For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இப்படியுமா வாழ்ந்தனர் சென்ற நூற்றாண்டு மக்கள்...? வியப்பூட்டும் ஆரியப் புகைப்படங்கள்!

  |

  நாம் வாழ்வில் எதை சேமிக்க வேண்டும்? பணமா? நகையா? வீடுகளா? நிலமா? இவை அனைத்தும் சொத்தாக நம் பெயரில் இருக்கலாமே தவிர, நம் மனதில் நிறைவான நிம்மதியை ஏற்படுத்தாது. உண்மையில் நாம் நிறைய சேமிக்க வேண்டியது நல்ல நினைவுகளை, உறவுகளை, சொந்தங்களை தான்.

  அதிக பட்சமாக ஐம்பது வயது வரை நாம் பணத்தை ஓடி, ஓடி சேமிக்கலாம். ஆனால், அதன் பிறகு ஓய்ந்து போய் ஒரு நாற்காலியில் அமரும் போது, நாம் வந்த பயணத்தில் பெற்ற அனுபவமும், ஏற்படுத்திக் கொண்ட நினைவுகள் மட்டுமே நம்மருகே அமர்ந்திருக்கும். இன்று நாம் சம்பாதித்த பணம், நாளை வேறொருவர் கைகளில் தவழும். ஆனால், நாம் சேமித்த நினைவுகள், சொந்தங்கள் மட்டுமே எந்நாளும் நம்முடனே நீடிக்கும்.

  Rare Photos From The Past That You Won’t Find In History Books!

  All Image Source: boredomtherapy

  நினைவுகளை சேமிக்க நல்ல தோழன் புகைப்படம். ஊடக துறையில் பிரபலமான பழமொழி ஒன்று இருக்கிறது, 'ஒரு புகைப்படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்' என்பார்கள். நடந்த நிகழ்வை அந்த உணர்ச்சியுடன் கூற வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற, தகுந்த நல்ல உவமைகள் மற்றும் வார்த்தைகள் தேவை. அப்படியே இருந்தாலும், அது அனைவரிடமும் அதே உணர்ச்சி பிழம்புடன் சென்றடையுமா என்பது சந்தேகம் தான். ஆனால், புகைப்படம் எந்த நிகழ்வாக இருந்தாலும், அதே உணர்ச்சியுடன் பதிவு செய்யும் கருவி.

  பாடமாக இருக்கட்டும், சாதனையாக இருக்கட்டும், புதுமையாக இருக்கட்டும், உறவுகள், காதல், நேசம், கண்டுபிடிப்பு எதுவாக இருந்தாலும்.. அதனை சேமித்து, வரலாற்றில் அனைவர்க்கும் எடுத்துரைக்கும் பொக்கிஷம் புகைப்படங்கள்.

  அந்த வகையில்... பெரும்பாலும் நீங்கள் எந்தவொரு வரலாற்று புத்தகங்களிலும் பார்த்திடாத சென்ற நூற்றாண்டில் நடந்த சில அரிய விஷயங்களை தன்னுள் பத்திரமாக வைத்திருக்கும் புகைப்படங்களை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  உலகின் முதல் தாமி(அதாங்க செல்ஃபி) என கருதப்படும் புகைப்படம்... எடுக்கப்பட்ட ஆண்டு (1839)

  Image Source: boredomtherapy

  #2

  #2

  1900களில் புகைப்படம் எடுக்க, எடுக்க.. இடையே திடீரென என தும்மல் வந்ததால் இந்த படம் இப்படியாகிவிட்டது...

  Image Source: boredomtherapy

  #3

  #3

  20ம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில்"knocker-up" என்று ஒரு வேலை இருந்தது. இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை வந்து எழுப்பிவிட்டு செல்வார்கள்.

  Image Source: boredomtherapy

  #4

  #4

  7ம் எட்வார்ட் அரசர் மறைவின் போது இரங்கலுக்கு வந்திருந்த, ஒன்பது நாட்டு அரசர்கள் (Norway, Bulgaria, Portugal, the German Empire, Greece, Belgium, Spain, Great Britain, and Denmark.).

