கண்ணாமூச்சி விளையாடும்போது வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட குழந்தை... எப்படி எடுத்தாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அதெப்படிங்க குழந்தை வாஷிங் மெஷினுக்குள் ஏறி மாட்டிங்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?... அட உண்மைதாங்க... நமக்குதான் இது புதுசு. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இதெல்லாம்அரசியல்ல சாதாரணம்ப்பா... எங்களுக்கு இது ஒண்ணும் புதுசில்லப்பா...

real life story

பழகிடுச்சு என்று சொல்லும் அளவுக்கு அறுந்தவால் குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சுவாரஸ்யமான வாஷிங் மெஷின் கதையைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணாமூச்சி விளையாட்டு

கண்ணாமூச்சி விளையாட்டு

இந்த சம்பவம் நடந்தது சீனாவில். அருகருகே வசிக்கும் இரண்டு குழந்தைகள் ஒரே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக, வாஷிங் மெஷினில் மாட்டிக் கொண்டது. அதாவது ஒரே வயதை சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஒன்றாக இணைந்து கண்ணாமூச்சி விளையாட்டு கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தை கண்ணை மூட மற்ற குழந்தை ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொள்ள இடம் தேடிய குழந்தை, வாஷிங் மெஷினைப் பார்த்ததும் அதற்குள் ஒளிந்துகொண்டால், கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து அதில் ஒளிந்து கொண்டது. பின்னர் வெளியே வர முயன்றபுாது அந்த குழந்தையால் வெளியே வர முடியாமல் கத்த ஆரம்பித்துவிட்டது.

காவல்துறை உதவி

காவல்துறை உதவி

குழந்தையின் நிலையை பார்த்த பெற்றோர், கதற ஆரம்பித்துவிட்டனர். பின்னர் அவர்கள் அவசர போலீஸ் எண்ணுக்கு போன் செய்து உடனடியாக காவல்துறையை அவர்களுடைய வீட்டுக்கு வர வைத்தனர். நிலைமையை உணர்ந்து கொண்ட காவல்துறையினர் உதவிக்கு மேலும் சில ஆட்களை வரவழைத்து, வாஷிங் மெஷினை வெட்டிதான் குழந்தையை எடுக்க முடியும் என்று கூறினர். அதன்பின்னர் சிறிய அளவிலான ரம்பம் கொண்டு வாஷிங் மெஷினைக் கொண்டு ரம்பம் வெட்டி எடுக்கப்பட்டது.

பீதியில் குழந்தை

பீதியில் குழந்தை

இப்படி தான் வாஷிங் மெஷினில் மாட்டிக் கொண்டதும் குழந்தை அதீத பயத்தால் கதற ஆரம்பித்துவிட்டது.அவருடைய பெற்றோர்களுக்கும் பயம். குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு போன உயிர் திரும்ப வந்ததுபோல் இருந்தது. குழந்தையும் சிறிது நேரம் அழுது முடித்தபின்னே இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆகையால், பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் எங்கு, எப்படி, யாருடன் விளையாடுகின்றனர் என்பதை கவனித்து, கண்காணியுங்கள். நீங்கள் குழந்தையை தனியே விட்டு விட்டு வேலைக்கு செல்பவராய் இருந்தாலும், குழந்தையை கவனித்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான ஆளை வைத்து விட்டு செல்லுங்கள். வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம் உயிருக்கு உயிரான குழந்தைகளும் முக்கியம். அவர்களை பாதுகாத்து, அரவணைத்து அன்புடன் வளருங்கள்.

கார்ட்டூன் மோகம்

கார்ட்டூன் மோகம்

இது புதிதாக நடந்த சம்பவம் அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அடிக்கடி நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. டீவி, கார்ட்டூன்களில் இதுபோன்ற விளையாட்டு சம்பவங்களை பார்க்கும்போது, தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் குழந்தைகள் இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட நினைத்து விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.

