இந்த மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky
மார்ச் மாதம் எந்த ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கும்?- வீடியோ

என்ன தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் ஓர் முறைத் தெரிந்து கொள்ள நிச்சயம் அனைவருக்குமே ஓர் ஆவல் இருக்கும். இந்து மதப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி கட்டாயம் இருக்கும். இந்த ராசிகளைக் கொண்டு ஒருவரது அன்றைய தினம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு வருடத்தின் மூன்றாவது மாதம் தான் மார்ச். இந்த மாதத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் பெயர்ச்சியால், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒருசில தாக்கங்கள் இருக்கும். அதில் சிலருக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது இன்னும் சிலருக்கு கெட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். இப்போது நாம் 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து தான் பார்க்கப் போகிறோம். இந்த மார்ச் மாத பலன்களைப் படித்து, உங்கள் ராசிப்படி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தடைகள் மற்றும் சவால்கள் மூலம் தங்களை தற்காத்துக் கொள்ளும் திறமையை உணர்வார்கள். இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் பல தடைகளை எதிர்கொள்வார்கள். இந்த மாதத்தில் தவறான புரிதலுக்கு உட்படாமல் இருக்க, சரியான தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக்காக சரியான பல விஷயங்களை இம்மாதத்தின் 29 மற்றும் 30 -க்குள் அமைக்க வேண்டும்.

டிப்ஸ்: இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று பொறுமையாக நல்ல காலம் வரும் வரை, அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எப்போதுமே சௌகரியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிரச்சனையின்றி எளிமையாக செல்லும் வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை இந்த ராசிக்காரர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மறுபுறம், இம்மாதம் இவர்களது தொழில் வளர்ச்சியில் சற்று முன்னேற்றத்தைக் காணலாம். இந்த மாதத்தில் நல்ல லாபத்தை அளிக்கும் சில ஒப்பந்தங்கள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கும், கனவை நனவாக்குவதற்கும் சரியான காலமாக இம்மாதம் அமையும்.

டிப்ஸ்: இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் மோசமாக செல்லும். இந்த மாதத்தில் இவர்கள் அதிகம் விரக்தி அடைவார்கள். ஆனால், இந்த மாதம் செல்ல செல்ல, அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு சாதகமாகவே அமையும். இவர்களது எளிமையான குணமும், பண்பும், இவர்களது தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மறுபுறம், இவர்களது நல்ல பேச்சு மற்றும் தொடர்பு கொள்ளும் திறமையால், பல எதிர்பாராத வாய்ப்புக்களும் இவர்களுக்கு கிடைக்கும்.

டிப்ஸ்: மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் எதிலும் சற்று பொறுமையாக இருந்து, மற்றவர்களது கருத்துக்களைக் கேட்டு புரிந்து நடந்தால், எதற்கும் பிரச்சனை இல்லாத ஒரு புதிய வழி கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவாலான மாதமாகவே இருக்கும். இவர்கள் போதுமான சுய-தற்செயல் நடவடிக்கைகள் மற்றும் சரியான தீர்வுகளை எடுத்து வெற்றிகரமாக வாழ்வை முன் நடத்த வேண்டும். இந்த மாதத்தில் இவர்களது வேலை சிறப்பாக இருக்க, பழைய ஐடியாக்களைத் தவிர்த்து, புதிய ஐடியாக்களை யோசித்து செயல்படுத்த வேண்டும். இந்த மாதத்தின் இறுதியில், இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது மற்றும் இவர்களது வாழ்வு பிரகாசமாக இருக்கும்.

டிப்ஸ்: இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க கடினமாக வேலை செய்தால், வாழ்நாள் முழுவதும் பிரச்சனையின்றி சிறப்பாக இருக்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் அவர்களது உறவுகளை புத்துணர்ச்சி பெறச் செய்யவும், புதுப்பிக்கவும் போதுமான வாய்ப்புக்கள் வரும். இந்த மாத்தில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கைக் குறித்த பல புதிய விஷயங்களையும், மதிப்புமிக்க ஒன்றையும் கற்றுக் கொள்வார்கள். மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரது வெளித்தோற்றத்தைக் கொண்டு எந்த ஒரு முடிவையும் இம்மாதத்தில் எடுக்காதீர்கள்.

டிப்ஸ்: இந்த ராசிக்காரர்கள் வரவிருக்கும் பணிக்காக நன்கு தயாராக இருக்க வேண்டும் மற்றும் தங்கள் வளங்களை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கார்களுக்கு இந்த மாதம் பிரகாசமான வாழ்வின் நுழைவாயிலாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்களது ஆதரவு மற்றும் உதவியை சிலர் விரும்புவார்கள். இவர்கள் தங்களுடைய கவனத்தை தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி திருப்பிவிடுவார்கள். மறுபுறம், இவர்கள் வாழ்க்கை மற்றும் மற்றவர்களது அனுபவத்தில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். அதோடு, இவர்களுக்கு சமூக மற்றும் வேலை வாழ்க்கைக்கு இடையில் சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கும்.

