ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் தெரிஞ்சுக்க வேண்டிய இந்திய அணியின் டிரஸிங் ரூம் இரகசிய கதைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்பது யாவரும் அறிந்ததே. உலகின் எந்த நாட்டில் போட்டி நடந்தாலும், அங்கே அரங்கம் நிறைய கூட்டம் வேண்டும் என்றால் எதிரணியாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. அதானால் தான் அதுவொரு லாபகரமான போட்டியாக இந்தியாவில் காணப்பட்டு வருகிறது.

Secret Stories Of Indian Dressing Room

Cover Pic Source: Youtube / IndiaTV

மேலும், இந்தியாவில் கிரிக்கெட்டில் ஒருவர் சாதித்தால் அவர் உடனே பெரும் புள்ளியாகவும், கோடீஸ்வரராகவும் உருவெடுத்து விடுகிறார்.

நாம் கிரிக்கெட்டையும், கிரிக்கெட் வீரர்களையும் மைதானத்திலும், விளம்பரத்திலும் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். அவர்களது டிரஸிங் அறையில் என்ன நடக்கும். அங்கே நடந்த சில சீரியஸான விஷயங்கள் மற்றும் கேலியான சமாச்சாரங்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விராத் கோலி!

விராத் கோலி!

அண்டர் 19 உலக கோப்பை வென்று கொடுத்த சுட்டி பையன் வீராத் அப்போது. அன்று தான் இந்திய அணிக்காக விராத் தனது முதல் போட்டியில் களம் காண போகிறார். மனுஷன் இப்போது ஆக்ரோஷமாக இருந்தாலும், அப்போது கொஞ்சம் நர்வசாக தான் இருந்துள்ளார். அவரை எப்படியாவது கேலி செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறது யுவராஜ் மற்றும் ஹர்பஜன் கூட்டணி.

கேலி!

கேலி!

நேராக விராத் கோலியை அணுகிய யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங், இந்திய அணியில் யாரு புதியதாக விளையாட வந்தாலும் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என கூறுகிறார்கள். சரி சீனியர் வீரர்கள் கூறுகிறார்களே என்று விராத்தும் நம்பு சச்சின் காலில் விழுந்துள்ளார். அதன் பிறகு தான் சச்சின் மூலமாக விராத்துக்கு தெரிந்துள்ளது அவர்கள் இருவரும் தன்னை கேலி செய்ய இப்படி ஒரு பொய் வழக்கத்தை கூறியுள்ளனர் என்று.

தாவூத் இப்ராஹீம்!

தாவூத் இப்ராஹீம்!

நிழல் உலக தாதா என்று கூறப்படும் தாவூத் இப்ராஹீம் சார்ஜாவில் கடந்த 1987ம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, இந்திய அணியின் டிரஸிங் அறைக்கு சென்று கபில் தேவிடம் லஞ்சம் பேசியுள்ளார்.

கார்!

கார்!

அதாவது, பாகிஸ்தானை நீங்கள் வென்று விட்டால், உங்களுக்கு ஒரு கார் பரிசளிக்கிறேன் என்று ஆசை வார்த்தை பேசி இருக்கிறார். தாவூத் இப்ராஹீம் பேசிய மறு நொடியே எந்த ஒரு இரண்டாம் எண்ணமும் இன்றி, மரியாதையாக டிரஸிங் அறையில் இருந்து வெளியே செல் என்று கர்ஜித்துள்ளார் கபில் தேவ்.

ஜான் ரைட் - சேவாக்!

ஜான் ரைட் - சேவாக்!

இந்த சம்பவம் நடந்தது ஜான் ரைட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய போது. சேவாக் அப்போது ஓரிரு ஆட்டங்களில் மந்தமான முறையில் ஆடி அவுட்டாகி வந்தார். இதை அமைதியாக கண்காணித்து வந்துள்ளார் ஜான் ரைட். ஒரு போட்டியில், மோசமான ஷாட் விளையாடி தனது விக்கெட்டை பறிகொடுத்து பவிலியன் திரும்புகிறார் சேவாக். அப்போது ஜான் ரைட் அன்றைய அணி தலைவர் ராகுலிடம் இதே போல சேவாக் மீண்டும் அவுட்டானால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொள்கிறார்.

மீண்டும்!

மீண்டும்!