குழந்தையும் வாஷிங்மெஷினும்

குழந்தையும் வாஷிங்மெஷினும்

குழந்தைகள் தானாக வாஷிங் மெஷினுக்குள் சென்று ஒளிந்து கொண்டு மாட்டிக் கொண்ட சம்பவங்களைப் போலவே, வீட்டில் வேலை செய்யும் வுலையாட்கள் முதலாளிகளின் குழந்தையைத் தூக்கி வாஷிங்மெஷினில் சுற்ற வைத்து கொலை செய்த நிகழ்வுகள் கூட மேலைநாடுகளில் உண்டு. இவ்வளவு ஏன், பெற்ற தாய் அல்லது தந்தையே னநிலை பாதிக்கப்பட்டோ கோபத்திலோ குழந்தையை தூக்கி மெஷினுக்குள் போட்ட நிகழ்வுகள் ஏராளம்.

மெஷினுக்குள் தூக்கிப்போட்ட லாண்டரி மேன்

மெஷினுக்குள் தூக்கிப்போட்ட லாண்டரி மேன்

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேம்டன் என்னும் நாட்டில் ஃபெடரல் லாண்டரிமேட்

நிறுவனத்தில் நடந்த சம்பவம் இது. அங்கு பணிபுரியும் ஒருவர் தன்னுடைய குழந்தை அடம்பிடித்த போது, அதை அடக்கி பயமுறுத்துவதற்காக சுழலும் வாஷிங் மெஷினுக்குள் தூக்கி போட்டுவிட்டார். அதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாகக் கத்தி, மெஷினை நிறுத்தி குழந்தையை உயிருடன் மீட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நாட்டில் இது அறிவற்ற செயல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுவது இல்லை.

பொம்மைக்காக உள்ளே விழுந்த குழந்தை

பொம்மைக்காக உள்ளே விழுந்த குழந்தை

கடந்த 2014 ஆம் ஆண்டு இதேபோல் ஜப்பானில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 2 வயது சிறுவன் தான் விளையாடிக் கொண்டிந்த பொம்மை வாஷிங் மெஷினுக்குள் போட்டு துவைக்கிறேன் என்று அவனும் அதற்குள் விழுந்துவிட்டான். வெளியே வர முடியாமல் கத்தியபின், பெற்றோர்கள் அதை கவனித்து, அருகிலிருக்கும் வெல்ட் ஃபயர் வொர்க் செய்பவர்களை அழைத்துவந்து மெஷினை வெட்டி எடுத்து குழந்தையைக் காப்பாற்றினார்கள்.

கவுன்சிலிங்

கவுன்சிலிங்

இதெல்லாம் சும்மா சேம்பல் தான். அம்மாவே குழந்தையை தூக்கி வாஷிங் மெஷினுக்குள்ள போட்ட கதையெல்லாம் இருக்கு. வீட்டுச்சூழல், கணவன், மனைவி சண்டை, அலுவலக அழுத்தங்கள் என எல்லாவற்றையுமே பெரும்பாலும் பெரியவர்கள் தங்களின் குழந்தைகள் மேல் தான் திணிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் தான் எந்த எதிர்வினையும் நமக்கெதிராக ஆற்ற முடியாது என்ற எண்ணம். அதிலும் குறிப்பாக, மேலைநாடுகளில் இதுபோன்ற மன அழுத்தங்களுக்கு ஆளாகிற பெண்கள் ஒருசில மணநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்ற தெரியாமல் குழந்தைகளை மாடியில் இருந்து தூக்கி வீசுவது, காரை மேலே ஏற்றி கொள்வது, இதுபோல் வாஷிங் மெஷின் அல்லது ஃபிரிட்ஜில் தூக்கி வீசுவது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மன அழுத்தத்துக்கு ஆட்படுபவர்கள் அது முற்றும்வரை விட்டுவிடாமல் ஆரம்ப காலத்திலேயே சிறந்த மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதுபற்றிய வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Read more about: insync pulse
English summary

small girl stuck in washing machine is rescued by police

real life story, small girl stuck in washing machine, girl stuck in washing machine in china,