For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வியக்கவைக்கும் இந்தியர்களின் பண்டையகால கண்டுபிடிப்புகள்

  |

  இந்த உலக முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகளில் பலவற்றுக்கான பெயரும், புகழும் மற்ற நாடுகளுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதனை கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் இந்தியர்கள் அதனை கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இயற்பியலில் இருந்து விண்வெளி வரை நாம் கண்டறியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை.

  Indian science

  இன்று நவீன அறிவியலால் கூட குணப்படுத்த முடியாத எத்தனையோ நோய்களை நமது முன்னோர்கள் வெறும் மூலிகைகைகளை கொண்டே குணப்படுத்தி கொண்டிருந்தார்கள். நமது முன்னோர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்த எண்ணினர், ஒருவேளை மற்ற நாடுகளை போல அவற்றை வைத்து வியாபாரம் செய்ய நினைத்திருந்தால் இன்று இந்தியா உலகநாடுகளை அனைத்து துறையிலும் விஞ்சி நின்றிருக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சுஷ்ருதா சம்ஹிதா

  சுஷ்ருதா சம்ஹிதா

  சுஷ்ருதா சம்ஹிதா என்பது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ முறையாகும். நமது முன்னோர்கள் இந்த முறையை பயன்படுத்தி அறுவைசிகிச்சைகளை அப்போதே செய்தனர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுஷ்ருதா சம்ஹிதா என்ற மாபெரும் புத்தகம் 1,120 நோய்கள், 700 மருத்துவ தாவரங்கள், கனிமங்களை கொண்டு தயாரிக்கப்படும் 64 தயாரிப்புக்கள் மற்றும் விலங்கு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 57 தயாரிப்புகளின் விவரங்களைக் கொண்ட 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியரான சுஷ்ருதா, மனிதர்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை மேற்கொண்ட முதல் மனிதராகவும் கருதப்படுகிறார். இது மட்டுமின்றி இந்த புத்தகம் மனித உடற்கூறியல், அனைத்து நரம்புகளின் செய்லபாடுகள், அனைத்து வலிகளையும் நரம்பின் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கிறது. மருத்துவ உலகின் பொக்கிஷமாக இருக்கவேண்டிய இது பலரின் கவனத்திற்கும் வராமலே போய்விட்டது. உயிரோடுள்ள இரு மனிதனுக்கு பல்லில் துளையிட்டு அறுவைசிகிச்சை நடத்தியதற்கான சான்றுகள் அண்மையில் மெஹ்ராவில் கிடைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 9000 ஆண்டுகள் பழமையானது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

  சோலார் சிஸ்டம்

  சோலார் சிஸ்டம்

  சூரிய குடும்பத்தின் வெப்ப மண்டல மாதிரியை கண்டறிந்ததாக உலக வரலாறு கோபெர்னிகஸை பாராட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இதனை முதலில் கண்டறிந்தது இந்தியர்கள்தான். முதன் முதலில் சூரியன்தான் சூரிய குடும்பத்தின் மையம் எனவும் அதை சுற்றித்தான் மற்ற கோள்கள் இருப்பதாகவும் ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது.

  குளோனிங், டெஸ்ட் ட்யூப் பேபிஸ், வாடகைத்தாய்

  குளோனிங், டெஸ்ட் ட்யூப் பேபிஸ், வாடகைத்தாய்

  மகாபாரதத்தில் காந்தாரிக்கு 100 குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண்ணொருத்தி தன் வாழ்நாளில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது என்பது இயலாத ஒன்று. பின் எப்படி 100 கௌரவர்கள் பிறந்திருக்க முடியும். அவர்கள் ஒரு குடுவையிலிருந்து பிறந்தவர்கள். அதாவது தற்கால டெஸ்ட் ட்யூப் முறையில். அதேபோல மகாபாரதத்தில் வரம் முக்கியநபரான விதுரர் அரண்மனை பணிப்பெண்ணுக்கு பிறந்தவர் அதாவது வாடகைத்தாய் மூலம் பிறந்தவர்.

  சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம்

  சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம்

  " யுக சகஸ்ர யோஜன் பார் பனு லீயோ தாகி மதுர பால் ஜானு " இது அனுமன் புராணத்தில் வரும் ஒரு கூற்றாகும். அனுமன் சூரியனை பழமென நினைத்து அதனை தொட பல்லாயிர கிலோமீட்டர் பறந்து சென்றார் என்பது இதன் பொருள். இதனை மொழிபெயர்த்து பார்த்தால் அவை நம் விழிகளை ஆச்சரியத்தில் உயரச்செய்யும்.

  1 யுகம் = 12000 வருடங்கள், 1 சஹஸ்ர யுகம் = 12000000 வருடங்கள், 1 யோஜன் = 8 மைல்.

  இந்த பாடலின் முதல் மூன்று வார்த்தைகளை கவனித்தால் 12000*12000000*8 = 96000000 மைல் அல்லது 153,600,000 கிலோமீட்டர். ஆச்சரியமான தகவல் என்னவென்றால் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 152,000,000. அனுமன் புராணத்திலிருக்கும் தூரத்தை விட 1% குறைவு. சூரியனின் தொடர்ச்சியான நகர்வை கணக்கிடும்போது இது சரியான தூரமாய்த்தான் இருந்திருக்கும்.

  புவிஈர்ப்பு விசை

  புவிஈர்ப்பு விசை

  மீண்டும் ஒரு வரலாற்று பிழை. ஐசக் நியூட்டன் கண்டறியும் முன்னரே புவிஈர்ப்பு விசையை பற்றி குறிப்புகள் இந்தியாவில் எழுதப்பட்டுள்ளது. " இந்த பூமி கைகளாலும் கால்களாலும் இல்லாதது, இருந்தாலும் அது முன்னோக்கி நகரும். பூமியிலுள்ள அனைத்து பொருட்களும் அதனுடன் நகர்கின்றன. இது சூரியனைச் சுற்றி நகரும். " இது ரிக் வேதத்தில் எழுதப்பட்டது. அதாவது நியூட்டன் கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கூறியது.

  ஒளியின் வேகம்

  ஒளியின் வேகம்

  14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சயனா, ஒரு வேத ஆசிரியர் கூறுகிறார் " அரை நிமிஷா 2,202 யோஜனாக்கள் கடக்கும் சூரியனை மரியாதையுடன் வணங்குகிறேன்" என்று. ஒரு யோஜனா என்பது 9 மைல். நிமிஷா என்பது 16/75 நொடி. அதாவது 2,202 யோஜனா* 9 மைல் * 17/8 நிமிஷா = 185, 794 மைல் அல்லது 2,99,000 கிலோமீட்டர் ஒரு நொடிக்கு. அறிவியல்ரீதியாகா ஒளியின் வேகம் நொடிக்கு 300,000 கிலோமீட்டர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

  பையின் மதிப்பு

  பையின் மதிப்பு

  வரலாற்றின்படி பையின் மதிப்பை லம்பேர்ட் தான் 1761 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நிரூபித்தார். ஆனால் இந்தியாவை சேர்ந்த கணிதவியாளர் ஆர்யபட்டா பல ஆண்டுகளுக்கு முன்னரே பையின் மதிப்பு 3.1416 என்பதை கண்டறிந்தார். இதில் முக்கியமான ஒன்று அதை கண்டறிந்தபோது அவரின் வயது வெறும் 23 தான்.

  பூமியின் சுற்றளவு

  பூமியின் சுற்றளவு

  இந்தியரான ஆர்யபட்டா கண்டுபிடித்த பூமி சுழலும் அச்சிற்க்கான பெருமையை துரதிர்ஷ்டவசமாக கிரேக்கர்கள் எடுத்துக்கொண்டனர். பையின் அளவு 3.1416 என்பதை கண்டறிந்த பிறகு பூமியின் சுற்றளவு 39736 கிலோமீட்டர் எனக்கூறினார். இப்போதிருக்கும் விஞ்ஞானிகள் பூமியின் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு பூமியின் சுற்றளவு 40,075 கிலோமீட்டர் என்று கூறியுள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வளவு அருகில் கண்டுபிடித்தது சாதாரணமானது அல்ல.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  8 facts that proved that ancient Indian science was more advanced

  All inventions which were invented for human development were credited to the western world. But the actual fact is many inventions were invented by Indians before all of them.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more