சும்மா விழுந்து விழுந்து சிரிக்கணுமா, 2 நிமிஷம் இந்த பக்கமா வந்துட்டு போங்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒரு பக்கம் தமிழ்நாடு முழுக்க போராட்ட களமா இருக்கு. விவசாயிங்க, சினிமா காரங்க, பொதுமக்கள்னு எல்லாரும் போராடிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவால சொம்பு தூக்கிட்டு ஒரு கூட்டமும், பூ மலரவிடாம விடமாட்டோம்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரு கூட்டமும் எதுக்கு ஓடுறோம்ன்னு தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு.

புதுசா வரவங்க என்ன பண்ணுவாங்க.. முன்னாடி இருந்தவங்க என்ன பண்ணுவாங்கன்னு நம்ம மனசு தான் பக்கு பக்குன்னு அடிச்சுக்கிட்டே இருக்கு. சரி அமெரிக்காவுக்கே போயிடலாம் சிவாஜின்னு பிளான் போட்டா.. அங்க ஒரு வெள்ளை போண்டாஜி ஒருத்தர் உட்கார்ந்துட்டு விரட்டி விடுறாரு. இப்படி பல இம்சைகளுக்கு நடுவுல டார்கெட் டென்ஷன் வேற உங்களுக்கு இருக்கும்.

வாங்க அதை எல்லாம் மறந்துட்டு... கொஞ்ச நேரம் சிரிச்சுட்டு போகலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லொள்ளு!

லொள்ளு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த உச்ச நடிகர்ன்னு தமிழ்நாட்டுல சொல்வாங்க. அதாகப்பட்டது அவர விட பெரிய ஹீரோ இல்லப்பா அப்படின்னு சொல்றதுக்காக உச்ச நடிகர் அப்படின்னு புகழ்ந்து பேசுவாங்க. அப்படி லொள்ளுக்கு உச்சம் எதுன்னு கேட்டா... இதோ நம்ம தம்பிய கை காமிக்கலாம். எம்புட்டு சொகுசா லேப்டாப்ப தொங்கவிட்டு கால்மேல கால் போட்டுக்கிட்டு படம் பாக்குறாப்புல பாருங்கள்.

முடியுமா?

முடியுமா?

நல்ல ஐடியாவா இருக்குள்ள... நம்மளா இருந்திருந்தா இந்நேரத்துக்கு ஒரு ஆட்டோவோ.. டாக்சியோ பிடிச்சு தண்டத்துக்கு ஐநூறு ரூபா செலவு பண்ணி இருப்போம். ஆனா, ஒன்னு ப்ரோ... இந்த நம்ம ஊருக்கு அப்ளிகபில் ஆவாது. நம்ம ஊரு ரோடு நிலைமைக்கு ரெண்டாவது தெரு தாண்டுரதுக்குள்ளு ட்ராலி குண்டு குழியில இறங்கி ஏறி, ரெண்டு மூணா உடைஞ்சு போயிருக்கும்.

சோர்வு..

சோர்வு..

ஒபாமாவுக்கே இப்படி ஒரு நிலைமையா... நம்ம ஊரா இருந்திருந்தா... கண்ணத்துல ரைன்னு ஒண்ணு விட்டு கிளப்பிவிட்டு.. எதாச்சும் கேமராவுல பதிவாகி இருந்தா... அடுத்த நாளே கூப்பிட்டு.. நான் பாசமாக தான் தட்டினேன்.. அடிக்கவெல்லாம் இல்லைன்னு அறிக்கை விட்டிருப்பாங்க. சரி.. அமெரிக்கா... அமெரிக்கா தான். பாவம் அவங்களே இப்போ டிரம்ப வெச்சுக்கிட்டு லோல் படுறாங்களாம்.

ரைட்டு!

ரைட்டு!

