அமானுஷ்ய நிகழ்வுகளும், மக்களின் பேரச்சமும். 13th Friday ஏன் கெடுதலாக காணப்படுகிறது?

Posted By: Staff
Subscribe to Boldsky

இன்று ஏப்ரல் மாதம் 13ம் நாள், வெள்ளிக்கிழமை...

நம் சமூகத்தில் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையிலான மூட நம்பிக்கை மக்களால் பின்பற்றப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை பேய், நஷ்டம், மரணம் சார்ந்தவகையாக இருக்கிறது. ஆனால், இந்த மூன்றும் கலந்த ஒரு மூட நம்பிக்கை தான் 13ம் நாள் வெள்ளிக்கிழமை.

பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளிலும், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களாலும் பெரிதும் பின்பற்றப்படும் மூட நம்பிக்கையாக இது விளங்கி வருகிறது. கடந்த 13ம் நூற்றாண்டில் இருந்து தான் இந்த நாள் கேடு விளைவிக்கும் நாள் என்று கூறி, பல நிகழ்வுகளை தொடர்ந்து உதாரணமாக முன்னெடுத்து வைத்து வருகிறார்கள்.

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த 13ம் நாள் வெள்ளிக்கிழமையில். ஏன் இதை அபசகுணமான நாளாக கருதுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருப்பு இந்த 13th Friday?

யாருப்பு இந்த 13th Friday?

பெயர்: 13th Friday

ஞாயிறு: எந்தெந்த மாதத்தின் முதல் நாள் ஞாயிறில் துவங்குகிறதோ, அப்போதெல்லாம் 13ம் நாள் வெள்ளிக்கிழமையில் அமையும்.

குணாதிசயம்: மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவது. பேய் படங்களின் கருவாகவும், பேய் வரும் நாளாகவும் காணப்படுகிறது.

இதர வேலைகள்: அபசகுனம் என்ற மூடநம்பிக்கையை மக்களுக்குள் விளைவித்திருக்கிறது.

ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் சராசரியாக இருபது முறை 13ம் தேதி வெள்ளிக்கிழமையில் அமைகிறது.

ஃபோபியா!

ஃபோபியா!

13ம் நாள் வெள்ளிக்கிழமை மேல் இறுக்கம் அச்சத்திற்கு அதிகாரப் பூர்வமாக ஒரு ஃபோபியா பெயர் சூட்டியுள்ளனர். அது Paraskevidekatriaphobia என்று கூறப்படுகிறது. இந்த அச்சம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை 13ம் தேதி வந்தால், வெளியே எங்கேயும் பயணிக்க மாட்டார்கள், அந்த நாளில் பெரிதாக எந்த செல்வமும், சொத்தும், பொருட்களும் வாங்க மாட்டார்கள். ஏன், அந்த நாளில் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

நஷ்டம்!

நஷ்டம்!

இப்படி மக்கள் 13ம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் பெரிதாக வர்த்தகம் செய்ய மறுப்பதால் அமெரிக்காவில் இந்த நாட்களில் மட்டும் $900 மில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது என்று தி டெலிகிராப் என்ற நாளேடு ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது அமெரிக்காவின் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் செண்டர் மற்றும் ஃபோபியா இன்ஸ்டிடியூட் சேர்ந்த நடத்திய ஆய்வில், இந்த மூடநம்பிக்கை மூலம் இவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எண்ணிக்கை!

எண்ணிக்கை!

வடக்கு கரோலினாவை சேர்ந்த ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஃபோபியா இன்ஸ்டிடியூட் நடத்திய இந்த ஆய்வில் அமெரிக்காவில் இந்த நாளில் 17-21 மில்லியன் மக்கள் அச்சம் கொள்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே மக்கள் அதிகமாக அச்சப்படும் நாளாகவு இந்த நாள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் சில இந்த நாளில் தான் பெரும்பாலும் மிக குறைவான பயணிகள் எண்ணிக்கை பதிவாகிறது என்றும் கூறியுள்ளனர்.

பின்லாந்து!

பின்லாந்து!

