சீனாவில் விதிக்கப்பட்டிருக்கும் விசித்திரமான விதிமுறைகள்!

Posted By:
Subscribe to Boldsky
சீனாவில் விசித்திரமான விதிமுறைகள்- வீடியோ

உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டினரும் பல்வேறு நம்பிக்கைகளை சார்ந்து, பல்வேறு சமூக அமைப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது பார்ம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

ஒரு நாட்டில் சட்டப்படி அங்கீகரித்து எல்லா மக்களும் சர்வ சாதரணமாக பின்பற்றிக் கொண்டிருக்கும் சில நடைமுறைகள் இன்னொரு நாட்டில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருக்கும். அப்படி சில விசித்திரங்களை கடந்து வந்திருப்பீர்கள். எப்போது உலக நாடுகளில் மிகவும் வினோதமான விசித்திரமான பழக்கங்களை கடைபிடித்து வருகிறவர்களில் சீனர்கள் முதன்மையான இடத்தை பிடிப்பார்கள்.

சரி, இப்போது சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்ட வருகின்ற சில வினோதமான பழக்கவழக்கங்கள், சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோரை சந்திக்க :

பெற்றோரை சந்திக்க :

2013 ஆம் ஆண்டு இந்த சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியது, வயதான பெற்றோரை அவரது குழந்தைகள் கண்டிப்பாக சென்று சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலும் வேலை, குடும்பம் என்று பெற்றோரை விட்டு பிரிந்து வந்து விட்டு குழந்தைகள் அவர்களது வயதான பெற்றோரை மறந்து விடுகிறார்கள்.

இதனால் வயதானவர்கள் தனிமையில் வாடும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலை மாற வேண்டியே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.

Image Courtesy

கார் :

கார் :

சீனாவில் கார்களை பயன்படுத்துபவர்கள் அதிகம். விதிமீறி மிக வேகமாக செல்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். கார்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கவே செய்தது.

கார்களில் வேகமாக செல்பவர்களால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள் இதனை தவிர்க்க நினைத்த அரசாங்கம் என்ன சட்டம் கொண்டு வந்திருக்கிறது தெரியுமா?

Image Courtesy

காருக்கு சல்யூட் :

காருக்கு சல்யூட் :

குழந்தைகள், மற்றும் வளர் இளம் பருவத்தினர் சாலையில் செல்லும் போது கார்களைப் பார்த்தால் நின்று சல்யூட் அடிக்க வேண்டும். அப்படி அவர்களை நோக்கி சல்யூட் அடிக்கும் போது வேகமாக செல்லக்கூடாது என்று அவர்களுக்கு நினைவிற்கு வரும்.

அவர்கள் மெதுவாகச் செல்வதாலும், கவனம் மாறுவதாலும் வண்டியின் வேகம் குறைந்திடும்,இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றார்கள். ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைபிடிக்கப்படுகிறது.

Image Courtesy

கிராமம் :

கிராமம் :

அரசாங்க ஊழியர்கள் தங்களது மூதாதையர்களின் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அரசாங்கமே பஸ்ஸில் ஊழியர்களை கிராமத்திற்கு அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது.

அங்கே பொருளாதார சூழலை முன்னெடுக்கவும் அவர்களின் வாழ்க்கைத்தரவும் உயரவும் சுற்றுலா பயணிகளை சார்ந்து புதிய தொழில் தொடங்கவும் இது முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தோல்வியடைந்த திட்டம் என்கிறார்கள்.

Image Courtesy

பெண் உதவியாளர்கள் :

பெண் உதவியாளர்கள் :

அரசாங்கத்தில் பணியாற்றுகிற ஆண் அதிகாரிகள் தங்களுக்கு உதவியாக பெண் உதவியாளர்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்றார்கள் அதற்கு அவர்கள் சொன்ன காரணம், பெண் உதவியாளர்களால் ஆண்களின் கவனம் சிதறும் என்றார்கள்.

இதற்கு சீனாவிலேயே எதிர்ப்பு கிளம்பியது அதோடு பிற நாட்டிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இதனை சட்டமாக இயற்றப்படவில்லை.

Image Courtesy

குழந்தை பிறப்பு :

குழந்தை பிறப்பு :

சீனாவில் ஒரு குழந்தை தான் பெற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அபராதம் விதிக்கப்படும். இது பன்னெடுங்காலமாக இந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் இந்த சட்டமும் தீவிரமாக செயல்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறது. ஏனென்றால் மக்கள் அபராதத்திலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்கத் துவங்கிவிட்டார்கள். அதாவது சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டார்கள்.

Image Courtesy

என்னென்ன ஓட்டைகள் :

என்னென்ன ஓட்டைகள் :

சட்டத்தின் படி, ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டையர்களுக்கும் அபராதம் என்று சொல்லப்படவில்லை, அதனால் பலரும் செயற்கை கருவூட்டல் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார்கள். அதோடு இது சீனாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் பொருந்தும்.

அதனால் புதிதாக திருமணமானவர்கள் சில காலங்கள் வெளிநாடுகளில் தங்கி ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டு மீண்டும் சீனாவிற்கே வருகிறார்கள். அதே போல பெற்றோர்களில் யாருக்கேனும் உடல் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு அரசாங்கமே விதிவிலக்கு அளிக்கிறது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக பலரும் தங்களை உடல் ஊனமுற்றவர்கள் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சான்றிதழ் கொடுத்தும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

Image Courtesy

நம்மவூர் குலக்கல்வி திட்டம் :

நம்மவூர் குலக்கல்வி திட்டம் :

ராஜாஜி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குலக்கல்வி திட்டம் தான் இது. ராஜாஜி காலத்தில் 1950களில் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். பள்ளி செல்லும் குழந்தைகள் மூன்று மணி நேரம் மட்டுமே பாடத்தை படிப்பார்கள் அதன் பிறகான நேரத்தில் தந்தையின் தொழிலையே கற்றுக் கொண்டு அதையே செய்ய வேண்டும் என்றாரே.... அதே போல சீன அரசாங்கம் என்ன சொன்னது தெரியுமா

நீ பிறந்த இடம் எது? அதை விட்டு நீ வெளியே வரக்கூடாது என்று சட்டம் போட்டது. அதை விட உன் பெற்றோர்கள் கிராமத்தில் வசித்தல நீயும் கிராமத்தில் தான் வசிக்க வேண்டும் என்றது சட்டம். கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த ஏற்பாடு என்றது அரசாங்கம்.

