TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
சிவபெருமான் கழுத்தில் ஏன் பாம்பை அணிந்துள்ளார் தெரியுமா?
ஒவ்வொரு கடவுளின் உருவத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் சிவபெருமானின் உருவம் என்பது மிகவும் தனித்துவமாகவும், கம்பீரமாகவும் இருக்கும். விபூதி பூசிய நெற்றி, அதில் நெற்றிக்கண், தலையில் கங்கை, ருத்திராட்ச மாலை, கழுத்தில் பாம்பு என சிவபெருமானின் உருவமே நம்மை சிலிர்ப்படைய வைக்கும்.
சிவபெருமானின் கம்பீரத்தை அதிகரிக்கும் ஒரு விஷயம் அவரின் கழுத்தில் இருக்கும் பாம்புதான். சிவேபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்க பல கதைகளும், காரணங்களும் இருக்கிறது. இந்த பதிவில் சிவெபருமானின் கழுத்தில் பாம்பு இருக்க என்ன காரணம் அது உணர்த்தும் குறியீடுகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
நீலகண்டனான சிவபெருமான்
பாம்பு அல்லது நாகங்கள் என்பது ஆரம்பம் முதலே இந்து மதத்தில் போற்றுதலுக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது. பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கை என்னவென்றால் சிவபெருமான் பாற்கடலை கடைந்த ஆலகால விஷத்தை குடித்ததில் இருந்ததுதான் பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொண்டை பகுதியில் நீலம் பாய்ந்த சிவேபெருமான் அந்த தருணத்திலிருந்து நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.
குறியீடு 1
சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பது பிறப்பு மற்றும் மீளுருவாக்கம் என்னும் முடிவில்லா வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிறது. மேலும் கழுத்தில் அணியும் பாம்பானது நமக்குள் இருக்கும் ஈகோவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிக்கிறது.
குறியீடு 2
சில குறிப்புகள் சிவபெருமானிற்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போதுதான் பாம்பு அவரின் கழுத்திற்கு வந்ததாக கூறுகிறார்கள். திருமணத்தின் போது சிவன் பாம்பை பார்வதி தேவிக்கு அன்பளிப்பாக அளித்தார். பாம்புகள் அவற்றின் தலையில் விலைமதிப்பில்லா மணிகளை சுமந்து கொண்டு அவற்றை அன்பளிப்பாக பார்வதிக்கு கொண்டு சென்றனவாம்.
குறியீடு 3
சிவபெருமானுக்கு பசுபதிநாத் என்னும் பெயரும் உள்ளது. அதன் பொருள் அனைத்து உயிர்களுக்குமான கடவுள் ஆகும் மற்றும் அனைத்து விலங்குகளையும் கட்டுப்படுத்துபவர். பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றால் பயம், அதனால்தான் சிவன் பாம்பை தன் கழுத்தில் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறியீடு 4
சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதற்கு பல கதைகள் உள்ளது. சிவன் பாம்பை கழுத்தில் அணிகலனாக அணிந்துள்ளார். பாம்பு பயம் மற்றும் மரணத்தை வழங்கக்கூடியது. இதன்மூலம் சிவன் பயம் மற்றும் மரணத்தை அடக்கி தன் கழுத்தில் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறியீடு 5
சிவன் கழுத்தில் பாம்பு மொத்தம் மூன்று சுற்றுகள் உள்ளது. இந்த மூன்று சுற்றுகளும் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை உணர்த்துகிறது. இது சிவபெருமான் முக்காலத்தையும் உணர்ந்து அதனை கட்டுப்படுத்துபவர் என்று கூறப்படுகிறது.
குறியீடு 6
ஒருமுறை பாம்புகள் ஆபத்தில் இருந்தபோது அவை பாதுகாப்பிற்காக சிவபெருமானை அணுகின. சிவபெருமானும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கைலாயத்திற்குள் தங்க அனுமதித்தார். இருப்பினும் அதிக குளிரின் காரணமாக அவை கதகதப்பிற்காக சிவபெருமானின் உடலில் சுற்றிக்கொண்டன. சிவபெருமானும் அவற்றின் உயிரை காப்பாற்ற அதற்கு அனுமதித்தார்.
குறியீடு 7
உலகில் தீயசக்திகளின் உருவமாக பாம்பு கருதப்படுகிறது. பாம்பை தன் கழுத்தில் சுற்றிவைத்திருப்பதன் மூலம் சிவன் நமக்கு கூறும் செய்தி என்னவென்றால் தன்னை சரணடைந்தவர்களை எந்தவித தீயசக்திகளும் நெருங்காது என்று கூறுகிறார்.
குறியீடு 8
பாம்புகள் பேராசை மற்றும் பொறாமையின் பிரதிபலிப்புகள். பாம்பை தன் கழுத்தில் அணிந்தன் மூலம் தான் ஆசை மற்றும் பொறாமையை அடக்கி ஆள்வதை சிவன் குறிப்பால் உணர்த்துகிறார்.
குறியீடு 9
சிவபெருமானை சரணடைந்ததன் மூலம் வாசுகி பாம்பு தன் விஷத்தை மாணிக்க கல்லாக மாற்றக்கூடிய திறனை பெற்றது. இதன் காரணமாகவே மற்ற பாம்புகளும் சிவனின் கைகளில் ஆபரணங்களாக மாறின. இது உணர்த்துவது யாதெனில் தன்னை சரணடைந்தவர்கள் கடந்த காலத்தில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களின் மனது இப்பொழுது தூய்மையாக இருந்தால் சிவபெருமான் விலைமதிப்பில்லா நற்குணத்தை வழங்குவார்.
MOST READ: செத்தாலும் பரவாயில்ல... இனி! அவன் கை என்மேல படக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்