பின்லாந்து நாட்டில் அரசாங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் சமூக தொடர்பு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தலைமையில் 13ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று தேசிய விபத்து நாள் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விழிப்புணர்வு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜியசாகோனோ ரோஸ்னி

ஜியசாகோனோ ரோஸ்னி

இத்தாலியை சேர்ந்த ஒரு இசை அமைப்பாளர் ஜியசாகோனோ ரோஸ்னி. 1869ல் வெளியான இவரது சுய சரிதையில் தான் முதல் முறையாக வெள்ளிக்கிழமையில் வரும் 13ம் நாளானது மோசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. அந்த புத்தகத்தில் இவர் 13 மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டையுமே துரதிர்ஷ்டவசமான நாளாக கருதியதாக கூறப்பட்டுள்ளது. அதே போல அவர் இறந்த நாளும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம்!

மரணம்!

The Exorcist என்ற பேய் கதையை எழுதிய வில்லியம்ஸ் பீட்டர் என்பவர் இறந்த மறுநாள் வெள்ளிக்கிழமை 13ம் நாள் ஆகும். இவர் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி இறந்தார். இவர் The Exorcist என்ற புகழ்பெற்ற பேய் கதையை நாவலாக 1971 ல் எழுதினார். இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு இன்று வரை சினிமாவில் வரலாற்றில் ஒரு சிறந்த பேய் படமாக திகழ்ந்து வருகிறது.

கிறிஸ்து!

கிறிஸ்து!

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட கிழமை வெள்ளி. மேலும், தி லாஸ்ட் சப்பர் எனப்படும் கடைசி விருந்தில் 13வது ஆளாக கலந்துக் கொண்டவர் யூதாசு (Judas) , இவர் தான் ஏசுவுக்கு துரோகம் செய்தவர் என்று அறியப்படுகிறது. இதனால், கிறிஸ்துவ மதத்தில் இந்த 13ம் நாள் வெள்ளிக்கிழமை என்பது கொஞ்சம் அபசகுணமான நாளாக காணப்படுகிறது.

தவிர்த்தல்!

தவிர்த்தல்!

13ம் நாள் வெள்ளிக்கிழமை மோசமான நாளாக கருதப்படுவதால், ஹோட்டல்களுக்கு சென்றால் பலர் 13ம் எண் அறையை தேர்வு செய்வதில்லை. பலரும் தங்கள் திருமணத்தை இந்த நாளில் வைக்க முயற்சிப்பது இல்லை. இதை எல்லாம் விட, பல மாடி கட்டிடங்கள் கட்டும் போது 13வது தளத்தை வெற்றிடமாக அல்லது வேறு விஷயத்திற்கு, வேலைக்கு பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

அதே சமயத்தில் சிலர் இந்த நாளை லக்கான நாளாக கருதுவதும் உண்டு.

டைலர் ஸ்விப்ட்!

டைலர் ஸ்விப்ட்!

அனைவரும் 13ம் நாள் வெள்ளிக்கிழமையில் வந்தால் ராசி இல்லை என்று கூறுகையில். பாடகி டைலர் ஸ்விப்ட் மட்டும், அது எனக்கு ராசியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை பேட்டி ஒன்றில் 13 எனக்கு ராசியான எண் என்றும். எனது 13வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமையில் அமைந்தது. எனது முதல் ஆல்பம் 13வாரத்தில் கோல்ட் அந்தஸ்து பெற்றது. எனது முதல் பாடலின் அறிமுக பகுதி 13 வினாடிகள் கொண்டிருக்கும். நான் ஒவ்வொரு முறை விருது பெறும் போதும் 13ம் நம்பர் இருக்கைம் வரிசை அல்லது செக்ஷனில் இருப்பேன். எனவே இது எனக்கு லக்கி என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

இத்தாலியில்!

இத்தாலியில்!

உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 13ம் நாள் அபசகுனமாக பார்க்கப்படும் போது, இத்தாலியில் ஒரு மாதத்தில் 17ம் நாள் வெள்ளிக்கிழமையில் வந்தால் அதை கெட்ட நாளாக கருதுகிறார்கள். மேலும் இத்தாலியில் 13ம் எண் லக்கியாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Friday The 13 is Unlucky?

Why Friday The 13 is Unlucky? Here is a few incidents and Facts about this case.
Story first published: Friday, April 13, 2018, 14:30 [IST]