ஆனால், மீண்டும் அடுத்த போட்டியிலும் அதே போல மந்தமான ஷாட் விளையாடி அவுட்டாகி வெளியேறுகிறார் ஷேவாக். கோபம் தலைக்கேறிய ஜான் ரைட் சேவாக் டிரஸிங் அறை வந்தவுடன் அவரது காலரை பிடித்து லெப்ட், அன்ட் ரைட் வாங்குகிறார்.அதற்கு அடுத்த ஓரிரு போட்டிகளிலேயே சேவாக் ஃபார்முக்கு திரும்பினார்.

ஃபரூக்!

ஃபரூக்!

1971ல் சுனில் கவாஸ்கர் மற்றும் ஃபரூக் என்ஜினியர் இருவரும் ரெஸ்ட் ஆப் வேர்ல்டு அணிக்காக ஒன்றாக களம் இறங்குகிறார்கள். எப்போது சீனியர் மற்றும் அனுபவசாலியான ஃபரூக் கவாஸ்கருக்கு ஒரு அறிவுரை வழங்குகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அது அவருக்கே பேக் பயர் ஆகிவிட்டது.

டக் அவுட்!

டக் அவுட்!

சுனில் கவாஸ்கரை அழைத்த ஃபரூக் இந்த மெல்பேர்ன் மைதானத்தில் நீ டக் அவுட்டாகி பவிலியன் திரும்பாதே என்று ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால், ஃபரூக் எதிர்பாராத விதமாக, அந்த போட்டியில் டக் அவுட்டாகி பவிலியன் திரும்பினார். அறிவுரை வழங்கிய அவருக்கு அந்த அறிவுரை பேக் பயர் ஆகிவிட்டது.

கங்குலி!

கங்குலி!

இம்முறை மீண்டும் யுவராஜ்... ஆனால் கூட்டணிக்கு நெஹ்ராவை இணைத்துக் கொள்கிறார். கேப்டன் என்ற அச்சமின்றி கங்குலியை கேலி செய்ய கிளம்புகிறார் யுவராஜ். போட்டி முடிந்து கங்குலி தங்கள் இருவரை பற்றி எதிர்வினையான கருத்துக்கள் தெரிவித்த காரணத்தால் நாங்கள் இருவரும் உங்கள் கேப்டன்சியில் விளையாட விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

திடீர் திருப்பம்!

திடீர் திருப்பம்!

யுவராஜ், நெஹ்ரா கேலி செய்ய போக, அதை சீரியஸாக எடுத்துக் கொண்ட கங்குலி, தனது கேப்டன்சியை துறக்க முடிவு செய்து ரிசைன் செய்ய முடிவு செய்கிறார். இந்த கேலி விஷயம் கங்குலியை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். பிறகு, கங்குலி கண்ணீர்மல்க அமர்ந்திருந்த தருணத்தில், டிராவிட் அருகே சென்று, அவர்கள் சும்மா கேலி செய்தனர் என்று கூற..., பேட்டை எடுத்து கொண்ட அனைவரையும் அடிக்க விரட்டினாராம் கங்குலி.

சச்சின் - சங்ககரா!

சச்சின் - சங்ககரா!

2011 உலகக்கோப்பை யாராலும் மறக்க முடியாத ஒன்று. ஃபைனல் போட்டியின் போது தோணி காயனை சுண்டி விட, சங்ககரா கேட்ட தேர்வு ரப்ரியின் காதுகளில் விழாவில்லை. இதனால் மீண்டும் டாஸ் போடவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை யாரும் ஏற்கவில்லை. இந்திய வீரர்கள் ஏதோ சதித்திட்டம் என்று டடிரஸிங் அறையில் புலம்ப ஆரம்பித்தனர்.

ஊக்கம்!

ஊக்கம்!

அப்போது அங்கே வந்த சச்சின், இது புலம்ப வேண்டிய நேரம் அல்ல. உங்கள் கவனத்தை சிதறடிக்க வேண்டாம். கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். நாம் ஆட்டத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வினை எண்ணங்களை விட்டு, நேர்மறை எண்ணங்களை மட்டும் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊக்கமளித்து பேசியுள்ளார். இந்த ஊக்கமே வீரர்கள் அனைவரும் போட்டியில் கவனமாக இருக்க உதவியது.

இம்முறை தோனி..

இம்முறை தோனி..