டிப்ஸ்: இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், போதுமான ஓய்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சொந்த, சமூக மற்றும் தொழில் வாழ்க்கைக்காக பல்வேறு பணிகளில் எப்போதும் ஓடி செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். மற்றவர்களை சந்தோஷப்படுத்த பல விஷயங்களை செய்யும் இவர்கள், தங்களது சொந்த வளர்ச்சியைப் பற்றி நினைக்காமலேயே இருப்பர். மறுபுறம், இந்த வருடம் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொடர்புகள் மற்றும் உறவுகள் கிடைக்கும். தொழிலில் வெற்றிப் பெறுவதற்கு ஏராளமானோரின் தொடர்புகள் கிடைக்கும்.

டிப்ஸ்: இவர்கள் வீட்டில் நல்லிணக்கத்தைப் பார்ப்பதற்கு, வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகரமான தேவைகளைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்களது உள்நாட்டு முன்னணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களுடனான பிணைப்பை வலுப்படுத்த முனைவார்கள். இந்த ராசிக்காரர்கள் நன்கு கனவு காண்பதோடு, தங்களது திறன்களையும் ஆராய்வார்கள். மறுபுறம், இவர்கள் இதுவரை நிலையாக இருந்தது முடிவடைவதோடு, புதிய விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்து இயங்க தொடங்குவார்கள். இதனால் இவர்களது பணி வாழ்க்கை சற்று சுவாரஸ்யமாக இருக்கும்.

டிப்ஸ்: ஆத்திரம் மற்றும் கோபத்திற்கு வழி கொடுக்க வேண்டாம்.

தனுசு

தனுசு

இந்த ராசிக்காரர்கள் கடந்த 2 மாதங்களாக பரபரப்பாக இருந்திருப்பார்கள். ஒரு வழியாக இந்த மாதம் இவர்களுக்கு சற்று ரிலாக்ஸாக இருக்கும். இவர்கள் கடந்த காலத்தில் பல போராட்டங்களை எதிர் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த மாதம் இவர்களுக்கு ஒரு நல்ல மாதமாக, நல்ல விஷயங்களை சேகரிக்கக்கூடியதாக இருக்கும். இந்த மாதம் இவர்கள் எடுக்கும் புதிய வாக்குறுதிகள், அவர்களது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

டிப்ஸ்: தியானம் மற்றும் யோகாவில் தினமும் ஈடுபட்டால், இவர்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும்.

மகரம்

மகரம்

இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று இடைவேளை வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் இந்த மாதம் இவர்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டிய காலமல்ல. இம்மாதம் இவர்களுக்கு பரபரப்பான காலமாகும். இந்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தங்களது ஆற்றல் பயன்படுத்தி புதிய திட்டங்கள் தொடங்க இது சிறந்த நேரம்.

டிப்ஸ்: இந்த ராசிக்கார்கள் அவர்கள் தங்கள் சுமையைச் சுலபமாக்க நம்பிக்கையான ஒருவருடன் அவர்களது பொறுப்பை பகிர்ந்து கொள்வது நல்லது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சற்று பழமைவாதிகள். இவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் தங்களை வெளிக்கொணர்வார்கள். அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்கள் அவர்களின் உலகளாவிய பார்வை அதிகரிக்கும். இந்த மாதம் இவர்களுக்கு சற்று மன அமைதியை அளிக்கும் வகையில் செல்லும்.

டிப்ஸ்: இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று வலுவாக இருக்கும். இருப்பினும் நிதி குறித்த ஏதேனும் ஒரு முடிவை எடுக்கும் போது, மற்றவர்களது கருத்துக்களையும் கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்களது கனவுகளை கண்டுபிடித்து, வெற்றி அடையவற்கு புதிய திசையில் செல்ல வேண்டும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையிலேயே அனைத்தும் நடக்கும். அதாவது இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக செல்லும்.

டிப்ஸ்: இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமாக எதுவும் நடக்காத போது, தங்களின் வாழ்க்கைக் குறித்து புகார் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி புகார் கூறுவதால், அனைத்தும் தவறாகத் தான் செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Sign Predictions For The Month Of March

Here is what this month has in store for each zodiac sign. Find out what is in store for you based on your zodiac sign…
Story first published: Tuesday, March 6, 2018, 13:16 [IST]