அவரு எழுதி வெச்சிருக்கிறது ஒன்னும் பொய் இல்லையே.. போன்லஸ் சிக்கன் தானே கேட்டிங்க... அது சிக்கன் தானே.. அதுல போன் இல்லையே... அப்போ இது போன்லஸ் சிக்கன் தானே... இதுக்கு சிக்கன் 65 கேஸ் கூட கொஞ்சம் பரவாயில்ல போலவே. காமெடி எல்லாம் உண்மை சம்பவங்கள்ல இருந்துதான் எழுதுராயிங்க போல.

அண்டு கொடுத்தல்...

அண்டு கொடுத்தல்...

மனுஷன் அம்புட்டு உயரத்துல நின்னு வேலை பண்ணிக்கிட்டு இருக்காப்புல.. விளாம இருக்க ஏணிய பிடிடான்னா.. கட்டைய வெச்சு அண்டு குடுக்குறேன்னு பெயருல பக்கி லந்த கொடுக்கிறது பாருங்களேன். எத்தன நாள் பிளானோ, பகையோ யாருக்கு தெரியும். வாங்க நாம அடுத்த போட்டோவுக்கு போவோம்.

எம்புட்டு..

எம்புட்டு..

ஆரம்பத்துல ஒன்னு ரெண்டு பேரு நிஜமாவே இப்படி செருப்புக்கு பூட்டு போட்டு டிரெண்ட் ஆனது என்னவோ உண்மை தான். ஆனா, அதையே ஒரே ஃபார்முலாவா வெச்சுக்கிட்டு தொடர்ந்து வகை, வகையா... டிசைன், டிசைனா இப்படியே செருப்புக்கு பூட்டுப் போட்டு நோக அடிக்கிறாங்க பாஸ். இதுக்கு ஒரு எண்டு கார்டே இல்லையா...?

என்ஜினியர்!

என்ஜினியர்!

இப்ப தெரியுதா என்ஜினியர் படிச்சா ஏன் வேலை கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. உடம்பு முழுக்க அம்புட்டும் அறிவு. அதிக பிரசங்கி தனமா ஏதாவது பண்ணிட வேண்டியது அப்பறம் வேலை கிடைக்கலன்னு உட்கார்ந்து புலம்ப வேண்டியது. தம்பி புத்திசாலி தான்... என்ன பண்ண வீட்டுலையே உட்கார்ந்துட்டு இருந்தா இப்படி தான் எதாவது குண்டக்க மண்டக்க யோசிக்க தோணும்.

பத்திரம்டா சாமி!

பத்திரம்டா சாமி!

முன்னப்பின்ன ஏதாவது பகை இருந்தா.. வேலை முடிஞ்சு மேல வந்ததும் பேசி தீர்த்துக்கலாம்... மக்கா இப்படியே பத்திரமா தூக்குங்கடா... கன்னிக் கழியாத சிங்கிள் டா நானு. என்ன இப்படியே பரலோகம் அனுப்பி விட்டுடாதீங்க டா மக்கா...

சிங்கமாவே இருந்தாலும் உள்ளூர ஒரு அல்லு இருக்க தானே செய்யும்.

சேஃப்டி அங்கிள்!

சேஃப்டி அங்கிள்!

முடியுமா? நாசா இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட இப்படி ஒரு கண்டுபிடிப்ப... ஒரு பாதுகாப்ப உருவாக்குனது இல்லையாம். இத நம்ம பாதுகாப்பு துறை அமைச்சகம் பின்பற்றலாம். எத்தன நாளைக்கு தான் அடர்த்தியான சுவர் கட்டியே பாதுகாப்பீங்க... இனிமேலாவது அப்டேட் ஆகி பூட்டுப்போட கட்ட்துக்குங்க பாஸ். எங்க அண்ணன் பார்த்திங்களா.. எப்படி உஷாரா இருக்காரு.

சில்மிஷம்!

சில்மிஷம்!

