For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பாட்டி வயது பெண்ணுடன் ஒசாமா பின்லேடன் மகன் செஞ்ச காரியத்த பாருங்க...

  By Staff
  |

  சரியாக அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் இறந்து ஏழு வருடங்கள் ஆகிறது. இரட்டை கோபுரம் அசம்பாவித நிகழ்வில் ஈடுபட்டதில் இருந்து அமெரிக்காவால் மோஸ்ட் வாண்டட் கிரிமினல் என தேடப்பட்ட ஒசாமாவை கடந்த மே 2, 2011 அன்று கொன்றனர்.

  உலகையே நடுங்க செய்த தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமாவின் மகன் தான் ஓமர் பின்லேடன். ஒசாமா இறப்பதற்கு முன் ஏழு வருடங்களாகவே ஓமர் ஒசாமாவை பார்க்காமல் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். ஓமர் ஸ்கிராப் டீலராக தொழில் செய்து வருகிறார்.

  ஓமர் கடந்த 2007ம் ஆண்டில் தன்னைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வயதான பெண்ணை திருமணம் செய்து பலரை வியக்க வைத்தார். ஓமர் அந்த பெண்ணை திருமணம் செய்த போது, அந்த பெண்ணின் வயது ஓசாமாவை விட ஓரிரு வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  25 வயது...

  25 வயது...

  2007ல் ஓமர் மற்றும் ஜேன் என்கிற ஜைனா திருமணம் செய்துக் கொண்ட போது, ஜைனா ஓமரை காட்டிலும் 25 வருடம் வயது மூத்தவராக இருந்தார்.

  அப்போது ஜைனா ஒசாமா பின்லேடனை காட்டிலும் ஒரு வயது மூத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது பிரிட்டிஷ் ஊடகங்களில் 27 வயது ஓமர் 51 வயது ஜைனா எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் என செய்திகள் வெளியாகின.

  Image Source:

  காதல்!

  காதல்!

  ஜைனா பிரிட்டனை சேர்ந்தவர். இவர் எகிப்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களை கொண்டாட சென்ற பொது தான் முதன் முறையாக ஓமரை கண்டுள்ளார். அப்போது ஓமர் மற்றும் ஜைனா இடையே காதல் மலர்ந்துள்ளது.

  ஜைனா ஒருமுறை பேட்டியில், ஓமர் போன்ற ஒரு அழகான ஆணை நான் இதற்கு முன் கண்டதில்லை. அவர் மிகவும் நேர்மையான, நல்ல குணம் படைத்த ஆண் என்று கூறியிருந்தார்.

  Image Source:

  விசா மறுப்பு!

  விசா மறுப்பு!

  ஓமரை திருமணம் செய்து கொண்ட பிறகு ஜைனா எனும் தனது பெயரை இஸ்லாம் மதத்திற்கு மாறி, சீனா மெஹ்மூத் என்று மாற்றிக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஜைனாவும், ஓமரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். காரணம் ஜைனா பிரிட்டனை சேர்ந்தவர் மற்றும் ஓமர் கத்தாரில் வாழ்ந்து வந்தார்.

  ஜைனா ஓமருக்கு பிரிட்டிஷ் விசா பெற பலமுறை முயற்சி செய்தார். ஆனால், ஓமரின் குடும்பத்தின் பின்னணி காரணத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஆகையால், இவர்கள் இருவரும் நிறைய நாட்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட் மூலமாகவே தொடர்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டது.

  Image Source:

  பிரிவு...?

  பிரிவு...?

  2010ம் ஆண்டு ஓமர் மற்றும் ஜைனா இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து நான்கு முறையும் செயற்கை கருவூட்டல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதில் ஒருமுறை இரட்டையர் கருவூட்டல் கரு கலைந்தது.

  லூயிஸ் என்ற பெண் ஓமர் - ஜைனாவின் இரட்டையர் கருவுடன் பத்து மாத கர்ப்பிணியாக இருந்த போது, பெயர் தெரியாத இரண்டு ஆண்களால் காபி ஷாப்பில் தாக்கப்பட்டு லூயிஸிற்கு கருக்கலைப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.

  Image Source:

  விவாகரத்து!

  விவாகரத்து!

  இந்த தருணத்தில் தான் ஓமர், ஜைனா விவாகரத்து செய்துக் கொள்ள போகிறார்கள் என்ற செய்து ஊடகங்களில் வெளியாகின. ஜைனாவும் ஓமருக்கு மனநல குறைபாடு இருக்கிறது. அவருடன் சேர்ந்து வாழ இயலாது என்று கூறுகிறார்கள் என செய்திகள் வெளியாகின.

  ஓமருக்கும் ஜைனாவிற்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்தன. முக்கியமாக ஓமர் செயற்கை கருவூட்டல் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. மேலும், ஓமரின் தாயே ஜைனாவை விவாகரத்து செய்ய வற்புறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஓமரை ஜைனா திருமணம் செய்த போது, அவருக்கு மூன்று மகன்கள், ஐந்து பேரக்குழந்தைகள் இருந்தனர். மேலும், ஜைனா ஓமரை ஆறாவதாக திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஓமரும் ஜைனாவை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார்.

  Image Source:

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Osama Bin Ladens Son Umer Married and Divorced Woman Who Has Five Grand Children

  Al-Qaeda’s chief Osama Bin Laden's son Umer Married and then Divorced Woman Who Has Five Grand Children.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more