மனித உரிமை போராளிகள், மற்றும் மக்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. நடைமுறையில் இல்லையென்றாலும் ஆங்காங்கே இந்த சட்டம் உயிர்ப்புடனே இருக்கிறது. இதனை முற்றிலுமாக தவிர்க்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

இணையம் :

இணையம் :

சீனாவிற்கு சென்றால் இணையப் போராளியாக எல்லாம் நாம் உருவெடுக்க முடியாது. ஏனென்றால் இணையப் பயன்பாடு,சமூக வலைதள பயன்பாடு,கூகுள்,உட்பட எதுவுமே நீங்கள் மேற்கொள்ள முடியாது.

நீங்கள் இணையத்தில் அடல்ட் வீடியோவோ அல்லது செய்தியோ படிப்பது,பார்ப்பது உறுதியானால் நீங்கள் மூன்றாண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவீர்கள். இது போன்ற கண்டெண்ட் தயாரிப்பது நீங்களென்று தெரிந்தால் உங்களுக்கு தண்டனை அதிகம்.

Image Courtesy

மோப்ப வாத்து :

மோப்ப வாத்து :

நம்மூரில் எல்லாம் போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாயை பயன்படுத்துவார்கள் அல்லவா அதைப் போல சீனாவில் வாத்துக்கள் பயன்படுத்துகிறார்கள்.

வாத்துக்கள் மிகவும் தைரியமானவை என்று சர்டிஃபிக்கேட் வேறு கொடுக்கிறார்கள்.

Image Courtesy

சிகரெட் :

சிகரெட் :

இங்கெல்லாம் சிகரெட் பிடிக்காதீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது என்று அடித்துக் கொண்டால் சீனாவிலோ சிகரெட் பிடிக்க வேண்டும் அதுவும் ஒரு மாதத்தில் இவ்வளவு பாக்கெட்டை காலி செய்ய வேண்டும் என்று சொல்லி டார்கெட் வேறு கொடுக்கிறார்கள். கேட்டால் அங்கிருக்கும் லோக்கல் சிகரெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காகத் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

அங்கே அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு 23 ஆயிரம் பாக்கெட் சிகரெட் வாங்க வேண்டும் என்பது விதியாம்.

Image Courtesy

ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் :

ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் :

பலரும் மிக ஆர்வமாக பார்கிற ஓர் கார்ட்டூன் என்றால் அது ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் பெயரும் இடம்பெறும். ஆனால் இது சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது ஏனேன்றால் சீனர்கள் விலங்குகள் பேசுவதை அனுமதிக்கமாட்டார்கள்.

விலங்குகளும் மனிதன் பேசுகின்ற மொழியைப் பேசினாலும் மனிதனும் விலங்கும் சமமாகிவிடும், அது ஒரு போதும் சமம் ஆகாது அதனால் அதை இங்கே அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.

ஜாஸ்மின் :

ஜாஸ்மின் :

2011 ஆம் ஆண்டு ஜாஸ்மின் புரட்சி நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் அந்த பூவையே முற்றிலுமாக தடை செய்திருக்கிறது. அந்த பூவை வளர்ப்பதோ, விற்பதோ மட்டுமல்ல ஜாஸ்மின் என்று நீங்கள் பெயரைச் சொன்னாலும் கைது தான்!

Image Courtesy

திரைப்படங்கள் :

திரைப்படங்கள் :

சீனாவில் உள்ள திரையரங்களில் ஒரு வருடத்திற்கு 34 திரைப்படங்கள் மட்டுமே திரையிட முடியும். அப்படி திரையிடப்படும் திரைப்படங்களிலிருந்து சீனாவிற்கு எதிராக, சீன அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் அதனையெல்லாம் தூக்கிய பிறகே தான் திரையிடுவார்கள்.

Image Courtesy

பிரபலங்கள் :

பிரபலங்கள் :

சீனாவில் பல பிரபலங்கள் வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆதாவது சீனாவிற்கு எதிரி நாடுகளாக இருக்கும் நாடுகளில் நடக்கும் விஷயங்களை ஆதரவு தெரிவித்தார்கள், பாராட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே பல பிரபலங்கள் சீனாவிற்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் ப்ராட் பிட் 7 யியர்ஸ் இன் திபத் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சீனாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

முகநூல் :

முகநூல் :

ஒரு விஷயம் மிக வேகமாக மக்களிடையே பரவுகிறது, அதிகமான மக்கள் அதை விரும்புகிறார்கள் என்று தெரிய வரும் போதே உடனேயே அதை பயன்படுத்த தடை விதித்து விடுகிறது சீன அரசாங்கம். அப்படி தடை செய்ததில் முதன்மையானது அவதார் திரைப்படமும் ஒன்று.

அதே போல 2009 ஆம் ஆண்டு முகநூல் சீனர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றதுடன் பலரும் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். உடனே அதனை பயனபடுத்த தடை விதித்து விட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Strangest Laws In China

Strangest Laws In China
Story first published: Thursday, March 22, 2018, 13:20 [IST]