  Image Source: boredomtherapy

  #5

  #5

  தற்போது பவுலிங் விளையாட்டு முழுக்க இயந்திரமயமாகிவிட்டது. அப்போது,Pin boys என சிலர் இருப்பார்கள். அவர்கள் மேனுவலாக வீழ்த்தப்படாதவற்றை எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

  Image Source: boredomtherapy

  #6

  #6

  குடிகார கணவர்களை எச்சரித்து போராட்டம் நடத்திய வீர மங்கைகள் கூட்டம்...

  Image Source: boredomtherapy

  #7

  #7

  மொபைல் கோர்ட் பார்த்திருப்பீங்க.. இது மொபைல் சிறை.. ஹார்லி டேவிட்சன் பைக்கில் கைதியை மொபையில் சிறையில் அடைத்து அழைத்து செல்லும் காவலர்.

  Image Source: boredomtherapy

  #8

  #8

  அப்பவே போட்டோ ட்ரிக்ஸ் பயன்படுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்...

  Image Source: boredomtherapy

  #9

  #9

  1922ம் ஆண்டு அழகிப் போட்டியில் வென்ற பெண்மணிகள்...

  Image Source: boredomtherapy

  #10

  #10

  1920களில் நீச்சலடிக்க வரும் பெண்களின் ஷார்ட்ஸ் உடை, மிகவும் குட்டியாக இருக்கிறதா என்று அளந்து பார்க்கும் ஆண்.

  Image Source: boredomtherapy

  #11

  #11

  1923ல் பழங்கால zipline விளையாட்டை ஜோடியாக விளையாடி மகிழும் தம்பதி...

  Image Source: boredomtherapy

  #12

  #12

  இந்த கருவி பெயர் ஐசோலேட்டர், இதை அணிந்துக் கொண்டார் எந்த ஒரு தொல்லையும் இல்லாமல், தங்கள் வேலையில் கவனம் செலுத்தலாம். பாருங்களேன்.. என்னென்ன எல்லாம் யோசிச்சிருக்காங்க...

  Image Source: boredomtherapy

  #13

  #13

  சூரிய ஒளியில் இருந்து முகம் கருக்காமல் இருக்க.. இந்த நீச்சல் குள மாஸ்க்.

  Image Source: boredomtherapy

  #14

  #14

  கண்ணாடி முன் நின்று, தான் பேசவிருக்கும் உரையை பேசி பயிற்சி செய்யும் ஹிட்லர்...

  Image Source: boredomtherapy

  #15

  #15

  லாஸ் ஏஞ்சல் நகரில் உடல்நலம் குன்றி இருக்கும் நபர்களுக்கு என ஒரு நடமாடும் சிறிய லைப்ரரி...

  Image Source: boredomtherapy

  #16

  #16

  பென்குயினை குளிர்ந்த நீரால் குளிப்பாட்டும் பாதுகாவலர்...

  Image Source: boredomtherapy

  #17

  #17

  93 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஒன்றை சக்கர பைக்..

  Image Source: boredomtherapy

  #18

  #18

  ஆர்மி க்ளப் சிகரட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்த பூனையின் விசித்திரமான புகைப்படம்...

  Image Source: boredomtherapy

  #19

  #19

  லண்டனின் டபிள் டெக்கர் பேருந்துகள்...

  Image Source: boredomtherapy

  #20

  #20

  போர் காலத்தில் குழந்தைகளுடன் சோகமான அமர்ந்திருக்கும் தாய்... இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படமாக கருதப்படுகிறது...

  Image Source: boredomtherapy

  #21

  #21

  ஆரம்பக் கால ஜி.பி.எஸ்...

  Image Source: boredomtherapy

  #22

  #22

  பழங்கால டி-எலிவேட்டர் காரேஜ்... இடம்: சிகாகோ

  Image Source: boredomtherapy

  #23

  #23

  சிகரெட்டை பகிர்ந்துக் கொள்ளும் சால்வடார் டலி மற்றும் கொக்கோ சேனல்

  Image Source: boredomtherapy

  #24

  #24

  தையல் மெஷினுடன் கொண்ட நால்வர் பயணிக்கும் திறன் கொண்ட குடும்ப சைக்கிள்...