யுவராஜ் சிங் இந்திய அணியில் யாரையுமே கேலி செய்யாமல் விட்டுவைக்கவில்லை போல. விராத், கங்குலியை தொடர்ந்து இவர் தோனியையும் கேலி செய்துள்ளார். தோனி உலக அரங்கில் சிக்ஸர் அடிப்பதில் வல்லவராக உருவாகி வந்தார். அப்போது தோனியை டீஸ் செய்வதற்காக அழைத்துள்ளார் யுவராஜ்.

ஏய் பீகாரி!

ஏய் பீகாரி!

ஏய் பிகாரி சிக்ஸர் அடிப்பது பெரிய டீல் அல்ல, நாட்டுக்காக போட்டிகளை வெற்றிப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இது ஒரு அறிவுரையாக மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் தோனி. அதன் பிறகே தோனி கேட்பான் ஆனதும், இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தது மீத வரலாறு.

சச்சின்!

சச்சின்!

வெற்றி பெற்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் கீழே போட்டு மிதிப்பதும் ரசிகர்களின் வழக்கம். இதை அதிக முறை கண்டவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். ஏதோ உலகப் போரில் தோல்வி அடைந்தது போல தங்கள் கடும் எதிர்ப்பை பலமுறை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2003 உலகக் கோப்பை!

2003 உலகக் கோப்பை!

கங்குலி தலைமையிலான அணி 2003ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் ஆட்டத்தில் மோசமான தோல்வி அடைந்தது. அப்போது அவர்கள் கடும் எதிர்ப்ப்புகளுக்கு ஆளாகினர். இதனால் வீரர்கள் அனைவரும் மனதளவில் சோர்வடைந்து போனார்கள். அப்போது சச்சின் ஊக்கமளிக்கும் வகையில் அவர்கள் முன் பேசி வழிநடத்தினார். அந்த தொடரில் இந்தியா அதன் பிறகு ஃபைனல் வரை முன்னேறியது.

மேட்ச் பிக்ஸிங்!

மேட்ச் பிக்ஸிங்!

90களில் ஒரு போட்டியின் போது இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்த போட்டியானது மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் கங்குலி மற்றும் சச்சினுக்கு எழுகிறது. இதை நடக்க விடக்கூடாது, சதித்திட்டத்தை முறியடிக்கக் வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர் சச்சின் - கங்குலி காம்போ.

சதம்!

சதம்!

முடிவு செய்தது போலவே இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடையாமல் காத்து இருவரும் நீண்ட நேரம் கிரீசில் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நின்று ஆடினார். ஆட்டத்தின் முடிவில் சச்சின் - கங்குலி இருவருமே சதம் நிறைவு செய்து இந்தியாவை வெற்றிப்பெற செய்தனர்.

தோனி!

தோனி!

2014ல் தோனி தலைமையிலான இந்திய இந்திய அணி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அது மூன்றாவது டெஸ்ட் போட்டி, திடீரென தனது ஓய்வை அறிவித்தார் தோனி. டிரஸிங் அறையில் இருந்த அனைவரும் நிலைதடுமாறி போயினர். அந்த நாளில் தோனியிடம் அனைவரும் தங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்துக் கொண்டனர்.

 கோலி - தவான் சண்டை!

கோலி - தவான் சண்டை!

பிரிஸ்பனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பயிற்சியின் போது காயத்திற்கு ஆளானார் தவான். அந்த காரணத்தால் தவானுக்கு முன்னே களமிறங்க சூழலுக்கு தள்ளப்பட்டார் கோலி. களமிறங்கிய கோலி விரைவில் ஆட்டமிழந்து பவிலியன் திரும்பினார். அப்போது கோலி, தவான் வேண்டுமென்றே காயம் அடைந்ததாக பொய் கூறி தன்னை முன்னே இறக்கிவிட்டார் என்று சண்டை கட்டினார்.

பிரஸ் மீட்!

பிரஸ் மீட்!

இந்த சண்டை ஊடகங்களில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, தோனி தான் பிரஸ் மீட் வைத்து தெளிவான தகவல்களை கூறி உண்மை நிலை என்ன என்று விளக்கி சென்றார். அது சமபவம் வெறுமென ஊதி பெரிதாக்கப்பட்டது என்று தோனி கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Stories Of Indian Dressing Room

Every Indian Cricket Fan Should Know About These Secret Stories Of Indian Dressing Room. Read Here
Story first published: Tuesday, April 17, 2018, 10:43 [IST]