For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த அபத்தமான விஷயங்கள் எல்லாம் 1930ல் சர்வ சாதாரணமாக காணப்பட்டுள்ளன!

  |

  ஒவ்வொரு தலைமுறைக்கும் இடையேயான வேறுபாடுகள், மாற்றங்களே மிகப்பெரியதாக இருப்பதை நம்மால் இன்று காண முடிகிறது. ஜெனரேஷன் கேப் என்று கூறப்படும் தலைமுறை மத்தியிலான இடைவேளை மிகவும் சுருங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுத்கிறது.

  முன்பெல்லாம் தலைமுறைகளுக்கு இடையான இடைவேளை ஆனது நூறாண்டுகளாக காணப்பட்டது. பிறகு அது அரைநூற்றாண்டாக மாறியது. ஆனால், இன்றோ தசாப்த காலமே இடைவேளையாக காண முடிகிறது. இதற்கு நல்ல எடுத்து காட்டு சமூக தளங்களில் நாம் காணும் 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் வேறுபாடு.

  ஜெனரேஷன் கேப் மத்தியிலேயே இவ்வளவு பெரிய வேறுபாடுகள் காண முடிகிறது எனில், சென்ற நூற்றாண்டில் மக்கள் பின்பற்றியவை, இந்த நூற்றாண்டில் பின்பற்றுபவை குறித்து பார்த்தால் எப்படி இருக்கும்.

  கடந்த நூற்றாண்டில் தான் பெரும்பாலான புதிய கருவிகள் கண்டுபிக்கப்பட்டன. அவற்றின் அப்டேட்டட் வெர்ஷனை தான் இன்று நாம் லேட்டஸ்ட் டெக்னாலஜி என்று கூறி பயன்படுத்தி வருகிறோம்.

  ஆனால், அன்று அவர்கள் கண்டுபிடித்தவை, பின்பற்றி வந்தவை அனைத்தும் சிறந்ததாக இருக்கவில்லை. சிலவன அபத்தமாகவும் இருந்தன. அதைக் குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மசாஜ்!

  மசாஜ்!

  கேரளா முதல் சைனீஸ், இந்தோனேசியா மசாஜ் வரை நாம் பலவன அறிந்திருப்போம். ஆனால் இப்படியான ஒரு ப்ரெஸ்ட் மசாஜ் நீங்கள் கனவிலும் எண்ணியிருக்க மாட்டீர்கள். ஆம்!, மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென ஒரு கருவி, அதை நீர் குழாயில் மாட்டி அதன்வழி இறுக்குவது போல இந்த கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. கண்டுபிடிப்பு என்ற பெயரில் கடந்த நூற்றாண்டில் பல கோமாளி தனங்களும் நடந்துள்ளன.

  © tripfunny / imgur

  ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்!

  ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்!

  ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் என்பது இப்போது பெரிய ஃபேஷன். முதலில் பெண்களிடம் காணப்பட்டு வந்த இந்த சிகை அலங்கார ஈர்ப்பு, கடந்த பத்து வருடங்களாக ஆண்களிடமும் அதிகமாக காணப்படுகிறது. இன்று ஒரு சிறிய ஸ்டிக் போன்ற கருவியை தான் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்ய பயன்படுத்து நாம் கண்டிருப்போம். ஆனால், கடந்த நூற்றாண்டில் துணிகளை இஸ்திரி செய்ய நாம் பயன்படுத்திய அயர்ன் பாக்ஸ் கொண்டும் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்திருக்கிறார்கள்.

  © vintag © psuedon / imgur

  சர்ச்!

  சர்ச்!

  நடமாடும் நீதி மன்றம், நடமாடும் வீடு, நடமாடும் விளம்பர வாகன ஊர்தி, நடமாடும் சித்த வைத்திய சாலைகள் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், நடமாடும் சர்ச் என்றாவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா.. இருந்திருக்கிறது, அமெரிக்காவில் 1922ல் ஒரு பாதரியாருடன் நடமாடும் சர்ச்சும் இருந்திருக்கிறது. கடவுளை காண கோயிலுக்கு பக்தன் சென்றது போய், பாதரியாருடன் சார்சே வீடு தேடி வந்த காலமும் கடந்த நூற்றாண்டில் காணப்பட்டிருக்கிறது.

  © The Henry Ford / flickr

  பிரம்மாண்ட ஆம்லேட்!

  பிரம்மாண்ட ஆம்லேட்!

  1931ல் அமெரிக்காவின் ஒரு பகுதில், பிரம்மாண்ட ஆம்லேட் சாதனை படைக்கும் முயற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு பேனில், பெரிய சைஸ் கரண்டியுடன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த பெண். இந்த புகைப்படம் எடுத்த பிறகு 7,200 முட்டைகளை பயன்படுத்தி பெரிய ஆம்லேட் சமைத்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

  © LookDontTouch / imgur

  விளையாட்டு!

