ஓடும் ரயிலில் காவலர் முன் மானபங்கப் படுத்தப்பட்ட பெண் மும்பையில் பரபரப்பு - வீடியோ!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஆரம்பத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை துன்புறுத்தல்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்துக் கொண்டிருந்தது. நிர்பயா வழக்கில் இருந்து அது வெட்டவெளியிலும், மக்கள் கூடியிருக்கும் பொது போக்குவரத்து வாகனங்களிலும் நடக்க துவங்கியது.

நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என்று சல்லடைப் போட்டு தான் தேட வேண்டும். வெட்ட வெளியில், பொது இடத்தில் பெண்கள்களை பாலியை துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கு எங்கிருந்து ஆண்களுக்கு தைரியம் வந்தது? சட்டம் கடுமையாக இல்லை என்பதாலா? இல்லவே இல்லை. நம் கண் முன்னே நடக்கும் கொடுமைகளை மக்களாகிய நாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை என்பதால்.

நாம் கண்டுக் கொள்ளாமலேயே இருப்பதால் தான், மீண்டும் ஒரு பெண் மும்பையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொந்த கணவன்!

சொந்த கணவன்!

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டுதிய அந்த ஆண், வேறு யாரும் இல்லை, அந்த பெண்ணின் சொந்த கணவன். அந்த சமயத்தில் அந்த ஆள், குடி போதையில் இருந்தார் என்று அறியப்படுகிறது. இந்த சம்பவம் மும்பையின் லோக்கல் ரயிலில் நடந்துள்ளது.

ஊனமுற்றோர் கம்பார்ட்மெண்டில்...

ஊனமுற்றோர் கம்பார்ட்மெண்டில்...

அப்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடமானது ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு கம்பார்ட்மெண்ட் ஆகும். ஆகையால் தான் அருகே சிலர் இருந்தும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் போனது. அவர்களால் ரயிலை நிறுத்த செயினை இழுக்க முடியாமல் போனது. மேலும் இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்த காரணத்தால் கூட்டமும் குறைவாக இருந்ததால், யாராலும், அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

போலீஸ் இருந்தும்...

போலீஸ் இருந்தும்...

பாதுகாப்பு கருதி லோக்கல் ரயிலில் அலாரம் வைக்கப்பட்டிருந்தும். போலீஸ் பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்ததால், ஓடும் ரயிலில் அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் போனது. சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் போலீஸ் எத்தனையோ கத்தி, கூச்சலிட்டும் குடிபோதையில் இருந்த ஆணை யாராலும் தடுக்க முடியவில்லை.

கைது!

கைது!

ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும், மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய கணவனை போலீஸ் கைது செய்தனர்.

கைது செய்து என்ன பயன்? எப்படியும் ஒருசில நாட்களில் அல்லது வாரங்களில் அவன் வெளியே வந்துவிட தான் போகிறான். ஆனால், இப்படியான கொடூரமான சமூகத்தில் இருந்து யார் தான் பெண்களை காப்பாற்றுவது.

பெப்பர் ஸ்ப்ரே!

பெப்பர் ஸ்ப்ரே!

கைப்பைக்குள் பெண்கள் மேக்கப் பொருட்கள் வைத்திருந்த நிலைமை மாறி, பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய் பொடி, கத்தி என வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு நாம் ஆளாக்கியுள்ளோம்.

நான்கு சுவர்களுக்குள் நடக்கும் தவறுக்கு கடுமையான தண்டனையும், பொது இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு பொதுமக்களே எதிர்த்து குரல் உயர்த்தினால் மட்டுமே இத்தகைய குற்றங்கள் குறையும்.

வீடியோ!

மும்பை லோக்கல் ரயிலில் சொந்த கணவனால், ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்மணி - வீடியோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Video: Man Assaulted His Wife While Cops Watched!

This is one of the worst cases where the man was seen abusing his own wife while the rest of the passengers just watched and did not pull the chain of the moving train. Sad reality is when you realise a cop was watching it too!
Story first published: Friday, April 6, 2018, 17:10 [IST]