TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்று சாஸ்திரம் சொல்கிறது
அனைவருக்குமே தன்னுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமென்பதே ஆசையாக இருக்கும். அதற்காகத்தான் படிப்பது, கடினமாக உழைப்பது என அனைத்தையும் நாம் செய்கிறோம். சிலர் எதிர்காலம் சிறப்பாக இருக்க குறுக்குவழியில் கூட செல்வார்கள். எதை செய்தாவது எதிர்காலத்தை வளமாக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவும். நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது இவை மட்டுமல்ல நமது பழக்கவழக்கங்களும்தான்.
உண்மைதான் நமது பழக்கவழக்கங்களும், சுயஒழுக்கமும் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் மிகமுக்கியபங்கு வகிக்கிறது. ஒரு பழக்கத்தை நாம் தினமும் செய்யும்போது அது நாளடைவில் நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்கள்தான் நம்மை பிறருக்கு காட்டும் கண்ணாடியாகும். இந்த பழக்கங்கள் நல்லதோ? கெட்டதோ? அவை நம் நிகழ்காலத்தை மட்டுமின்றி நம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். இந்த பதிவில் உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.
குளியலறையை அழுக்காக விட்டு செல்வது
குளியலறையை பயன்படுத்திவிட்டு அதனை சுத்தம் செய்யாமலோ அல்லது அழுக்குத்துணிகள் குப்பை போல கிடப்பதை பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களின் ஜாதகத்தில் நிலவின் ஸ்தானத்தை பலவீனமாகும். மேலும் இந்த பழக்கம் உங்கள் எதிர்காலத்திலும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
நடக்கும்போது பாதத்தை இழுத்து நடப்பது
இது பல வேதங்களிலும் மோசமான பழக்கமாக கூறப்பட்டுள்ளது. இப்படி கால்களை தேய்த்து நடப்பது உங்கள் வீதியில் நீங்களே கெட்ட நேரத்தை இழுத்து வருவதன் அறிகுறியாகும். மேலும் இந்த பழக்கம் ராகுவினால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட காரணமாகிறது.
மேஜையில் அழுக்கு பாத்திரங்களை விட்டு செல்வது
சாப்பிட்டபின் பாத்திரத்தை அப்படியே மேஜையில் விட்டுச்செல்லும் இந்த பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதுதான். வேறு யாராவது அதனை எடுத்து சுத்தம் செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த பழக்கம் நீங்கள் வெற்றியை அடைவதற்கு போராட தயங்குகிறீர்கள் என்பதை உணர்த்தும். சாப்பிட்டவுடன் பாத்திரங்களை சுத்தம் செய்வது உங்களை சனி மற்றும் சந்திர தோஷத்திலிருந்து பாதுகாக்கும்.
கைகளை மற்றும் முகத்தை கழுவாமிலிருத்தல்
நாள் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் முகம், கைகள் மற்றும் பாதத்தை கழுவ வேண்டியது அவசியமாகும். இது சுகாதாரத்திற்கு மட்டுமல்ல இவ்வாறு செய்வது உங்கள் வீட்டிற்கு எதிற்மறை சக்திகள் வருவதையும் தடுக்கும். மேலும் குழப்பமான மனநிலை, மனஅழுத்தம் போன்றவற்றிற்கு நிவாரணமாகவும் இருக்கும்.
தினசரி பூஜை அறையை சுத்தம் செய்தல்
உங்களது பூஜை அறையோ அல்லது நீங்கள் வணக்கம் மூலையோ எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இங்கிருந்துதான் உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகள் வருகிறது. சாமி சிலைகள் மற்றும் அறையை அசுத்தமாக வைத்திருப்பது உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் சமநிலையை பாதிக்கும். இதனால் கல்வி, வியாபாரம், குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் பல பிரச்சினைகள் வரும்.
விருந்தினர்களுக்கு குளிர்ந்த நீர் கொடுப்பது
யாராவது ஒருவர் உங்கள் இல்லத்திற்குள் நுழைந்தால் அவர்கள் தங்களின் ஆற்றலை கொண்டு உங்கள் ஆற்றல் நிலையில் குறுக்கிடுவார்கள். முனிவர்களின் கூற்றுப்படி விருந்தினர்களுக்கு குளிர்ந்த நீர் குடிப்பது அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தை அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு ராகு தோஷம் அல்லது காலசர்ப்ப தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காலணிகளை உதறுவது
யாருக்கேனும் காலணிகளை வீடு முழுவதும் உதறிவிடும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. சாஸ்திரங்களின் படி உங்கள் காலணிகளை அவமதிப்பது சமூகத்தில் உள்ள உங்கள் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும்.
அலங்கோலமான சமையலறை
நீங்கள் உங்கள் சமையலறையை அசுத்தமாகவோ அல்லது அலங்கோலமாகவோ வைத்திருந்தால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் எதிர்மறை விளைவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் அன்னபூரணி குடியிருக்கும் தங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
MOST READ:தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களை புற்றுநோய் ஒருபோதும் தாக்காது
செடிக்கு தினமும் தண்ணீர் விடுதல்
தங்கள் நம்பிக்கைக்காக தினமும் செடிக்கு தண்ணீர் விடுபவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் எந்த பிரச்சினைகளும் எழாது. சாஸ்திரங்களின் படி இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு அனைத்து தோஷங்களாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் எளிதாய் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
படுக்கையை ஒழுங்குப்படுத்துதல்
எப்போதாவது தங்கள் படுக்கையை எழுந்தவுடன் சரிசெய்பவர்களுக்கும், ஒருபோதும் படுக்கையை ஒழுங்குபடுத்தாதவர்களுக்கும் கவனம் தொடர்பான பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் விரும்பும் இலட்சியத்தை ஒருபோதும் அடையவிடாது. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்வது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
சத்தமாக பேசுவது
சாதாரண அளவை காட்டிலும் அதிக சத்தமாக பேசுவது உங்களுக்கு சனிபகவான் தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும். உங்களுடைய வாழ்க்கை முழுவதும், உறவுகளை நல்ல வடிவத்தில் வைத்திருக்கவும் குடும்ப வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் நீங்கள் போராடுவீர்கள்.
அழுக்கான பாதங்கள்
சிலர் தனிப்பட்ட சுகாதாரத்தில் எப்பொழுதும் அக்கறை செலுத்தமாட்டார்கள். குறிப்பாக தங்கள் பாதத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள். உங்கள் பாதமானது உங்கள் சுமையை மட்டுமல்ல உங்கள் சுகாதாரத்தையும் தாங்கும் ஒரு தூணாகும். அது சுத்தமாக இல்லாதபோது உங்கள் எதிர்காலம் அமைதியாக இருக்காது.
MOST READ:இந்த 8 பரிசோதனைகளை வீட்டிலிருந்தே செய்து, உடலில் என்ன நோய் உள்ளது என தெரிஞ்சிக்கோங்க..!
எச்சில் துப்புதல்
எவர் ஒருவர் தங்கள் வாழ்விடம், பொது இடங்கள், பணியிடம் என அனைத்து இடங்களிலும் எச்சில் துப்பும் பழக்கம் கொண்டுள்ளார்களோ அவர்கள் வெற்றியை தூக்கி எறிகிறார்கள் என்று அர்த்தம். இது அவர்களின் சமூக மரியாதை, செல்வம் என அனைத்தையும் அவர்களிடம் இருந்து பறிக்கும். இது லக்ஷ்மியின் சாபத்தை உங்களுக்கு பெற்றுதரும்.