மறக்க முடியாத தமிழக தலைவர்களின் உண்ணாவிரத போராட்டங்கள் #FlashBack

Posted By:
Subscribe to Boldsky

மெரீனா உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. தமிழகத்தின் ஒரு பெரும் அடையாளம். சென்னை மக்களின் மாபெரும் கேளிக்கை இடம். எழில்மிகு சூழல் கொண்ட மெரீனா வெறும் கடற்கரை மட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம். காதலர்களை அரவணைக்கும் கூடு, ஏழைகள் பலருக்கு இது தான் வீடு.

இங்கே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை யாராலும் மறந்துவிட முடியாது. நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் தடம் மறையாது. இப்படி மெரீனா தன்னை பல விஷயங்களுக்கு அடையாளமாக, இலட்சினையாக உருவாக்கி வைத்துள்ளது.

இதே மெரீனாவில் பல அரசியல் தலைவர்கள் பல காரணங்களுக்காக போராட்டங்களும் நடத்தியுள்ளனர். அவற்றை குறித்த ஒரு தொகுப்பு இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசிக்காக எம்ஜிஆர்!

அரிசிக்காக எம்ஜிஆர்!

வருடம்: 1983

காரணம்: மத்திய அரசை, தமிழ்நாட்டுக்கு அரிசி ஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரதம்.

மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கு அரிசி ஒதுக்கீடு கோரி 1983ல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மெரீனா கடற்கரையில் ஒருசில மணி நேரம் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த காலக்கட்டத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினாவில் அரசியல் தலைவர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாக அறியப்படுகிறது.

காவிரிக்காக ஜெ.,

காவிரிக்காக ஜெ.,

வருடம்: 1993

காரணம்: காவிரி நீர் திறந்து விடக் கோரி, அன்றைய பிரதமர் உத்தரவிட கோரி உண்ணாவிரதம்

1993ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ., திடீரென யாரிடமும் கூறாமல் மெரினாவில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அமைச்சர்கள் அரசு அதிகாரிகளுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.

தொடர்ந்து நான்கைந்து நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்றைய பிரதமர் நரசிம்மாராவ் அவசர கூட்டம் கூட்டி, பிறகு அன்று நீர்வள அமைச்சராக இருந்து சுக்லா அவர்களை அனுப்பி, இருமாநில முதல்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஜெவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இது அரசியலில் பெரும் இடத்தைப் பிடித்தது. இதற்காக தான் ஜெவிற்கு காவிரி தாய் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

Image Source: Facebook

இலங்கைப் போர் - கருணாநிதி!

இலங்கைப் போர் - கருணாநிதி!

வருடம்: 2009

காரணம்: இலங்கை போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரத போராட்டம்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி காலை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை போர் நிறுத்தம் முன்வைத்து இந்த போராட்டம் துவக்கினார் கலைஞர். இதுக்குறித்து அவர் யாரிடமும் முன்னறிவிப்பு கொடுக்கவில்லை.

காலை மகள் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் உள்ளிட்டவருடன் மெரீனா வந்த கருணாநிதி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். செய்தி அறிந்தவுடன் அமைச்சர்கள் கழக உறுப்பினர்கள் உறவினர்கள் அனைவரும் மெரீனா விரைந்தனர்.

பிறகு மக்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல்கள் நடக்காது என்று இலங்கை அரசு அறிவித்ததாக கூறி, அன்று மாலையே உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Image Source: Twitter

தியானம் - ஓபிஎஸ்

தியானம் - ஓபிஎஸ்

வருடம்: 2017

காரணம்: தன்னை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி பதவிவிலக செய்ததற்காக தியானம்.

2016ம் ஆண்டு தமிழகத்தின் பேரிழப்பாக அமைந்தது ஜெவின் மரணம். அவரது மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பலர் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஜெவின் மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியில் ஓபிஎஸ் நீடித்து வந்தார். ஆனால், சசிகலா தன்னை வற்புறுத்தி பதவிவிலக செய்ததாக பத்திரிக்கையாளர்கள் இடம் கூறினார். இதற்கு முன் அவர் திடீரென கொஞ்ச நேரம் இரவு ஜெ சமாதி முன் அமர்ந்து தியானம் செய்தார்.

இதன் பிறகே அதிமுக வெளிப்படையாக பல துண்டுகளாக உடைய துவங்கியது.

சிலைகள்!

சிலைகள்!

மெரீனா தலைவர்கள் போராட்டத்திற்கு மட்டும் பெயர் போனது இல்லை. இங்கே சிலைகளும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளன. 1968ம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டின் போது கண்ணகி சிலை இங்கே நிறுவப்பட்டது. அதை தனது ஆட்சியின் போது (2001-2006) அகற்றினார் ஜெ. பிறகு, தான் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவினார் கருணாநிதி. இது தமிழக அரசியலில் அழிக்க முடியாத இரு கட்சிகளுக்குள் நடந்த சண்டையாக காணப்படுகிறது.

இதே போல சிவாஜி சிலையும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி பொதுநல வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்காக.. மாணவர்கள்!

ஜல்லிக்கட்டுக்காக.. மாணவர்கள்!

வருடம்: 2017

காரணம்: பீட்டாவை எதிர்த்து, ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம், அதை மீட்டுக்க மீண்டும் நடத்தை கோரிக்கை விடுத்து மாணவர்கள் போராட்டம்.

இதுநாள் வரையில் மெரீனாவே கண்டு மகிழ்ந்த ஒரே போராட்டம் இதுவாக தான் இருக்கும். தமிழக வரலாற்றில் பெரும் முக்கிய பங்கு கொண்ட போராட்டம். நூறாண்டுகள் கழிந்தாலும் மண்மேல் பேசப்படும் போராட்டம். எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல், பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து நடந்த போராட்டம். ஜல்லிக்கட்டு இன்று பிற விளையாட்டுகள் போல மாநிலம் எங்கும் பல ஊர்களில் நடக்க காரணமான போராட்டம். ஜல்லிகட்டை அனைவரும் மீண்டும் விரும்பி விளையாட, அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் உணர முக்கிய காரணம் இந்த போராட்டம்.

ஆனால், மாணவர்களை அவர்களது வெற்றியை அனுபவிக்க விடாமல், போலீஸ் தடியடி நடத்தியது பெரும் கொடுமையாக அமைந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamilnadu Politics and Marina Protest: Flashback!

Here is list of protest that held on marina beach and conducted by Tamilnadu politicians in various time period.