  விளையாட்டு!

  இப்போதெல்லாம் விளையாட கிரவுண்ட் போக சொன்னாலே வீட்டில் இருந்து குழந்தைகள் நகர்வதில்லை. அம்மா, அப்பா என்று வாயில் வார்த்தை வரும் முன்னரே, ஒரு வயதில் இருந்து ஸ்மார்ட் போன் பயன்படுத்த பழகிவிட்டனர். இன்றைய குழந்தைகளுக்கு தெரிந்தது எல்லாம் கூகுல் ப்ளே ஸ்டாரும், ஆப்பிள் ஸ்டாரும் தான். ஆனால், அன்று பாருங்களேன். முதல் மாடியில் இருந்து கீழ் தளத்தில் அமைத்து வைக்கப்பட்ட மெத்தைகள் மீது குதித்து விளையாடி இருக்கிறார்கள் குழந்தைகள். இது இன்றைய குழந்தைகளுக்கு அபத்தமாக தான் தெரியும். ஆனால், அன்று இவை எல்லாம் வீரதீர விளையாட்டுகள்.

  © Sefton Samuels / books.google

  குழந்தைகள் படம்!

  குழந்தைகள் படம்!

  இன்று ஒரு சிகரட் பாக்கெட் வாங்க சென்றால், அதன் முக்கால்வாசி பகுதியில் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்ட ஒரு பெரிய சைஸ் படம் தான் அச்சிடப்பட்டிருக்கும். அதன் விளைவு பார்த்தும் கூட, பலரும் அசால்ட்டாக சிகரட் வாங்கி தினமும் பிடித்து தான் வருகிறார்கள். ஆனால், சென்ற நூற்றாண்டில் சிகரட் விளம்பரத்தில் குழந்தைகளின் படங்களை எல்லாம் அச்சிட்டு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். என்ன கொடுமை சரவணா இது!

  © Joe Wolf / flickr

  பேபி கார் சீட்!

  பேபி கார் சீட்!

  நிச்சயம் இந்த படத்தை பார்த்தவுடன், பலருக்கும், இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், அப்பா, தாத்தாவுடன் சைக்கிள் பாரில் குட்டி சீட்டில் உட்கார்ந்து பயணித்த நினைவுகள் நியாபகம் வந்திருக்கலாம். ஆஹா... அதுவொரு அழகான காலம். என்ன தான் இன்று கே.டி.எம்., பல்சர், எவன்ஜர், ராயல் என்ஃபீல்டு என பெரிய, பெரிய பைக் ஓட்டினாலும், அந்த பயணம் நமக்களித்த சுகத்தை பெற இயலாது.

  © RUAUMOKO / reddit

  குகை மனிதன்!

  குகை மனிதன்!

  1964ல் வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவில் நடந்த நியூயார்க் வேர்ல்டு ஃபேர் நிகழ்வில் பங்குபெற்ற பிரபலமான சித்தரிக்கப்பட்ட தானாக இயங்கும் குகை மனிதன் உருவம். அதை டிஸ்னி ஸ்டூடியோவில் வேலை செய்து வந்த வேலையாட்கள் இருவர் தயாரித்து வந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

  © modernmechanix.com

  அடிமை!

  அடிமை!

  கடந்த நூற்றாண்டில் இது மிகவும் சாதாரணமான புகைப்படம். வெள்ளையர்கள் என்றால் எஜமானர்கள், கருப்பர்கள் என்றால் அடிமைகள் என்ற சட்டத்தை பின்பற்றி வந்த காலம் அது. மனிதனாக இருந்தாலும், அவர்களை அடிமை என்ற பெயரில் நாய், ஆடு, மாடு போல தான் வேலை வாங்கி வந்தார்கள்.

  © leieordem.com.br

  கைவுறை!

  கைவுறை!

  முன்பெல்லாம் டைப்பிஸ்ட் என்ற வேலை இருந்தது. டைப் ரைட்டிங் தெரிந்திருந்தால் போதும் ஒரு நிலையான ஊதியம் கிடைக்கும் மாதவேலை கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. பொண்ணுக்கு என்னங்க தெரியும் என்று கேட்டால்... டைப் ரைட்டிங் தெரியும் என்று கெத்தாக கூறுவார்கள்.

  இதோ! அமெரிக்காவில் 1961ல் டைப் ரைட்டிங் எளிமையாக கற்க பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட கைவுறை!

  © reddit

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Ridiculous Things That Completely Normal in 1930s!

  You would not believe, but these absurd things are totally normal in 19th century. People have believed and followed so many ridiculous things!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more