்சிகம் மற்றும் கடகம்

விருச்சிகம் மற்றும் கடகம்

இந்த ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், இருவரும் எந்நேரமும் அழுது கொண்டே தான் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அந்த வாக்குவாதம் அனல் பறக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரு ஆரோக்கியமான உறவை அமைத்துக் கொள்வது என்பது கடினமாக ஒன்றாக இருக்கும்.

கன்னி மற்று மிதுனம்

கன்னி மற்று மிதுனம்

கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் இருவருக்குமே வெவ்வேறான கருத்துகள் என்பதால், இவர்கள் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த ராசிக்காரர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விருப்பப்பட்டதை குறிப்பிட்ட வழியில் பெற நினைப்பார்கள். ஆனால் மிதுன ராசிக்காரர்களோ, இதற்கு அப்படியே எதிர்மாறானவர்கள்.

தனுசு மற்றும் துலாம்

தனுசு மற்றும் துலாம்

இந்த ராசிக்காரர்கள் சண்டைப் போடுவதை நிறுத்தவே மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் உறவில் ஈடுபட்டால், அந்த உறவை எந்நேரமும் சண்டையிட்டே கழிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்படி இருவரும் சமாதானமாகி, தங்களுக்குள் இருக்கும் காதலை வளர்ப்பது என்று சற்றும் யோசிக்கவே மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் விதமே தனியாக இருக்கும். இதனாலேயே சண்டைகள் எப்போதும் வரும்.

மீனம் மற்றும் கும்பம்

மீனம் மற்றும் கும்பம்

இந்த இரண்டு ராசிக்காரர்களிடமும் உள்ள சில பொதுவான ஒற்றுமை என்றால், அவர்களது சுதந்திரம் மற்றும் படைப்பு போக்குகள் தான். மற்றபடி இவர்களது குணம் வேறு. மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து பாசத்தையும், அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்களோ, சுதந்திரத்தையும், சிறிது இடைவெளியையும் தான் எதிர்பார்க்கிறார்கள்.

மகரம் மற்றும் மிதுனம்

மகரம் மற்றும் மிதுனம்

இந்த ராசிக்காரர்களின் சேர்க்கை ஒரு பேரழிவில் முடியும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் முற்றிலும் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பர். மகர ராசிக்காரர்கள் எதையும் ஒழுங்காக செய்ய நினைப்பார்கள். ஆனால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக் குறித்து எவ்வித திட்டமும் இல்லாமல் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், நிச்சயம் இவர்களது வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கும்.

கன்னி மற்றும் மீனம்

கன்னி மற்றும் மீனம்

கன்னி மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இடையே நிறைய மோதல்கள் ஏற்படும். மீன ராசிக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்துமே நிறைவேறாமல் தான் இருக்கும். ஆனால் கன்னி ராசிக்காரர்களோ, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றாமல் இருக்கமாட்டார்கள். இதனாலேயே இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஒத்துப் போகாது.

மீனம் மற்றும் சிம்மம்

மீனம் மற்றும் சிம்மம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரே வழியில் தொடர்பு கொள்ளமாட்டார்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் இருவரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். மீன ராசிக்காரர்களோ மிகவும் சென்சிடிவ்வானவர்கள், அதே சமயம் சிம்ம ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்து கொள்ள சற்று தாமதமாகும்.

தனுசு மற்றும் ரிஷபம்

தனுசு மற்றும் ரிஷபம்

தனுசு ராசிக்காரர்கள் எப்போதுதும் பரபரப்புடன் இருப்பர் மற்றும் எதையேனும் ஆராய்ந்து கொண்டே இருப்பர். ரிஷப ராசிக்காரர்கள் வழக்கமான மற்றும் நிலைத்தன்மையால் அறியப்படுகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் நன்கு ஊர் சுற்ற விரும்புவார்கள் மற்றும் விரைவில் இவர்களுக்கு அலுத்துவிடும். ஆனால் ரிஷப ராசிக்கார்களுக்கு அப்படியே எதிர்மாறானது.

மேஷம் மற்றும் கடகம்

மேஷம் மற்றும் கடகம்

இந்த இரண்டு ராசிக்கார்களும் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். மேஷ ராசிக்காரர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள் . கடக ராசிக்காரர்கள் சென்சிடிவ்வானவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான குணம் என்னவென்றால், அது அக்கறையும், காதலும் தான். இது தான் இவர்கள் இருவருக்கும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்க வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs That Should Think Twice Before Falling In Love

Do you know that there are zodiac signs that need to be really careful before they fall in love with each other? This can be a deadly combo, often giving raise to fights and other arguments, so if you and your partner belong to this combination, BEWARE!
Story first published: Friday, March 30, 2018, 15:32 [IST]