  Image Source: boredomtherapy

  #25

  #25

  உலகப்போர் வெடிக் குண்டு தாக்குதல் போது லண்டன் நகரில் காற்றில் விஷத்தன்மை அதிகரித்தது. அப்போது பிறந்த குழந்தை முதல், அனைவரும் இந்த மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்...

  Image Source: boredomtherapy

  #26

  #26

  இரண்டாம் உலகப்போருக்கு தயாராகி கிளம்பிய கப்பற்படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட தி லாஸ்ட் கிஸ்...

  Image Source: boredomtherapy

  #27

  #27

  ரஷ்ய இராணுவ வீரர்களுடன் சேர்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாய்...

  Image Source: boredomtherapy

  #28

  #28

  தனக்கு புதிய ஷூ கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தமாய் புன்னகைக்கும் ஆஸ்திரேலிய சிறுவன்...

  Image Source: boredomtherapy

  #29

  #29

  தேன் குடித்துக் கொண்டிருக்கும் குட்டி கரடி...

  Image Source: boredomtherapy

  #30

  #30

  ஆண் போல வேடமிட்ட நாய், அதன் மடியில் ஒரு பூனை...

  Image Source: boredomtherapy

  #31

  #31

  ஆபீஸ்ல ஐஸ் டீ குடிச்சிருப்பீங்க... இங்க பார்த்தீங்களா ஐஸ் விஸ்கி...

  Image Source: boredomtherapy / LIFE

  #32

  #32

  மிஸ் அடாமிக் பாம் அழகி (1950)

  Image Source: boredomtherapy

  #33

  #33

  இயல்பான உடையில் லைப்ரரியில் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கும் ஆப்கான் பெண்கள்.. 1950களில்...

  Image Source: boredomtherapy

  #34

  #34

  பால் மெக்கார்ட்னி எடுத்த முதல் மிரர் செல்ஃபி.. ஆண்டு 1959

  Image Source: boredomtherapy

  #35

  #35

  திருமண விழாவில் பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமாக குழுமியிருந்த இளம் பெண்கள்...

  Image Source: boredomtherapy

  #36

  #36

  ஆபிரகாம் லிங்கன் மெமோரியல் சிலையை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ...

  Image Source: boredomtherapy

  #37

  #37

  ஒரு டிவி நிகழ்சிக்காக நாய்க்கு சவரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்...

  Image Source: boredomtherapy

  #38

  #38

  வீட்டில் இருக்கும் எலிகளை விரட்ட, ஜப்பானியர்கள் கண்டுபிடித்த மியாவ் பூனை மெஷின் (1963)

  Image Source: boredomtherapy

  #39

  #39

  தனது செல்லபிராணி இராலுடன் வாக்கிங் செல்லும் பெண்மணி...

  Image Source: boredomtherapy

  #40

  #40

  1963ல் ஜூனியர் மார்டின் லூதர் கிங்கின் "I Have a Dream" பேச்சை கேட்க வந்திருந்த இளம் ஆப்ரிக்க சிறுவன்...

  Image Source: boredomtherapy

  #41

  #41

  1963ல் புழக்கத்தில் இருந்த டிவி கிளாஸ். இது பலரும் அறியாத கருவியாகும்...

  Image Source: boredomtherapy / LIFE

  #42

  #42

  வேலையின் போது ஷாக் அடித்து மயங்கிய நபருக்கு சி.பி.ஆர் முதலுதவி செய்யும் சக ஊழியர்...

  Image Source: boredomtherapy

  #43

  #43

  ஸ்வீடனில் குடும்பத்துடனான ஒசாமா பின்லேடனின் இளமைக் கால புகைப்படம் (பச்சை சட்டை அணிந்திருப்பவர்)

  Image Source: boredomtherapy

  #44

  #44

  பனிப்புயலில் இருந்து தற்காத்து கொள்ள இந்த பிளாஸ்டிக் கோன் மாஸ்க்...

  Image Source: boredomtherapy

  #45

  #45

  பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் இளமை காலத்து புகைப்படம்...

  Image Source: boredomtherapy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Rare Photos From The Past That You Won’t Find In History Books!

  Rare Photos From The Past That You Won’t Find In History Books!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more