செல்ஃபீலா சில்மிஷம் பண்ணுது பிஞ்சுல பழுத்த விஷம். பின்னாடி இருக்க பொண்ணு, நம்ம பயலுக்கு பின்னாடி இருக்க யாருக்கோ இச்சு கொடுத்துக்கிட்டு இருக்கு. நம்ம பய பார்த்தீங்களா ஏதோ தனக்கே கொடுக்குற மாதிரி போட்டோக்கு போஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிறான். அவன் கண்ணுல அது நமக்கு கிடைக்கலையேங்கிற ஏக்கம் ததும்புது...

அடுத்தது...

அடுத்தது...

அட இந்திய பாதுகாப்பு துறை நம்ம மக்கள் கிட்ட இருந்து கத்துக்க நிறைய இருக்கு போல. அங்க நம்ம அண்ணாத்த என்னத்த பாதுகாப்பு பண்ணாப்புல. இங்குட்டு பாருங்க நம்ம அறிவு ஜீவி. முடியுமா? யாராலையாவது இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு பண்ண முடியுமா? இவிங்கள எல்லாம் அருங்காட்சியகத்துல வெக்கணும்.

நண்பன்டா!

நண்பன்டா!

இதுக்கு தான் ஒரு நண்பன் வேணும்ன்னு சொல்றது. உயிர் கொடுப்பான் தோழன்னு சொல்வாங்களே... அதுக்கான ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு இவரு தான். போலீஸ் கிட்ட மாட்டுன விட்டுட்டு ஓடுற ஜஸ்ட் பிரண்ட் எங்க, போலீஸ் கிட்ட மாட்டிட கூடாதுன்னு நம்பர் பிளேட்ட கையிலேயே வெச்சுட்டு போற நம்ம பிரண்ட் எங்க... எங்கையோ போயிட்டீங்க பாஸ்.

பிடிக்கல...

பிடிக்கல...

என்ன திடீர்ன்னு வெயிட்டு ரொம்ப அதிகமா இருக்கு... அடேய் நொண்ண பயலே வெயிட்டு தூக்க டச்சு கொடுடான்னு கூப்பிட்டா.. அங்க உன் வெயிட்ட காமிச்சு ரூட்டு விட்டுட்டு இருக்கியா...

இதோ இவருக்கு பெயரு தான் ஜஸ்ட் பிரண்ட். பிகரு வந்தா நண்பன கழட்டி விட்டுட்டு போறதுதான் இவங்க வழக்கமே!

அரசின் சாதனைகள்!

அரசின் சாதனைகள்!

இது யானை மாதிரி ஆனா யானை இல்ல. இப்படி தான் நம்ம அரசியல் கட்சிகள் எல்லாம் நாங்க பண்ணது சாதனைன்னு வருஷா வருஷம் விளம்பரம் பண்ணிக்கிறாங்க. ஆனால், அது மக்களுக்கு சோதனையா தான் இருக்குன்னு ஏனோ அவங்க புரிஞ்சுக்கிறதே இல்லை.

சரி விடுங்க ஏற்கனவே திரும்பி போன்னு டிரெண்ட் பண்ணியாச்சு. வேற ஏதாவது சொல்லி, மறுக்கா நோட்டோட கலர மாத்தி கியூவுல நிக்க வெச்சிட போறாங்க. இதுவேற ஏப்ரல் மே, நிக்கவும் முடியாது.

பேசுவ இனி..

பேசுவ இனி..

இதோ இப்படி தாங்க நாம எதாவது பேசுனா.. எதாவது குண்டக்க, மண்டக்க சட்டம் போட்டு நம்மள மிரட்டி விட்டுறாங்க. சரி எப்படியும் அடுத்த வருஷம் நம்மக்கிட்ட தன் கை ஏந்தி வரணும். அப்ப வெச்சுப்போம் வெட்டு. இப்போ கிளம்புவோமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Photo Collection Will Make You Laugh out Loud!

This Photo Collection Will Make You Laugh out Loud!