For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா?... அட இதுக்குதாங்க!

  |

  ஸ்ரீ கிருஷ்ணர் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, அதர்மத்தை அழிக்க அவதரித்தவர். ஸ்ரீமன் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாக கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகிறது. தான் ஒரு மன்னனாக முடிசூடிக்கொள்ள முடியாதவாறு சபிக்கப்பட்டாலும், பேரரசர்களையும், மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையும் உருவாக்கியவர் ஸ்ரீ கிருஷ்ணர்.

  lord krishna

  கிருஷ்ண பகவான் தன் மேனியில் எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்திருந்தாலும், அவரது மணிமகுடத்தை அலங்கரிக்கும் மயிலிறகு அவற்றில் எல்லாம் சிறப்பு வாய்ந்தது. அது கிருஷ்ணனின் சின்னமாகவும் விளங்குகிறது. பக்தர்கள் "மொர்முக்குட் தாரி", அதாவது 'மயில் இறகுகளின் கிரீடம் அணிந்தவர்' என பகவானை அன்புடன் அழைக்கின்றனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  புராணங்கள் என்ன கூறுகின்றன?

  புராணங்கள் என்ன கூறுகின்றன?

  ஒரு முறை கோவர்தன மலையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் புல்லாங்குழலில் வாசித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த தெய்வீக கானத்தின் இனிமை பொருந்திய மெல்லிசையில் மயங்கிய மயில்கள் பரவசத்துடன் ஆடின. அப்போது உதிர்ந்த அதன் இறகுகளை எடுத்து இராஜா மயில் இறைவனுக்கு பேரன்புடன் வழங்கியது. இறைவன் அதை கருணையோடு ஏற்றுக்கொண்டு தன் சிரசில் அலங்கரித்துக்கொண்டார்.

  ஏழு நிறங்கள்

  ஏழு நிறங்கள்

  மயிலிறகில் 7 முதன்மை வண்ணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது பகவான் தன்னுள் எல்லா வண்ணங்களையும் கொண்டவர் என்பதை காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கியவர். அவர் பல்வேறு வடிவங்கள், காட்சிகள் மற்றும் நிலைகளில் நம்மை வழிநடத்துகிறார்.

  முருகப் பெருமானின் வாகனம்

  முருகப் பெருமானின் வாகனம்

  ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், முருகப் பெருமானின் தாய் மாமனாக கருதப்படுகிறார். முருகர், மயிலை வாகனமாகக் கொண்டவர். எனவே முருகன் தனது எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற, தன் சிரசில் கிருஷ்ணர் மயிலிறகை சூடியுள்ளார் என்றும் இன்னொரு புராணம் கூறுகிறது.

  அழகும் அறிவும்

  அழகும் அறிவும்

  இது அழகு மற்றும் அறிவின் ஒரு சின்னமாகும். மயிலிறகில் உள்ள கண், ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக ஞானத்தின் அடையாளம். இது தன்னைப் பற்றி ஒருவர் உணர்வதற்கு உதவுகிறது. மனதின் ஞானமும் இதயத்தின் அன்பும் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்குகிறது என்பதை இது அடையாளப்படுத்துகிறது. மேலும், இந்த அனுகிரஹ நிலை பெற, இறைவனின் மயிலிறகுடன் கூடிய தோற்றதை வழிபடுவது மிகவும் முக்கியம். இறகு, நம்மை எல்லா தீவினைகளிலிருந்தும் காத்து கோபம், பேராசை, பொறாமை, வஞ்சகங்களை அழிக்கிறது.

  சொர்க்கம்

  சொர்க்கம்

  இறகுகள், ஆயிரம் கண்களைக் கொண்டது, இது சொர்க்கத்தின் திறவுகோலாக, நட்க்ஷத்திரங்களின் கண்களாக விளங்குகிறது. இதன் மாறுபட்ட வண்ணங்கள், மயிலின் இறக்க குணத்திற்கு இந்திரன் தந்த பரிசு ஆகும்.

  வழியாடு

  வழியாடு

  கிரகங்களின் தீய தாக்கத்தை போக்கும் சக்தியும் இறகுகளுக்கு உண்டு. ராதை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் அனுகிரஹமும் பெற இந்த மயிலிறகு அணிந்த ரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது சிறந்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Why Lord Krishna wears a peacock feather on his crown

  Krishna's Leelas are endless. If you are familiar with Lord Krishna's life, you will agree that he was one of the most charismatic avatars of Vishnu. His repertoire extended from emotional connection
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more